எம். மோசஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். மோசஸ் (M. Moses) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்திற்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1971 ஆம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியில் இருந்து சுதந்திரா கட்சி வேட்பாளராகவும்[1] 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராகவும்,[2][3] 1996ஆம் ஆண்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளராகவும்[4] போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைவு[தொகு]

இவர் வயது முதிர்வு காரணமாக, திசம்பர் 17, 2021 அன்று காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._மோசஸ்&oldid=3545877" இருந்து மீள்விக்கப்பட்டது