உள்ளடக்கத்துக்குச் செல்

எம். மகாலிங்கம் (மலேசியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். மகாலிங்கம்
M. Mahalingam
மஇகா தேசியப் பொருளாளர்
பதவியில்
2000–2008
பின்னவர் எஸ். கே. தேவமணி
மலேசிய மனிதவள துணை அமைச்சர்
பதவியில்
1993–1995
முன்னையவர் கு. பத்மநாபன்
பின்னவர் அப்துல் காதிர் சேக்
காப்பார் மக்களவைத் தொகுதி
பதவியில்
1990–1995
முன்னையவர் டி. பி. விஜேந்திரன்
பின்னவர் லீலாவதி கோவிந்தசாமி
பெரும்பான்மை6,227 (1990)
அசாம் ஜாவா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1982–1986
முன்னையவர் என். எஸ். மணியம்
பின்னவர்தொகுதி சீரமைப்பு
செரி சகாயா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1986–1990
முன்னையவர் என். எஸ். மணியம்
பின்னவர் கே. சிவலிங்கம்
பெரும்பான்மை6,227 (1986)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புM. Mahalingam s/o Muthukrishnan; 1935, பூச்சோங், சிலாங்கூர்
இறப்பு16 ஆகத்து 2021 (வயது 86)[1]
அரசியல் கட்சி மலேசிய இந்தியர் காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
பாரிசான் நேசனல்
துணைவர்புவான் செரி இலட்சுமி தேவி[1]
பணிஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்

டான் செரி டத்தோ எம். மகாலிங்கம் (ஆங்கிலம்; மலாய்: M. Mahalingam) என்பவர் மலேசிய அரசியல்வாதி, வழக்கறிஞர் ஆவார். 1982 முதல் 1986 வரை சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில், அசாம் ஜாவா சட்டமன்ற உறுப்பினர்; 1986 முதல் 1990 வரை செரி சகாயா சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்; 1990 முதல் 1995 வரை காப்பார் மக்களவைத் தொகுதி உறுப்பினர்; 1993 முதல் 1995 வரை மலேசிய மனிதவள துணை அமைச்சர்; 2000 முதல் 2008 வரை மஇகா தேசியப் பொருளாளர்; ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

1980-களில், மலேசிய நாடாளுமன்றத்தில் அவர் மலேசிய மேலவை உறுப்பினராகவும் (செனட்டர்) சிறிது காலம் பதவி வகித்துள்ளார். எம். மகாலிங்கம் அவர்கள் மஇகா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். மஇகா கட்சியின் தேசியப் பொருளாளராக நீண்ட காலம் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் 1982-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தின் அசாம் ஜாவா சட்டமன்றத் தொகுதியில் மலேசிய இந்தியர் காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் பின்னர் 1986-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், செரி சகாயா சட்டமன்றத் தொகுதியில் மஇகாவின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் அவர் 3,224 வாக்குகள் பெரும்பான்மையில் 5,210 வாக்குகளைப் பெற்றார். அதே வேளையில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட மலேசிய தேசியவாத கட்சியின், ராஜா நசுரோன் ராஜா இசாக் (Raja Nasron Raja Ishak) 1,986 வாக்குகளையும்; ஜனநாயக செயல் கட்சியின் பி. சின்னையா 1,069 வாக்குகளையும் பெற்றனர்.

பொது

[தொகு]

1935-ஆம் ஆண்டில் சிலாங்கூர், பூச்சோங்[2] பகுதியில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த டான் செரி எம். மகாலிங்கத்தின் தந்தையின் பெயர் முத்துக்கிருஷ்ணன். மகாலிங்கம் அவர்கள் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், மலேசிய இந்தியர் சமூகத்தின் மேம்பாட்டிற்காகப் பல்வேறு சமூகப் பணிகளையும் ஆற்றியுள்ளார். மலேசிய மனிதவள துணை அமைச்சராக இருந்தபோது, தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பணிச்சூழல் மேம்பாட்டிற்காகப் பல நடவடிக்கைகளை எடுத்தார்.

ஒரு வழக்கறிஞராகவும் பணிபுரிந்த இவர், வசதி குறைந்த இந்தியத் தொழிலாளர்களுக்குச் சட்ட ரீதியான கருத்துகளையும் உதவிகளையும் வழங்கினார். மஇகா (MIC) கட்சியின் மூத்த தலைவராக இருந்தபோது, ஏழை இந்திய மாணவர்களின் உயர்கல்விக்கான உதவித்தொகை; மற்றும் கடனுதவிகள் கிடைப்பதை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றினார்.

சமூகப் பணிகள்

[தொகு]

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும்,[2] புதிய கட்டிடங்கள் அமைப்பதற்கும் அரசாங்க மானியங்களைப் பெற்றுத் தர உதவினார்.

இந்தியர் சமூகத்தின் பொருளாதார வலிமையை அதிகரிக்க, மஇகா-வின் கீழ் செயல்பட்ட பல்வேறு கூட்டுறவு அமைப்புகளில் இணைந்து ஏழை மக்களுக்கான முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கினார். சிலாங்கூர் மாநிலத்தில், குறிப்பாக காப்பார் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் சமூக நல அமைப்புகளின் வளர்ச்சிக்குத் தீவிரமாக ஆதரவளித்தார்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
சிலாங்கூர் மாநிலத் தேர்தல் 1986
செரி சகாயா சட்டமன்றத் தொகுதி
வேட்பாளர்கட்சிவாக்குகள்%
எம். மகாலிங்கம்பாரிசான் நேசனல்5,21063.04
ராஜா நசுரோன் ராஜா இசாக்மலேசிய தேசிய கட்சி1,98624.03
பி. சின்னையாஜனநாயக செயல் கட்சி1,06912.93
மொத்தம்8,265100.00
செல்லுபடியான வாக்குகள்8,26595.72
செல்லாத/வெற்று வாக்குகள்3704.28
மொத்த வாக்குகள்8,635100.00
பதிவான வாக்குகள்11,8128,635
Majority
      பாரிசான் நேசனல் கைப்பற்றியது

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Former Malaysian Indian Congress (MIC) Treasurer Tan Sri M. Mahalingam passed away at 12.45 pm". Makkal Osai. Retrieved 29 April 2026.
  2. 1 2 "Tan Sri Dato' M.Mahalingam was born in Puchong and was a great grassroot leader for the MIC, serving as Vice President, deputy minister, senator and two-time MP, was appointed treasurer-general in 2000 by Tun Samy Vellu.". Facebook. Retrieved 29 April 2026.
  • Who's who in Malaysia and guide to Singapore. (1978). Kuala Lumpur.

நூல்கள்

[தொகு]
  • Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
  • Anzagain Sdn. Bhd. (2004). Almanak keputusan pilihan raya umum: Parlimen & Dewan Undangan Negeri, 1959-1999. Shah Alam, Selangor: Anzagain.
  • Surohanjaya Pilehanraya Malaysia. (1972). Penyata pilehanraya umum Dewan Raʻayat dan Dewan Undangan Negeri bagi Negeri² Tanah Melayu, Sabah dan Sarawak, tahun 1969. Kuala Lumpur: Jabatan Chetak Kerajaan.
  • Ibnu, H. (1993). PAS kuasai Malaysia?: 1950-2000 sejarah kebangkitan dan masa depan. Kuala Lumpur: GG Edar.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._மகாலிங்கம்_(மலேசியா)&oldid=4526748" இலிருந்து மீள்விக்கப்பட்டது