உள்ளடக்கத்துக்குச் செல்

எம். பசவபுன்னையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். பசவ புன்னையா ( Makineni Basavapunnaiah 14 திசம்பர் 1914 – d: 12 ஏப்பிரல் 1992) இந்திய அரசியலாளர் மற்றும் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் ஆவார்.

இவர் பொதுவுடைமைக் கட்சியின் பொலிட்புரோ வில் உறுப்பினராக இருந்தார். மக்கள் சனநாயகம் என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார்.[1] இவர் 14 ஆண்டுகள் இந்திய மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

குண்டூர் மாவட்டத்தில் தூர்புபலம் என்ற கிராமத்தில் பிறந்தார்.. அந்தச் சிற்றுரிலும் பின்னர் குண்டூர் ஆந்திர கிறித்தவ கல்லூரியில் 1936 இல் பட்டம் பெற்றார் 1930 களின் தொடக்கத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் 1934 இல் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்தார்.[2]

கட்சியில் செயற்பாடுகள்

[தொகு]

குண்டூர் மாவட்டத்தில் பொதுவுடைமைக் கட்சியின் செயற்பாட்டாளராகவும் பின்னர் ஆந்திரப் பிரதேச மாநிலக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட செயலாளராகவும் பணியாற்றினார். 1948 இல் கட்சியின் நடுவண் குழுவிலும், 1950 இல் கட்சியின் பொலிட்புரோவிலும் இடம் பெற்றார் தெலுங்கானா கலகத்தில் கலந்துகொண்டார். 1950 இல் இவர் ஜோசப் ஸ்டாலினைக் கமுக்கமாகச் சந்தித்து தெலுங்கானா கலக நடவடிக்கை பற்றி ஆலோசனை பெற்றார்

மேற்கோள்

[தொகு]
  1. Basavapunnaiah Makineni, Luminaries of 20th Century, Part I, Potti Sriramulu Telugu University, Hyderabad, 2005, pp: 375.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2017-12-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பசவபுன்னையா&oldid=3545853" இலிருந்து மீள்விக்கப்பட்டது