எம். நர்மதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். நர்மதா தமிழகத்தைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவர், வயலின் கலைஞர் எம். எஸ். கோபாலகிருஷ்ணனின் மகளாவார்.

இசைப் பணி[தொகு]

தனது 5 வயது முதல் வயலின் வாசிப்புப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட நர்மதா, தன் தந்தையாரின் இசை நிகழ்ச்சிகளில் துணையாக வயலின் வாசித்துள்ளார். இந்துத்தானி இசையிலும் இவர் பயிற்சி பெற்றுள்ளார். தனிக் கச்சேரிகளாகவும், வாய்ப்பாட்டிற்கு பக்கவாத்தியமாகவும் வயலின் வாசித்து வருகிறார்.

ஸ்கைப் எனும் கணினி தொழில்நுட்பத்தின் மூலமாக மாணவர்களுக்கு வயலின் கற்றுத் தருகிறார்.

உசாத்துணை[தொகு]

  • 'மேடையில் சமரசமே இல்லை' எனும் கட்டுரை (சங்கீத வாரிசுகள் எனும் தொகுப்பின்கீழ்), பக்கம் எண்கள்: 23 & 24; வெளியீடு: தினமணி - இசை விழா மலர் (2008 - 2009)
  • 'டாக்டர் எம். நர்மதா' எனும் கட்டுரை (கணினி மூலம் இசை கற்க முடியுமா? எனும் தொகுப்பின்கீழ்), பக்கம் எண்: 35; வெளியீடு: தினமணி - இசை விழா மலர் (2013 - 2014)
  • Dr. M. Narmadha - Violinists, Tamil Nadu, India

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._நர்மதா&oldid=2715817" இருந்து மீள்விக்கப்பட்டது