எம். டி. பல்லவி
| எம். டி. பல்லவி | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| இசை வடிவங்கள் | சுகம சங்கீதம் |
| தொழில்(கள்) | பாடகர் |
| இசைத்துறையில் | 2000–முதல் |
பல்லவி அருண் என்ற எம். டி. பல்லவி (M. D. Pallavi), இந்தியாவின் கருநாடகாவைச் சேர்ந்த ஒரு பாடகி ஆவார்.[1] இவர் ஒரு கன்னட சுகம சங்கீதப் பாடகியும், (பின்னணிப் பாடகி) தொலைக்காட்சி நடிகையும் ஆவார். இவர் ஒரு தாள வாத்தியக் கலைஞரான அருணை மணந்தார்.[2] சங்கீத நாடக அகாதமியால் வழங்கப்பட்ட 2018 உசுதாத் பிசுமில்லா கான் யுவ புரசுகார் விருது பெற்றவர்.[3] 2007ஆம் ஆண்டு வெளியான துனியா திரைப்படத்தில் பாடிய "நோடையா குவாடே லிங்கவே" பாடலுக்காக 2006, 2007ஆம் ஆண்டுகளில் சிறந்த பின்னணிப் பாடகிக்கான கருநாடக மாநில திரைப்பட விருதுகளை வென்றார்.[4]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]பல்லவி ஒரு கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது கொள்ளுத்தாத்தா, ஏ. என். சுப்பாராவ், ஓர் ஓவியர் ஆவார். இவர் இந்தியாவின் முதல் நுண்கலை பள்ளியான கலாமந்திர் நுண்கலை பள்ளியை பெங்களூரில் தொடங்கினார். இவரது தாத்தா ஏ. எஸ். மூர்த்தி, வானொலி எரண்ணா என்று அழைக்கப்பட்டார்.[2][5]
இசை
[தொகு]எம். டி. பல்லவி இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பயிற்சி பெறத் தொடங்கினார். மேலும் பனாரசு பல்கலைக்கழகத்தில் இந்துஸ்தானி இசையில் பட்டம் பெற்றார்.[6] மைசூர் அனந்தசாமியிடமிருந்து சுகம சங்கீதத்தில் பயிற்சி பெற்றார்.[7] பல்லவி பெங்களூரில் ராம் ராவ் நாயக் மற்றும் குவாலியர் கரானாவின் டோயன் ராஜ்பாவ் சொன்டாக்கே ஆகியோரின் கீழ் இந்துஸ்தானிய குரல் பயிற்சி பெற்றுள்ளார்.[8][9][10]
நடிப்பு
[தொகு]தொலைக்காட்சி, திரைப்படம்
[தொகு]பல்லவி தொலைக்காட்சியில் மாயம்ருகா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். இவர் பிரபலமான கன்னடத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான கர்வாவிலும் நடித்துள்ளார். இவர் ஆர்யபட்டா "சிறந்த நடிகை" விருதை வென்றார். 2003ஆம் ஆண்டு வெளியான இந்திய ஆங்கில மொழித் திரைப்படமான இசுடம்பிள் படத்தில் இவர் நடித்திருந்தார். இந்தப் படம் 2002ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆங்கிலத் திரைப்படப் பிரிவில் தேசிய விருதை வென்றது.[11] தேசிய விருது பெற்ற கன்னடப் படமான குலாபி டாக்கீசிலும் உமாஸ்ரீயுடன் இணைந்து நடித்தார்.[12]
பின்னணிப் பாடல்கள்
[தொகு]எம். டி. பல்லவி பாடிய குறிப்பிடத்தக்கப் பாடல்கள் இடம்பெற்ற படங்களின் பட்டியல்.
| ஆண்டு | திரைப்படம் |
|---|---|
| 2000 | ஸ்ரீயஸ்து சுபமஸ்து |
| 2003 | சிங்காராவ்வா |
| 2007 | துனியா |
| 2009 | சங்கடத்தில் வெங்கடா |
| எட்டேலு மஞ்சுநாதா | |
| ஜங்லீ | |
| 2010 | பைத்தியக்கார குடும்பா |
| ஹோலி | |
| நூரு ஜன்மகு | |
| பன்னி | |
| தில்தார் | |
| இஜ்ஜோடு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Play it again, Pallavi". The Hindu. 29 June 2004. Archived from the original on 26 August 2004. Retrieved 13 April 2010.
- ↑ 2.0 2.1 "Melodious musing". Deccan Herald (in ஆங்கிலம்). 2015-10-10. Retrieved 2023-03-14.
- ↑ "Winners of 2018 Ustad Bismillah Khan Yuva Puraskar announced". www.outlookindia.com/. Retrieved 2021-03-27.
- ↑ "State cine awards: Mungaru Male sweeps six awards". Deccan Herald. 20 July 2007. Archived from the original on 7 October 2011. Retrieved 13 April 2010.
- ↑ "Art school turns 100". Deccan Herald (in ஆங்கிலம்). 2019-08-27. Retrieved 2021-03-28.
- ↑ "Pallavi M D". saiamrithadhara.com. Retrieved 2021-03-27.
- ↑ "Pallavi Arun – Abhinayataranga" (in ஆங்கிலம்). Retrieved 2021-03-27.
- ↑ "Listen, watch, feel and understand". Bangalore Mirror (in ஆங்கிலம்). Apr 20, 2019. Retrieved 2021-03-28.
- ↑ "Melodious musing". Deccan Herald (in ஆங்கிலம்). 2015-10-10. Retrieved 2021-03-28.
- ↑ "Violin duo to cast a spell". The New Indian Express. 16 May 2012. Retrieved 2021-03-28.
- ↑ Stumble (2003) (in ஆங்கிலம்), retrieved 2021-03-28
- ↑ "Gulabi Talkies Awards: List of Awards won by Kannada movie Gulabi Talkies", The Times of India, retrieved 2021-03-28