எம். டி. பத்மா
எம். டி. பத்மா (M. T. Padma) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1943 ஆம் ஆண்டு சனவரி மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பிரதிநிதியாக கேரள மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
அரசியல்
[தொகு]பத்மா மாணவர் அரசியலில் தீவிரமாக இருந்தார். கேரள மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். ஆனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மீண்டும் 1987 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு கொயிலாண்டி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991–1995 ஆம் ஆண்டுகளில் மீன்வளம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சராகவும், 1995–1996 ஆம் ஆண்டுகளில் மீன்வளம் மற்றும் பதிவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.[1][2]
1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பத்மா பாலக்காடு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் என்.என். கிருசுணதாசால் தோற்கடிக்கப்பட்டார்.[3] 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வடகரா தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்திய பொதுவுடைமை கட்சி வேட்பாளர் பி. சதிதேவியால் 1,30,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார்.[4]
பின்னர் இவர் சனநாயக இந்திரா காங்கிரசின் கருணாகரன் பிரிவில் சேர்ந்தார்.[1]
2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, கோழிக்கோடு நகரக் கழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.[5]
பத்மா மும்பையில் நவம்பர் 12, 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று தனது 81 வயதில் இறந்தார்.[6][7][8][9][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 State of Kerala. M.T. Padma பரணிடப்பட்டது 27 அக்டோபர் 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Kurup, G. Radhakrishna. Politics of Congress Factionalism in Kerala Since 1982. Delhi: Kalpaz Publications, 2004. pp. 211-213
- ↑ Jose, D (6 October 1999). "UDF makes gain in Christian, Muslim belts of Kerala". Rediff. https://www.rediff.com/election/1999/oct/06kerala.htm. பார்த்த நாள்: 20 January 2019.
- ↑ Rana, Mahendra Singh. India Votes: Lok Sabha & Vidhan Sabha Elections 2001-2005. New Delhi: Sarup & Sons, 2006. p. 290
- ↑ Times of India. Council votes against bar licence for hotels
- ↑ Mathrubhumi. മുൻ മന്ത്രി എം.ടി. പത്മ അന്തരിച്ചു
- ↑ Deshabhimani. മുൻ മന്ത്രി എം ടി പത്മ അന്തരിച്ചു
- ↑ The Hindu (12 November 2024). "Former Kerala Minister and Congress leader M.T. Padma dies in Mumbai" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 19 November 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241119071649/https://www.thehindu.com/news/national/kerala/former-kerala-minister-and-congress-leader-mt-padma-dies-in-mumbai/article68859415.ece. பார்த்த நாள்: 19 November 2024.
- ↑ The Times of India (12 November 2024). "Former minister and senior Cong leader MT Padma dies in Mumbai" இம் மூலத்தில் இருந்து 14 November 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241114031919/https://timesofindia.indiatimes.com/city/kozhikode/tributes-pour-in-as-former-congress-minister-mt-padma-passes-away-at-81-in-mumbai/articleshow/115226075.cms. பார்த்த நாள்: 19 November 2024.
- ↑ The New Indian Express (13 November 2024). "Veteran Congress leader M T Padma passes away at 81" (in en) இம் மூலத்தில் இருந்து 15 November 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241115020109/https://www.newindianexpress.com/states/kerala/2024/Nov/13/veteran-congress-leader-m-t-padma-passes-away-at-81. பார்த்த நாள்: 19 November 2024.