எம். ஜெ. அக்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம். ஜெ. அக்பர்
பிறப்புசனவரி 11, 1951 (1951-01-11) (அகவை 70)
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர், இதழாளர், மாநிலங்களவை உறுப்பினர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1989–2014) பாரதீய ஜனதா கட்சி (2014–தற்போது வரை)

மொபஷர் ஜாவேத் அக்பர் (Mobashar Jawed M. J. Akbar) (பிறப்பு: 11 சனவரி 1951) இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆவார்.[1], இவர் நரேந்திரமோடியின் அமைச்சரவையில், இந்திய வெளியுறவுத் துறையில் இணை அமைச்சராக 17 அக்டோபர், 2018 வரை பணியாற்றியவர். மி டூ இயக்கத்தால் ஏற்பட்ட பிணக்கால் அமைச்சர் பதவிலிருந்து விலகினார். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் எழுத்தாளராகவும், ஊடகவியலாளராகவும், மற்றும் இதழாளராகவும் பணியாற்றியவர்.

முன்னர் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக 1989 ஆண்டுகளில் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2] பின்னர் மார்ச் 2014 இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகிய அக்பர், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, அதன் மக்கள் செய்தித் தொடர்பாளர் ஆனார். சூலை 2015 இல் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அக்பர் டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியா டுடே, தி டெக்கன் குரோனிக்கள், ஆசியன் ஏஜ் போன்ற பல செய்தித்தாள்களில் ஊடகவியலாளராக பணியாற்றியவர். மேலும் காஷ்மீர், ஜவஹர்லால் நேரு குறித்து பல நூல்களையும் இயற்றியுள்ளார்.

பிணக்குகள்[தொகு]

மி டூ இயக்கம் மூலம் பல பெண் ஊடகவியலாளர்கள், அக்பர் மீது பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து டுவிட்டரில் செய்திகள் வெளியிட்டத்தைத்[3][4][5][6][7] தொடர்ந்து தனது இணை அமைச்சர் பதவியிலிருந்து 17 அக்டோபர், 2018 அன்று விலகினார்.[8][9]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஜெ._அக்பர்&oldid=2711016" இருந்து மீள்விக்கப்பட்டது