எம். ஜெயஸ்ரீ
எம். ஜெயஸ்ரீ | |
---|---|
பிறப்பு | மைசூர், மசூர் மாநிலம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய கருநாடகம், இந்தியா) |
இறப்பு | 29 அக்டோபர் 2006[1] மைசூர், கருநாடகம் | (அகவை 84–85)
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1948 - 1996 |
எம். ஜெயஸ்ரீ (M. Jayashree) (1921 - 2006), கன்னடப் படங்களில் முக்கியமாக பணியாற்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். ராயரா சோஸ் (1957), நாகரஹாவ் (1972), எராடு கனாசு, ஸ்ரீசீனிவாச கல்யாணா உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் துணை வேடங்களில் நடித்திருந்தார்.[2]
இவர் 'வெள்ளித்திரையின் அம்மா' என்று அன்புடன் குறிப்பிடப்பட்டார். 1970இல் அமர பாரதி என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதைப் பெற்றார்.[3]
தொழில்
[தொகு]இவர் தமிழ்நாட்டின் கோயமுத்தூரிலுள்ள பட்சிராஜா ஸ்டுடியோவுக்கு அதன் உரிமையாளரான எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடுவின் சகோதரியான தேவி என்பவரால் அழைத்து வரப்பட்டார். அவர், "வாழ்வில் திருநாள்" என்ற தமிழ்ப் படத்தில் இவரை நடிக்க வைத்தார். பின்னர், இவருக்கு தமிழ் திரைப்படங்களில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.[4] இதைக்கண்ட கன்னடத் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான கொன்னப்பா பாகவதர் இவரை 1948ஆம் ஆண்டு பக்த கும்பரா எனற கன்னடத் திரைப்படத்தில் அறிமுகம் செய்தார்.[5]
கன்னடத்தில் இவரது அடுத்தத் திட்டம் 1949ஆம் ஆண்டில் வெளியான "நாககண்ணிகா" என்ற படத்தில் கதாநாயகியாக இருந்தது. ஜி. விஸ்வநாத் என்பவர் இயக்கிய இது மிகப்பெரிய வெற்றி பெற்றது.[6] இந்த படம் ஒரு நாட்டுப்புறக் கதையை அடிப்படையாகக் கொண்ட முதல் கன்னட திரைப்படமாகக் கருதப்படுகிறது.[7] 1951ஆம் ஆண்டில் திலோத்தேமை என்ற திரைப்படத்தில் தலைப்பு வேடத்தில் நடித்தார். படிப்படியாக இவர் தாய், மாமியார் போன்ற துணை வேடங்களில், ராஜ்குமார், கல்யாண் குமார், விஷ்ணுவர்தன், அம்பரீஷ், டைகர் பிரபாகர், ராஜேஷ், கங்காதர், ஸ்ரீநாத் போன்ற பலருடன் நடித்தார். தனது ஐந்து தசாப்த கால நடிப்பு வாழ்க்கையில், 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இறப்பு
[தொகு]இவர், 1990களில் இரண்டு திரைப்படங்ளில் மட்டுமே நடித்திருந்தார். கடைசியாக வெளியான இவரது திரைப்படம் சவிரா மெட்டிலு. புட்டண்ணா கனகலின் முடிக்கப்படாத இந்தப் படத்தை பின்னர் இயகுநர் கே.எஸ். எல். சுவாமி முடித்தார்.
இவர் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை மைசூரில் உள்ள ஒரு முதியோர் இல்லமான ஸ்ரீ வாசவி சாந்திதாமாவில் கழித்தார். அக்டோபர் 29, 2006 அன்று அதிகாலையில் இவர் மாரடைப்பால் இறந்தார்.[4][8]
விருதுகள்
[தொகு]- 1970-71 - ‛அமர பாரதி ' படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான கர்நாடக மாநில திரைப்பட விருது .[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chitraloka Team (30 Oct 2006). "M. Jayashree dead". Chitraloka.com. Archived from the original on 6 பிப்ரவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 21 Sep 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Naagarahavu cast and crew". Chiloka.com. பார்க்கப்பட்ட நாள் 21 Sep 2020.
- ↑ "ಹಿರಿಯ ನಟಿ ಜಯಶ್ರೀ 'ಅಮ್ಮ'ನ ಅಂತ್ಯಕ್ರಿಯೆ" (in Kannada). filmibeat.com. https://kannada.filmibeat.com/news/301006jayashri.html. பார்த்த நாள்: 21 Sep 2020.
- ↑ 4.0 4.1 "ಬೆಳ್ಳಿತೆರೆಯ ಅಜರಾಮರ ಅಭಿನೇತ್ರಿ ಎಂ. ಜಯಶ್ರೀ" (in Kannada). 12 July 2017. http://kannada.thenewsism.com/m-jayashri/. பார்த்த நாள்: 21 Sep 2020.
- ↑ "Bhakta Kumbara". nthwall.com. Archived from the original on 9 பெப்பிரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 21 செப்டெம்பர் 2020.
- ↑ B V Shiva Shankar (16 March 2007). "Sepia stories at 60". The Hindu இம் மூலத்தில் இருந்து 26 ஜூன் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070626114349/http://www.hindu.com/fr/2007/03/16/stories/2007031601760100.htm.
- ↑ "History: First folk film". Chitraloka. 21 August 2013. பார்க்கப்பட்ட நாள் 21 Sep 2020.
- ↑ 8.0 8.1 "ಹಿರಿಯ ನಟಿ ಜಯಶ್ರೀ 'ಅಮ್ಮ'ನ ಅಂತ್ಯಕ್ರಿಯೆ" (in Kannada). filmibeat.com. https://kannada.filmibeat.com/news/301006jayashri.html. பார்த்த நாள்: 21 Sep 2020."ಹಿರಿಯ ನಟಿ ಜಯಶ್ರೀ 'ಅಮ್ಮ'ನ ಅಂತ್ಯಕ್ರಿಯೆ" [Last rites of Amma M. Jayashree] (in Kannada). filmibeat.com. Retrieved 21 Sep 2020.