எம். ஜி. ஆர் - ஜெயலலிதா கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். ஜி. ஆர் - ஜெயலலிதா கோவில், இந்தியாவின், தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், டி. குண்ணத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ளது. தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் முயற்சியில், டி. குண்ணத்தூர் கிராமத்தில் நிறுவப்பட்ட இக்கோயிலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் ஆகியோரால் 30 சனவரி 2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.[1][2][3]

வரலாறு[தொகு]

தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் ஏற்பாட்டில், ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா அறக்கட்டளை சார்பாக, மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி. குன்னத்தூரில் ரூபாய் 80 கோடி செலவில் மறைந்த தமிழக முதல் அமைச்சர்களான எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு டி. குண்ணத்தூர் கிராமத்தில் கோவில் கட்டப்பட்டது. சுமார் 12 ஏக்கர் நிலபரப்பில் அமைந்த இக்கோயிலில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் 7 அடி உயர முழு உருவ வெண்கலச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் 400 கிலோ எடை கொண்டதாகும்.

எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வெண்கலச் சிலைகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 14 சனவரி 2021 அன்று பிரதிஷ்டை செய்தார். இதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டது. இத்திருக்கோவிலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் ஆகியோர் 30 சனவரி 2021 அன்று திறந்து வைத்தனர். பின்னர் எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]