எம். ஜி. ஆர் நினைவிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்.ஜி.ஆர் நினைவிடம் புதுப்பித்தல் பணிக்கு முன்பு பழைய வரவேற்பு அமைப்புடன்

எம்.ஜி.ஆர் நினைவிடம் என்பது சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் தமிழக முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரனின் சமாதியாகும். இதனை எம்சிஆர் சமாதி என்று அழைக்கின்றனர். இங்கு எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அவருடைய புகைப்படங்கள் அடங்கிய நினைவாலயம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் முன்னாள் தமிழக முதல்வரும், எம்.ஜி.ஆரின் அரசியல் ஆசனுமான பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்கு அருகே எம்.ஜி.ஆரின் நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளது. 2016 திசம்பர் 6 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பூதவுடலும் எம்.ஜி.ஆர் சமாதியின் பின்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் சமாதி[தொகு]

வரலாறு[தொகு]

1987 திசம்பர் 24 ஆம் நாள் எம்.ஜி.ஆர் இறந்தார். அவருடைய உடல் மக்களின் பார்வைக்காக இராசாசி பவனில் வைக்கப்பட்டது. பிரபலங்களும், ரசிகர்களும், பொது மக்களும் அவருடைய உடலைப் பார்வையிட்டனர். இரவில் கூட மக்கள் வந்து எம்.ஜி.ஆர் உடலை பார்த்துச் சென்றனர். எம்.ஜி.ஆர் உடல் அண்ணா சதுக்கம் வரை இராணுவ வாகனத்தில் கொண்டு வரப்பட்டது. என்.டி.ஆர் முன்னிலையில் சந்தனப் பெட்டியில் வைக்கப்பட்டு புதைக்கப்பட்டது.[1]

சமாதி அமைப்பு[தொகு]

ஜெயலலிதா நினைவிடம்

எம்.ஜி.ஆர் சமாதியைச் சுற்றி தாமரை இதழ்கள்போல கட்டிட அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. நினைவிடம் அருகே அணையா தீபம் ஏற்றப்பட்டுள்ளது.[2] சமாதியின் முன்பு எம்.ஜி.ஆர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், எம்.ஜி.ஆர் பயன்படுத்திய சில பொருட்களும், விருதுகளும் வைக்கப்பட்டுள்ளன.[2] 1967ல் எம்.ஜி.ஆர் அவர்களை எம்.ஆர். இராதா சுட்டார். அந்த சிகிச்சைக்காக இரு முறை எம்.ஜி.ஆர் மாவுக்கட்டினை அணிந்திருந்தார். அந்த மாவுக்கட்டுகள் நினைவிடத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளன.[2]

பராமரிப்பு பணி[தொகு]

எம்.ஜி.ஆர் நினைவிடம், மெரினா-சென்னை
பறக்கும் குதிரை மற்றும் இரட்டை இலை சின்னத்துடன் உள்ள நுழைவுவாயில், 2012ல் புணரமைக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு செனவரி 29ம் தேதி சுனாமியால் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சமாதி ரூ 7.70 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் என முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார்.[3] இந்த பணிகள் நடைபெற்ற போது எம்.ஜி.ஆர் சமாதியின் முன்பு உள்ள அலங்கார வளைவு அகற்றப்பட்டு, புது வடிவத்தில் வைக்கப்பட்டது. அதன் முன்பு பறக்கும் குதிரை சிலையும், இரட்டை இலை வடிவமும் அமைக்கப்பட்டது. இவ்வாறு தேர்தல் சின்னம் அமைக்கப்படுவதற்கு பரவலான எதிர்ப்பினை எதிர்கட்சிகள் தெரிவித்தன. வழக்கு தொடுக்கப்பட்டது. ஆளும் கட்சி தரப்பில் அந்த சின்னம் இரட்டை இலையைக் குறிக்கவில்லை, பறக்கும் குதிரையின் இறக்கையைக் குறிக்கிறது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு திசம்பர் 9 நாள் சுமார் உரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நினைவிடம் மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.[4] இதனை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா திறந்து வைத்தார்.

நினைவேந்தல்[தொகு]

எம்.ஜி.ஆரின் நினைவு நாளான திசம்பர் 24ம் தேதியன்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் கட்சி தொண்டர்களும் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்துவதையும், உறுதி மொழியும் எடுத்துவருகின்றனர்.[5]

குறிப்பிடத்தக்க சம்பவங்கள்[தொகு]

  • எம்.ஜி.ஆர் சமாதியில் அவர் பயன்படுத்திய மகிழுந்தினைப் போன்றே வடிவமைக்கப்பட்ட ஒரு மகிழுந்தினை எம்.ஜி.ஆர். வாசன் எனும் இரசிகர் 06.08.2011 அன்று நிறுத்தியிருந்தார்.[6]
  • அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் நினைவிடங்களுக்கு மின்கட்டனம் 1996 சூலை மாதம் முதல் 2014 சூலை வரை செலுத்தப்படவில்லை என்ற தகவல் நாளேடுகளில் வெளிவந்தது.[7]

ஜெயலலிதா சமாதி[தொகு]

2016 டிசம்பர் 5 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தார். அவருடைய உடல் ராஜாஜி பவனில் எம்.ஜி.ஆர் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே பொதுமக்கள அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. மறுநாள் மாலை (டிசம்பர் 6) எம்.ஜி.ஆரின் சமாதியின் பின்புறம் சந்தப்பேழையில் உடல் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

படத்தொகுப்பு[தொகு]

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உள்ள சமாதி

இவற்றையும் காண்க[தொகு]


ஆதாரங்கள்[தொகு]

  1. வாத்தியார் நூல் - எம். ஜி. ஆரின் வாழ்க்கை - ஆர்.முத்துக்குமார் - கிழக்குப் பதிப்பகம்
  2. 2.0 2.1 2.2 https://web.archive.org/web/20160903035224/http://www.ithayakkani.com/jsp/Content/MGR_TOMP.jsp
  3. https://web.archive.org/web/20160903032840/http://makkalmurasu.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D/
  4. https://web.archive.org/web/20160903032617/http://www.dinamani.com/latest_news/article1372798.ece?service=print
  5. https://web.archive.org/web/20160903031802/http://www.dailythanthi.com/News/State/2015/12/19034403/Jayalalithaa-Pays-Floral-Tributes-to-Party-Founder.vpf
  6. https://web.archive.org/web/20160903025544/http://nakkheeran.in/Users/frmNews.aspx?PVN=59040
  7. https://web.archive.org/web/20160903031149/http://www.dinamalar.com/news_detail.asp?id=1115728
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஜி._ஆர்_நினைவிடம்&oldid=3780942" இருந்து மீள்விக்கப்பட்டது