எம். ஜி. ஆர் திரைப்பட நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். ஜி. ஆர் திரைப்பட நகர் (M.G.R. Film City) தமிழ்நாட்டில், தென்சென்னையிலுள்ள ராசீவ் காந்தி சாலையில் தரமணி என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. 1994 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இது, குறைந்த முதலீட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. 1997ம் ஆண்டு இங்கிலாந்தின் இளவரசி எலிசபெத் இங்கு வருகை புரிந்தார். அவ்வை சண்முகி, முதல்வன், ஹே ராம் போன்ற திரைப்படங்கள் இங்கு தயாரிக்கப்பட்டவையாகும். உலக தரத்தில் அமையப்பெற்ற சாலை இந்நகரம் காணப்படுகிறது. இதன் அண்மையில் சி. பி. டி. வளாகம், பிரபலமான வி. எச். எஸ் மருத்துவமனை ஆகியவையும் உள்ளன.