உள்ளடக்கத்துக்குச் செல்

எம். செல்வி முருகேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். செல்வி முருகேசன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
2001–2006
முன்னையவர்என். எஸ். ராஜ்குமார் மன்றாடியார்
பின்னவர்செ. சேகர்
தொகுதிகாங்கேயம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1964-10-17)17 அக்டோபர் 1964
காங்கேயம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தொழில்விவசாயம்

எம். செல்வி முருகேசன் (M. Selvi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் ஈரோடு மாவட்டம் காங்கேயம் நகரைச் சேர்ந்தவர். முதுகலை பட்டதாரியான செல்வி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியினைச் சார்ந்தவர். இவர், 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1] பின்னர் இவர் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகச் சேர்ந்தார்.[2]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: காங்கேயம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எம். செல்வி முருகேசன் 58,700 51.06 17.49
திமுக என். எஸ். ராஜ்குமார் மன்றாடியார் 47,426 41.25 -15.42
மதிமுக எசு. ஜெகதீசன் 4,777 4.16 -2.50
சுயேச்சை எசு. வெங்கட்ராமன் 1,797 1.56
சுயேச்சை பி. ராஜி 677 0.59
சுயேச்சை பி. சம்பத் 422 0.37
சுயேச்சை வி. பி. பெரியசாமி 317 0.28
சுயேச்சை பி. எம். கார்த்திகேயன் 233 0.20
சுயேச்சை எ. எம். கிருஷ்ணன் 229 0.20
சுயேச்சை எம். தங்கமணி 207 0.18
சுயேச்சை ஆர். சின்னசாமி 177 0.15
வெற்றி வாக்கு வேறுபாடு 11,274 9.81 -13.30
பதிவான வாக்குகள் 114,962 65.38 -3.73
பதிவு செய்த வாக்காளர்கள் 175,834
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -5.61

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly "WHO'S WHO Twelfth Assembly 2001. Chennai-600009: Legislature Assembly Secretariat, Chennai-600009. April 2002. p. 342-344.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "பாஜாகவில் இணைந்தனர் 15 முன்னாள் எம்எல்ஏ-க்கள்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2024/Feb/07/14-admk-ex-mlas-joins-bjp-4152798.html. பார்த்த நாள்: 12 January 2026. 
  3. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._செல்வி_முருகேசன்&oldid=4441218" இலிருந்து மீள்விக்கப்பட்டது