எம். சிவசுப்ரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



எம். எஸ் என்று அழைக்கப்படும் எம். சிவசுப்ரமணியம் (1929; திருப்பதிச்சாரம், குமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா- மறைவு டிசம்பர் 3 2017) தமிழின் குறிப்பிடத்தக்க பிரதிமேம்படுத்துநர், மொழிபெயர்ப்பாளர். வைணவ இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவர். 1947ல் அப்போதைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் நிதித்துறை ஊழியரானார். நவீன இலக்கிய ஆர்வம் அவ்வாரு உருவான ஒன்றுதான். சுந்தர ராமசாமியை அறிமுகம்செய்துகொண்டதும் இக்காலகட்டத்திலேயே. பின்னர் தமிழ்நாடு மொழிவழிப்பிரிவினைக்கு உட்பட்டபோது நாகர்கோயில் வந்து பத்திரப்பதிவுத்துறை எழுத்தராக வேலைபார்த்து 1987ல் ஓய்வு பெற்றார்.

சிவசுப்ரமணியம் நவீன இலக்கிய படைப்புகள் பலவற்றுக்கும் பிழை திருத்துபவராகவும் மொழியை செப்பனிடுபவராகவும் வெளியே தெரியாமல் உழைத்துள்ளார். நீல பத்மநாபன், சுந்தர ராமசாமி முதலிய முதல் தலைமுறை , நாஞ்சில்நாடன் தோப்பில் முகமது மீரான் போன்ற இரண்டாம் தலைமுறை , ஜெயமோகன் போன்ற மூன்றாம் தலைமுறை ,சல்மா போன்ற நான்காம் தலைமுறை படைப்பாளிகளின் படைப்புகளை செப்பனிட்டுள்ளார்.

சுந்தர ராமசாமியின் நெடுநாள் தோழரான எம்.எஸ் அனேகமாக தினமும் அவரைச் சந்திப்பவராக விளங்கினார். காலச்சுவடு இதழ் மற்றும் பிரசுரங்களில் நண்பராக தொடர்ந்து உடனிருந்தார். காலச்சுவடின் ஆலோசகராக தன் இறுதி வரை பணியாற்றினார்.

எம்.எஸ் தொடர்ந்து மொழிபெயர்ப்புகள் செய்துவருகிறார். எர்னஸ்ட் ஹெமிங்வேயின் நாவல் 'கிழவனும் கடலும்,' அர்ஜெண்டின எழுத்தாளர் சோரொண்டினோவின் சிறுகதைகளான 'ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை' கேரள பழங்குடித்தலைவர் ஜானுவின் வாழ்க்கைவரலாறான 'ஜானு 'கியவை காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளன. மலையாள எழுத்தாளர் சகரியாவின் சிறுகதைகள் 'சகரியா கதைகள்' என்ற பேரிலும், பொதுவான ங்கில கதைகள் 'அமைதியான மாலைப்பொழுதில்' என்ற தலைப்பிலும் யுனைட்டர் ரைட்டர்ஸ்[ தமிழினி ] பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ் நாகர்கோயிலில் 3 டிசம்பர் 2017 அன்று காலமானார். இவரது தம்பிதான் பிரபல படைப்பாளியான மா.அரங்கநாதன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சிவசுப்ரமணியம்&oldid=3715896" இலிருந்து மீள்விக்கப்பட்டது