எம். சிறீனிவாசு ரெட்டி
எம். சிறீனிவாசு ரெட்டி M. Srinivas Reddy | |
|---|---|
| தெலங்காணா சட்ட மேலவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2015 - 2021 | |
| தொகுதி | ஆளுநர் பரிந்துரை |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | மடிரெட்டி சிறீனிவாசு ரெட்டி 20 சூலை 1939 மம்னூர், வாரங்கல், தெலங்காணா, இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாரத் இராட்டிர சமிதி |
| துணைவர் | புசுப்பலதா |
| பெற்றோர் | இராமகிருட்டிண ரெட்டி, அம்ருதம்மா |
| வாழிடம் | ஐதராபாத்து |
எம். சிறீனிவாசு ரெட்டி (M. Srinivas Reddy) என்பவர் இந்தியாவின் தெலுங்கானாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மடிரெட்டி சிறீனிவாசு ரெட்டி என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 2015 ஆம் ஆண்டு சூன் மாதம் 17 ஆம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தேதி வரை தெலுங்கானா சட்ட மேலவையில் ஆளுநரின் ஒதுக்கீட்டில் உறுப்பினராகப் பணியாற்றினார்.[1] பாரத் இராட்டிர சமிதி என்ற கட்சியின் உறுப்பினராக தெலுங்கானா அரசியலில் இவர் இயங்கினார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]மடிரெட்டி சிறீனிவாசு ரெட்டி தெலுங்கானா மாநிலத்தின் அனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள மம்னூர் கிராமத்தில், ராமகிருட்டிணா ரெட்டி மற்றும் அம்ருதம்மா ஆகியோருக்கு மகனாக 1939 ஆம் ஆண்டு சூலை மாதம் 20 ஆம் தேதியன்று பிறந்தார். உசுமானியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார்.
அரசியல்
[தொகு]முன்னதாக இவர் கட்சியின் பொதுச் செயலாளராகவும், பாரத் இராட்டிர சமிதி கட்சியின் தலைமையகப் பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Siasat (19 June 2015). "Prof Srinivas Reddy takes oath as MLC". The Siasat Daily - Archive இம் மூலத்தில் இருந்து 30 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210530075112/https://archive.siasat.com/news/prof-srinivas-reddy-takes-oath-as-mlc-776685/. பார்த்த நாள்: 30 May 2021.
- ↑ Telangana Today (28 November 2024). "KCR felicitates Prof Srinivas Reddy, bids emotional farewell" இம் மூலத்தில் இருந்து 2 December 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241202173433/https://telanganatoday.com/kcr-felicitates-prof-srinivas-reddy-bids-emotional-farewell.
- ↑ Telangana Today (2 December 2024). "BRS leaders bid farewell to party general secretary Madireddy Srinivas Reddy" (in en) இம் மூலத்தில் இருந்து 2 December 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241202172832/https://telanganatoday.com/brs-leaders-bid-farewell-to-party-general-secretary-madireddy-srinivas-reddy.