உள்ளடக்கத்துக்குச் செல்

எம். சாரதா மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மா. சாரதா மேனன்
பிறப்புஏப்ரல் 5, 1923 (1923-04-05) (அகவை 102)
மங்களூர், கருநாடகம், இந்தியா
இறப்பு5 திசம்பர் 2021(2021-12-05) (அகவை 98)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிமனநல மருத்துவர்
சமூகப் பணியாளர்
செயற்பாட்டுக்
காலம்
1951 இலிருந்து
அறியப்படுவதுஸ்கார்ப் (SCARF)
வாழ்க்கைத்
துணை
ஸ்ரீகுமார மேனன் ஐ.பி.எஸ் அதிகாரி
விருதுகள்பத்ம பூசண்
அவ்வையார் விருது
மாநிலவளவில் சிறந்த மருத்துவர் விருது
வலைத்தளம்
இணையதளம் (SCARF)

மா. சாரதா மேனன் (M. Sarada Menon, 5 ஏப்ரல் 1923 – 5 திசம்பர் 2021) என்பவர் இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் மற்றும் ஸ்கார்ப் என்னும் தொண்டு நிறுவனத்தை தொடங்கிய பெண்மணி ஆவார்.[1] இவர் பத்ம பூசண் விருது, அவ்வையார் விருது ஆகியவற்றைப் பெற்றவர்.[2][3]

கல்வி

[தொகு]

1923 ஆம் ஆண்டு மங்களூரில் கே, சங்கர மேனன், நாராயணி தம்பதியின் மகளாக பிறந்தார் சாரதா[4]. தந்தை நீதிபதி என்பதால் மாறுதல் காரணமாக குடும்பம் இடமாறிக் கொண்டே இருந்தது. படிப்பின் நிமித்தம் சென்னையில் உள்ள பள்ளியில் சாரதாவை சேர்த்துவிட்டார் தந்தை. பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் அவர் பட்டப்படிப்பை முடித்தார். 1951 ஆம் ஆண்டு மதராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். மருத்துவப் பட்ட மேல்படிப்பை 1957 ஆம் ஆண்டு தில்லியில் முடித்தார். பெங்களூரில் நிம்ஹன்ஸ் நிறுவனத்தில் ஈராண்டு மனநல சிகிச்சை படிப்பில் டிப்ளோமா முடித்தார்.

பணிகள்

[தொகு]

1959 ஆம் ஆண்டு கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் தமிழக அரசு சாதாரவை கண்காணிப்பாளாராக நியமித்தது. அந்தப் பணியில் அமர்ந்த முதல் பெண்ணானார். 1971 ஆம் ஆண்டு ஐ. பி. எஸ் அதிகாரியான ஸ்ரீகுமார மேனனைத் திருமணம் செய்து கொண்டார்[4].

1978 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெறும் வரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் பணியாற்றினார். ஓய்வு பெற்ற பின்னும் மனநலம் குன்றியவர்களுக்கான நலப்பணிகளைத தன்னார்வத்துடன் செய்துவந்தவர், மனநலம் குன்றியவர்களை ஒன்றிணைப்பதற்காக "ஆஷா" என்ற அமைப்பை நிறுவினார்.

1984 இல் ஸ்கார்ப்(ஸ்கிசோபரெனியா ரிசர்ச் பவுண்டேஷன்) என்னும் சேவை நிறுவனத்தைத் தோற்றுவித்தார். அந்நிறுவனம் மன நோயாளிகளைப் பேணுதல், அவர்களுக்கு சிகிக்சை, மறுவாழ்வு அளித்தல், தொழில், வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சிகள் அளித்தல் போன்றவற்றைச் செய்கிறது.

விருதுகள்

[தொகு]

மத்திய அரசு இவரது சேவையை பாராட்டி 1992 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மபூசண் விருது வழங்கி கெளரவித்தது. [2]

தமிழ்நாடு அரசு மருத்துவர் சாரதா மேனனுக்கு 2016 ஆம் ஆண்டுக்குரிய அவ்வையார் விருதை வழங்கி அவரைக் கெளரவித்தது.[5]

சென்னையில் உள்ள இந்தியன் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் சாரதா மேனனுக்கு 2016 ஆம் ஆண்டிற்கான அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டது.[6]

இறப்பு

[தொகு]

இவர் சென்னையில் 2021, திசம்பர் 5, அன்று தன் 98வது வயதில் இறந்தார்.[7]

மேற்கோள்

[தொகு]
  1. "Sarada Menon Chosen for Avvaiyar Award". The Indian Express. 3 March 2016. Retrieved May 23, 2016.
  2. 2.0 2.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. Retrieved January 3, 2016. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. http://www.thehindu.com/news/cities/chennai/avvaiyar-award-for-sarada-menon/article8872735.ece
  4. 4.0 4.1 லூயிஸ், நிவேதிதா (2022). பாதை அமைத்தவர்கள் - முதல் பெண்கள் II (1st ed.). சென்னை: ஹெர் ஸ்டோரீஸ். p. 109.
  5. http://timesofindia.indiatimes.com/city/chennai/Sarada-Menon-gets-Avvaiyar-award/articleshow/53294492.cms
  6. http://www.thehindu.com/news/cities/chennai/mother-teresa-award-for-dr-sarada-menon/article9268961.ece
  7. "India’s first woman psychiatrist, Sarada Menon, passes away at 98". The Hindu. 6 December 2021. https://www.thehindu.com/news/national/tamil-nadu/indias-first-woman-psychiatrist-sarada-menon-passes-away-at-98/article37859342.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சாரதா_மேனன்&oldid=4230821" இலிருந்து மீள்விக்கப்பட்டது