எம். கே. ஞானசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். கே. ஞானசேகரன் (பிறப்பு: சூன் 9, 1955) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் கனலன் எனும் புனைப்பெயரில் நன்கறியப்பட்டவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1969 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவரும் இவர் வானொலிக் கவியரங்கங்களிலும் பாடியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பணமுடிப்பு (1985);
  • பாரதிதாசன் இயக்கத்தின் எழுத்தாளர் தின விழாவில் கவிதைக்கான முதல் பரிசு (1995);
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மரபுக் கவிதைக் கருத்தரங்கில் முதல் பரிசு (1999)
  • "கட்டைவிரல் பெருமாள்" விருதும், தங்கப் பதக்கமும் - மலேசியத் தமிழ்ப் பாவலர் மன்றம்
  • "கவிக்கோன்" விருது (1996)
  • "கவிச்சுடர்" விருது (1998)

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கே._ஞானசேகரன்&oldid=860645" இருந்து மீள்விக்கப்பட்டது