உள்ளடக்கத்துக்குச் செல்

எம். ஏ. வாகீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வழக்கறிஞர் எம். ஏ. வாகீத்
கழக்கூட்டம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2001–2016
பின்னவர்கடகம்பள்ளி சுரேந்திரன்
தொகுதிகழக்கூட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 மார்ச்சு 1950 (1950-03-14) (அகவை 74)
கனியாபுரம், கேரளா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இல்லிபா வாகீது
பிள்ளைகள்ஜின்சா வாகீது
இரின்சா வாகீது
வாழிடம்குன்னுகுழி
தொழில்அரசியல்வாதி, வழக்கரிஞர், சமூகப் பணியாளர்
இணையத்தளம்www.mavaheed.com

எம். ஏ. வாகீத் (M.A. Vaheed) ( மலையாளம்: അഡ്വ. എം.എ. വാഹിദ് ) (பிறப்பு 14 மார்ச் 1950) ஓர் இந்திய அரசியல்வாதியும், கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞரும் ஆவார்.[1] இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த இவர் கேரள சட்டமன்றத்தில் 15 ஆண்டுகள் கழக்கூட்டம் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார்.[2]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

கேரளாவில் இந்திய தேசிய காங்கிரசின் மாணவர் பிரிவான கேரள மாணவர் ஒன்றியம் மூலம் வாகீத் அரசியலில் நுழைந்தார். இவர் வட்டச் செயலாளர், மாவட்ட துணைத் தலைவர், மாவட்ட பொதுச் செயலாளர் என பணியாற்றினார். கல்லூரியில் படிக்கும்போது 1970களில் தனியார் கல்லூரி வேலைநிறுத்தத்தில் தீவிரமாகப் பங்கேற்ற இவர், செம்பழந்தி சிறீ நாராயணா கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் இவர் நிலமேல் என்எஸ்எஸ் கல்லூரியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்.[1]

பதவிகள்

[தொகு]

வாகீத் 1978 ல் திருவனந்தபுரம் மாவட்ட இளைஞர் காங்கிரசு, 1983 முதல் 1989 வரை கனியாபுரம் தேங்காய் நார் கூட்டுறவு சங்கம், 1993இல் அந்தூர்கோணம் சேவை கூட்டுறவு வங்கி , 1985 இல் முறைசாரா கல்வி மற்றும் மேம்பாட்டுக்கான கேரள சங்கத்தின் தலைவர் என பல பதவிகளை வகித்துள்ளார். இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசுடன் இணைந்த தொழிற்சங்கங்களை ஒருங்கிணைப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். இவர் 1983 இல் யூத் எக்ஸ்பிரஸ் நாளிதழ்[1] என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார்.

வாகீத் கேரள மாநில சட்டமன்றத்திற்கு 2001இல் உறுப்பினரானார். 2006 , 2011 ஆம் ஆண்டுகளில் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தொடர் வெற்றிகளைப் பெற்றார்.[2] 2016 சட்டமன்றத் தேர்தலில், இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிசம்) கடகம்பள்ளி சுரேந்திரனிடம் 11,477 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். பாரதிய ஜனதா கட்சியின் வி முரளிதரன் இரண்டாவதாகவும், இவர் மூன்றாவதாகவும் வந்தார்.[3]

சொந்த வாழ்க்கை

[தொகு]

முகமது காசிம் - முகம்மது உம்மல் தம்பத்யருக்கு 14 மார்ச் 1950 இல் கனியாபுரத்தில் வாகீத் பிறந்தார். அறிவியலில் பட்டம் பெற்ற பின்னர் இளங்கலைச் சட்டம் படித்து ஓர் வழக்கறிஞராக பயிற்சி செய்தார். இல்லிபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "M. A. Vaheed". Kerala Niyamasabha. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "കഴക്കൂട്ടത്ത് എം എ വാഹിദ് ജയിച്ചു". http://malayalam.webdunia.com/article/kerala-news-in-malayalam/കഴക്കൂട്ടത്ത്-എം-എ-വാഹിദ്-ജയിച്ചു-111051300023_1.htm. 
  3. "Kerala Assembly Election Results-- 2016". keralaassembly.org. பார்க்கப்பட்ட நாள் 2016-06-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._வாகீத்&oldid=3928183" இலிருந்து மீள்விக்கப்பட்டது