எம். ஏ. சுசீலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம். ஏ. சுசீலா
Susila srm.JPG
பிறப்புபெப்ரவரி 27, 1949 (1949-02-27) (அகவை 72)
காரைக்குடி, தமிழ்நாடு
இருப்பிடம்கோயம்புத்தூர்
பணிதமிழ்ப்பேராசிரியர், மதுரை பாத்திமா கல்லூரி (ஓய்வு)
அறியப்படுவதுஎழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர்

எம். ஏ. சுசீலா (பிறப்பு: பெப்ரவரி 27, 1949) ஒரு சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், பெண்ணியவாதி, வலைப்பதிவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

எம். ஏ. சுசீலா, 1949ஆம் ஆண்டு காரைக்குடியில் பிறந்தவர். இவர் தாய் சோபனாதேவி தலைமை ஆசிரியை, தந்தை எஸ். அனந்தராம் காவல்துறைக் கண்காணிப்பாளர். பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி பெண்கள் கல்லூரியில் வேதியல் இளநிலைப்பட்டமும் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டமும் பெற்றார். மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராக 1970ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். பணிக்காலத்திலேயே பகுதிநேர ஆய்வாளராக ஆய்வு மேற்கொண்டு தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 36 ஆண்டுகள் பாத்திமாக்கல்லூரியில் பணி புரிந்து 2006ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இடையே இரண்டாண்டுக்காலம் அக்கல்லூரியில் துணை முதல்வராகவும் பணியாற்றியிருக்கிறார். பணி நிறைவுக்குப்பின் ஏழாண்டுக்காலம் தில்லியில் இருந்தபின், மகள் மீனுபிரமோத்துடன் தற்போது கோவையில் வசித்து வருகிறார்.

எழுத்துத் துறை[தொகு]

எம். ஏ. சுசீலாவின் முதல் சிறுகதையான ’ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் ஆக்கம் 1979ஆம் ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது. இதைத் தொடர்ந்து எண்பதுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள், கல்கி, கலைமகள், ஆனந்த விகடன், தினமணிக் கதிர், அமுத சுரபி, மங்கையர் மலர், அவள் விகடன், புதிய பார்வை, வடக்கு வாசல் ஆகிய பல இதழ்களிலும் வெளி வந்துள்ளன; அவற்றுள் சில மலையாளம், கன்னடம் , இந்தி வங்காளம் முதலிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கோவை ஞானியின் பெண் எழுத்தாளர் சிறுகதைத் தொகுப்புக்களிலும் பல சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. "கண் திறந்திட வேண்டும்" என்னும் இவரது சிறுகதை, பாலுமகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சித்தொடர் வழியாக "நான் படிக்கணும்" என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது.

ஆக்கங்கள்[தொகு]

நாவல்[தொகு]

யாதுமாகி -2014,வம்சி புக்ஸ்,திருவண்ணாமலை

சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]

 • பருவங்கள் மாறும் (1985), நர்மதா வெளியீடு, சென்னை
 • புதிய பிரவேசங்கள் (1994),தழல் வெளியீடு, மதுரை
 • தடை ஓட்டங்கள் (2001). மீனாட்சி புத்தகநிலையம், மதுரை
 • தேவந்தி (2011), வடக்கு வாசல் பதிப்பகம், புது தில்லி

கட்டுரை நூல்கள்[தொகு]

 • 'விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களில் பெண்கள்' (1996) - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
 • பெண் இலக்கியம்- வாசிப்பு (2001), மீனா‌ட்சி புத்தக நிலையம்
 • இலக்கிய இலக்குகள் (2004), மீனாட்சி புத்தக நிலையம்
 • தமிழ் இலக்கிய வெளியில், பெண்மொழியும் பெண்ணும் (2006), மீனாட்சி புத்தக நிலையம்

மொழியாக்கம்[தொகு]

 • பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' புதினம் - ஆங்கில வழித் தமிழாக்கம் (2007) - பாரதி புத்தக நிலையம், மதுரை
 • பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் 'இடியட்’ புதினத்தின் மொழியாக்கம் பாரதி புத்தக நிலையம், மதுரை (2010)
 • பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குறுங்கதைகளின் மொழிபெயர்ப்பு தஸ்தயெவ்ஸ்கி கதைகள் நற்றிணை பதிப்பகம், சென்னை

விருதுகள்[தொகு]

 • பெண்கள் சார்ந்த சமூகச்செயல்பாடுகளின் பங்களிப்புக்களுக்காக, ஸ்தீரீ ரத்னா (2002)
 • சிறந்த பெண்மணி(2004)
 • சிறுகதைக்காக, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் அமரர் சுஜாதா விருது (2013) [1]
 • அசடன் மொழியாக்கத்துக்கு மூன்று விருதுகள்

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._சுசீலா&oldid=3236223" இருந்து மீள்விக்கப்பட்டது