எம். ஏ. எம். மன்சூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அஷ்ஷெய்க் உஸ்தாத் எம். ஏ. எம். மன்சூர்
الشيخ منصور أستاذ
பிறப்பு 1 சூலை 1958 (1958-07-01) (அகவை 58)
அக்குரணை, கண்டி, இலங்கை
இருப்பிடம் அக்குரணை, கண்டி
தேசியம் இலங்கை
கல்வி இளங்கலை
படித்த கல்வி நிறுவனங்கள் ஜாமியா நளீமியா
அஸ்ஹர் கல்லூரி அக்குரணை
செயல்பட்ட ஆண்டுகள் 1978–இன்று வரை
அறியப்படுவது தஃவா
வலைத்தளம்
www.usthazmansoor.com

உஸ்தாத் எம். ஏ. எம். மன்சூர் (M. A. M. Mansoor, பிறப்பு: 1 சூலை 1958) இலங்கையின் நளீமிய்யா வாசகசாலை விரிவுரையாளர். இசுலாமியக் கல்விச் சிந்தனையாளர். இலங்கையில் இஸ்லாமிய ஆய்வுகளுக்கான மிஷ்காத் நிறுவனம் "அல் குர்ஆன் கற்கைகளுக்கான திறந்த கல்லூரி" என்பதனைத் தோற்றுவித்து இயக்கி வருபவர். எழுத்தாளர்; மொழிபெயர்ப்பாளர்; இசுலாமிய நூல்கள், மொழிபெய‌ர்ப்புக்க‌ள், க‌ட்டுரைக‌ள் என‌ ப‌ல‌ ஆக்க‌ங்க‌ளையும் செய்துவருபவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மன்சூர் இலங்கையின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள அக்குரணை அருகிலுள்ள பங்கொள்ளாமடை என்ற சிற்றூரில் பிறந்தார். அங்கு தனது ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் அக்குரணை அஸ்ஹர் கல்லூரியிலும் ஜாமியா நளீமியாவில் இசுலாமியக் கல்வியையும் பின் கலைத்துறையில் பட்டப்படிப்பையும் மேற்கொண்டார். ஆரம்ப பாடசாலையின் ஆசிரியர்கள் ஏற்படுத்திய தாக்கம், இசுலாமிய அறிவின் மீதான ஒரு மோகத்தையும், பற்றையும், அவரில் ஏற்படுத்தியது.

நளீமிய்யாவின் வாசகசாலையில் இருந்த பெரும் இசுலாமிய அறிஞர்களின் நூல்கள் இவரை வளர்த்தன. அத்தோடு சேக் முகமது அல் கஸ்ஸாலி, சேக் யூசூப் அல் கர்ளாவி, சேக் அபுல் அசன் அலி நத்வி போன்ற பெரும் அறிஞர்களைச் சந்திக்கவும் வாய்ப்பு கிடைத்தது. பின்னால் முகமது அகமத் ராசித், நாதிர் அந்நூரி போன்ற அறிஞர்களை சந்திக்கவும் அவர்களோடு கலந்துரையாடவும் வாய்ப்பு கிடைத்தது.

1981இல் நளீமிய்யா வாசிக சாலையில் ஒரு விரிவுரையாளராக இணைந்துகொண்ட உஸ்தாத் 2002ம் ஆண்டுவரை 20 வருடங்களுக்கும் மேலாக ஆசிரியராக கல்விப் பணியில் ஈடுபட்டார். பின்னர் இஸ்லாமிய சிந்தனையை நிறுவன அமைப்பில் பரவலாக்கும் நிலைக்கு வந்தார். இந்தவகையில் இஸ்லாமிய ஆய்வுகளுக்கான மிஷ்காத் நிறுவனமும் அதன் விளைவாக உருவான அல் குர்ஆன் கற்கைகளுக்கான திறந்த கல்லூரி என்பவற்றைத் தோற்றுவித்து இயக்கி வருகிறார். நிறைய‌ வ‌குப்புக்க‌ள், உரைக‌ள் ந‌டாத்திவ‌ரும் அதேவேளை புத்த‌க‌ங்க‌ள், மொழிபெய‌ர்ப்புக்க‌ள், க‌ட்டுரைக‌ள் என‌ ப‌ல‌ ஆக்க‌ங்க‌ளையும் செய்துள்ளார்.

வெளியிட்ட நூல்கள்[தொகு]

நூல்கள்[தொகு]

நூல்கள்
(1999)  
(2001)  
(2002)  
திக்ர் 2005  
(2011)  
நூல்கள்(அரபு மொழி பெயர்ப்பு)
(2012)  

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._எம்._மன்சூர்&oldid=2106856" இருந்து மீள்விக்கப்பட்டது