எம். ஏ. அலீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம்.ஏ. அலீம்
M.A.Aleem
பிறப்புஇந்தியா, தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி
கல்விதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி தமிழ்நாடு
செயற்பாட்டுக்
காலம்
1986 முதல்
மருத்துவப் பணிவாழ்வு
தொழில்நரம்பியல் மருத்துவர்

எம். ஏ. அலீம் (M. A. Aleem ) ஓர் இந்திய நரம்பியல் நிபுணர் ஆவார். எம். அப்துல் அலீம் என்பது இவருடைய முழுப்பெயராகும். இவர் கே.ஏ.பி. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் தலைவராக உள்ளார். திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வராகவும் இருந்தார். அலீம் நரம்பியல் துறையில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். திருச்சி நகரிலுள்ள நரம்பியல் சங்கத்தின் தலைவராகவும் இவர் இருந்தார்[1].

இந்திய நரம்பியல் அகாடமி மற்றும் இந்திய நரம்பியல் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினராக அலீம் பணியாற்றினார். கே.ஏ.பி. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வராக டாக்டர் எம்.ஏ.அலீம் இருந்தார். திருச்சியிலுள்ள ஏபிசி மருத்துவமனையின் ஆலோசனை நரம்பியல் நிபுணர் மற்றும் கால்-கை வலிப்பு நிபுணராகவும் உள்ளார்[2]

தொடக்க காலம்[தொகு]

அலீம் துவாரங்குரிச்சியில் பிறந்தார். தனது மருத்துவப் படிப்பை இந்தியாவின் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் முடித்தார். 1986 ஆம் ஆண்டு இதே தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை பொது மருத்துவப் பிரிவில் படித்து முடித்தார். பின்னர், மதுரை மதுரை மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் சிறப்பு பிரிவை படித்தார்.

தற்போதைய பதவி[தொகு]

திருச்சிராப்பள்ளி கே.ஏ.பி.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி மருத்துவமனைகளில் அலீம் நரம்பியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியராக பணிபுரிகிறார். மேலும் திருச்சிராப்பள்ளி ஏபிசி மருத்துவமனையின் வருகை நரம்பியல் நிபுண ஆலோசகர் மற்றும் கால்-கை வலிப்பு நிபுணர் முதலிய பணிகளைச் செய்து வருகிறார். தூய இந்தியா இயக்கத்தின் தூதுவராக அலீமை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 2019 ஆம் ஆண்டு சனவரி 26 அன்று பரிந்துரைத்த்து[3].

அனுபவம்[தொகு]

நரம்பியல் துறையில் அலீமுக்கு ஒரு பரந்த அனுபவம் உண்டு. தமிழ்நாடு மருத்துவ சேவைப் பிரிவில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். துவரங்குரிச்சியில் ஒரு முதுநிலை குடிமை உதவி மருத்துவராகவும் பணியாற்றினார்.

கே.எம். கிரசண்ட் மருத்துவமனையில் வருகை தரும் ஆலோசக மருத்துவராக 11 ஆண்டுகளுக்கு மேலாகவும், ஏபிசி மருத்துவமனை திருச்சியில் நரம்பியல் நிபுணர் மற்றும் கால்-கை வலிப்பு நிபுணராகவும் பணியாற்றி வருகிறார். திருச்சி மாநகர நரம்பியல் சங்கத்தின் தலைவராகவும் இந்திய நரம்பியல் அகாடமி மற்றும் நரம்பியல் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் தற்போது பொறுப்பு வகிக்கிகிறார்[4].

குடும்பம்[தொகு]

அலீமின் தந்தை முகமது இப்ராகிம் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு வணிகர் ஆவார். அலீமின் மனைவி பாத்திமா அலீம் துவாரங்குரிச்சியின் பொன்னம்பட்டி பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இவர்களுக்கு யாசுமின், சல்மா என்ற ஒரு மகள்கள் உள்ளனர். இவர்கள் பொறியியல் படிப்பை முடித்துள்ளனர். முகமது அக்கிம் என்ற மகனும் ஒரு மருத்துவராக பணிபுரிகிறார்.

விருதுகள்[தொகு]

 1. தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது[5]
  படிமம்:Dr.Aleem Best Doctor Award.jpg
  சிறந்த மருத்துவர் விருது
  .
 1. 1989 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறந்த பணியாளர் சான்றிதழ்.
 2. 2001 ஆம் ஆண்டு உலக நரம்பியல் கூட்டமைப்பு வழங்கிய இளையோர் பயண ஆய்வாளர் விருது.
 3. 2003 ஆம் ஆண்டு அயர்லாந்து நாட்டிலுள்ள டப்ளினின் 25 ஆவது அனைத்துலக நிகழ்நேர நிகழ்வுகளின் கூட்டமைப்பு நிகழ்வில் பங்கேற்பு சான்றிதழ்.
 4. 16.11.2006 இல் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆறாவது ஏஓசிஏ நிகழ்வு பங்கேற்பு விருது.
 5. 2005 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறந்த பணியாளர் சான்றிதழ்.
 6. 2006 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறந்த பணியாளர் சான்றிதழ்.
 7. இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவ வெளியீடுகளுக்கான 2008 ஆம் ஆண்டின் டாக்டர் பானுமதி முருகானந்தம் விருது.
 8. சமால் முகமது கல்லுரியின் 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த முன்னாள் மானவர் விருது/
 9. 26.01.2010 இல் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவரின் குடியரசு தினநாள் விருது.
 10. 21.01.2010 இல் தமிழ்நாடு மருத்துவ வாரியத்தின் மனிதநேய மருத்துவர் விருது.
 11. 19.02.2011 இல் உலக மனித உரிமைகள் நிறுவனம் வழங்கிய டாக்டர் மீனா வாழ்நாள் சாதனையாளர் விருது.
 12. திருச்சிராப்பள்ளி சிறுபான்மையினர் கூட்டமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது. # 05.06.2012 இல் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறந்த பணியாளர் சான்றிதழ் விருது.
 13. 15.01.2013 இல் திருச்சிராப்பள்ளி சஞ்சிவிநகர் நலச் சங்கம் வழங்கிய 2012 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-12-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-10-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 2. http://timesofindia.indiatimes.com/city/trichy/Trichy-doctors-to-operate-on-parasitic-twins/articleshow/27928693.cms
 3. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/gaiety-marks-70th-republic-day/article26103170.ece
 4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-12-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-10-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-12-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-10-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._அலீம்&oldid=3364912" இருந்து மீள்விக்கப்பட்டது