உள்ளடக்கத்துக்குச் செல்

எம். எஸ். கே. இராஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். எஸ். கே. இராஜேந்திரன்
பதவியில்
1989–1991
தொகுதிஇராமநாதபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 செப்டம்பர் 1948 (1948-09-15) (அகவை 76)
இராமநாதபுரம், தமிழ்நாடு
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்32 வடக்கு ரத வீதி, இராமநாதபுரம்

எம். எஸ். கே. இராஜேந்திரன் (M. S. K. Rajendran; பிறப்பு 15 செப்டம்பர் 1948) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இராமநாதபுரம் நகரைச் சார்ந்த இவர், இராமநாதபுரத்தில் உள்ள ராஜா உயர் நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினையும், திருச்சிராப்பள்ளி புனித ஜோசப் கல்லூரியில் கல்லூரிக் கல்வியினையும் முடித்துள்ளார். இதன் பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்று வழக்கறிஞராக இருந்தார்.[1] இவர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழகச் சட்டப்பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY "WHO'S WHO" 1989 (in English). Madras: Tamil Nadu Legislative Assembly Secretariat, Madras 600009. 1989. p. 208.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எஸ்._கே._இராஜேந்திரன்&oldid=4133858" இலிருந்து மீள்விக்கப்பட்டது