உள்ளடக்கத்துக்குச் செல்

எம். எம். சிறீலேகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். எம். சிறீலேகா
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கோடூரி சிறீலேகா
பிறப்பு8 செப்டம்பர்[1]
இசை வடிவங்கள்திரை இசை
தொழில்(கள்)பின்னணி பாடகர், இசையமைப்பாளர்
இசைத்துறையில்1996–தற்போது வரை
இணையதளம்www.mmsreelekha.in

மணிமேகலா சிறீலேகா (Manimekhala Srilekha) (பிறப்பு கோடூரி சிறீலேகா) தொழில் ரீதியாக எம். எம். சிறீலேகா என்று அழைக்கப்படும் இவர் ஓர் இந்தியத் திரைப்படப் பின்னணி பாடகரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் தெலுங்குத் திரைப்படத்துறையில் தனது படைப்புகளுக்காக முக்கியமாக அறியப்படுகிறார்.[2][3] தெலுங்குத் திரைப்படத் துறையில் உள்ள ஒரே பெண் இசையமைப்பாளர் இவர் மட்டுமே.[1] இவரது தந்தைவழி மாமா கே. வி. விஜயேந்திர பிரசாத் இயக்கிய ஸ்ரீவல்லி (2017) இவரது 75 வது படமாகும்.[4]

சொந்த வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

சிறீலேகா இசையமைப்பாளர் மரகதமணி மற்றும் பிரபல இயக்குநர் இராஜமௌலி ஆகியோரின் உறவினர் ஆவார். 2003 ஆம் ஆண்டில் புட்டா பிரசாத் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

சிறீலேகா தனது ஒன்பது வயதில் பின்னணிப் பாடகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் இசை இயக்கத்தில் தனது சகோதரருக்கு உதவினார்.[1] இவர் தனது 12 வயதில் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறினார். இது பிரபல தமிழ் திரைப்பட நட்சத்திரமான விஜய் நடித்த முதல் படமாகும்.[5] பின்னர் முப்பலனேனி சிவன் இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் (1995) மற்றும் தாசரி நாராயண ராவ் இயக்கத்தில் வெளிவந்த நானகாரு ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.

தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தென்னிந்திய திரைப்படங்களைத் தவிர, ஹம் ஆபகே தில் மே ரெஹ்தே ஹை (1999), மேரே சப்னோன் கி ரானி, ஆகாஸ் (2000) போன்ற இந்திப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Music director MM Srilekha's interview on her birthday". Ragalahari (in ஆங்கிலம்). Retrieved 2022-11-09.
  2. "Srilekha participates in Easter celebrations". The Hindu. 9 April 2012. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/srilekha-participates-in-easter-celebrations/article3295013.ece. பார்த்த நாள்: 10 August 2018. 
  3. Ugadi Puraskar awards for women – The Hindu
  4. "MM Sreelekha Makes Fun of Ram Charan | Srivalli Movie Pre Release Event | Neha Hinge | Rajath". யூடியூப். Archived from the original on 2021-12-05.
  5. Kumar, S. R. Ashok (2013-11-28). "Audio Beat: Kadhal Solla Aasai - Love is in the air" (in en-IN). தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181105132953/https://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-kadhal-solla-aasai-love-is-in-the-air/article5401146.ece. 
  6. MM Srilekha Biography, MM Srilekha Profile – entertainment.oneindia.in

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எம்._சிறீலேகா&oldid=4379836" இலிருந்து மீள்விக்கப்பட்டது