எம். எம். சந்திர மௌலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். எம். சந்திர மௌலி (MM Chandramouli) என்பவர் ஒரு இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

இவர் ஆந்திரப் பிரதேசம், சித்தூரைச் சேர்ந்தவர். ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்த இவர், சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு மற்றும் திரைப்பட தயாரிப்புப் பிரிவுகளில் தேர்வுபெற்றார். பின்னர் ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் உதவியாளராக சேர்ந்தார்.[1] அவர் இயக்கியத் தமிழ், தெலுங்கு திரைப்பட்ங்கில்இணை இயக்குநராக பணியாற்றினார். அதன்பிறகு பல்வேறு இந்தியப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சில தொடர்களைத் தயாரித்தார். 2010 வாக்கில் அமெரிக்காவின் நியூயார்க்கில் குடியேறினார். அங்கே தொலைக்காட்சித் தொடர்கள், சில ஹாலிவுட் படங்கள், விளம்பரங்களில் பணிபுரிந்து, திரைப்பட விநியோகத்திலும் ஈடுபட்டார். அதன்பிறகு சென்னை திருபிய ராஜமௌலி தற்போது 100% காதல் என்ற படத்தை இயக்கிவருகிறார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "100% காதல்". செய்தி. மாலைமலர் (2017 அக்டோபர் 17). பார்த்த நாள் 9 பெப்ரவரி 2019.
  2. ரசிகா (2018 நவம்பர் 16). "இயக்குநரின் குரல்: காலத்தை வெல்லும் காதல் இது!". செவ்வி. இந்து தமிழ். பார்த்த நாள் 9 பெப்ரவரி 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எம்._சந்திர_மௌலி&oldid=2652552" இருந்து மீள்விக்கப்பட்டது