எம். எம். ஏ. ரசாக்
தோற்றம்
மு. மு. அ. இரசாக் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | ஏ. ஆர். சுப்பையா முதலியார் |
| பின்னவர் | சாகுல் அமீது |
| தொகுதி | கடையநல்லூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 10 சூலை 1945 வடகரை |
| இறப்பு | 22 சனவரி 2022 (அகவை 76) |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | விவசாயி |
மு. மு. அ. இரசாக் (10 சூலை 1945-22 சனவரி 2022) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ளார். மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழுவின் தலைவராகவும் இருந்தார்.[1] இவர் திடீர் உடல்நலக் குறைவினால் தமது 76ஆம் அகவையில் சனவரி 22, 2022 அன்று தென்காசி மாவட்டம் வடகரையில் காலமானார்.[2]
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) | பெற்ற வாக்குகள் |
|---|---|---|---|---|
| 1977 | கடையநல்லூர் | அ.தி.மு.க | 38.78 | 29347[3] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-07-04.
- ↑ "காலமானார் முன்னாள் எம். எல். ஏ. ரசாக் [Former MLA MM Razak passed away]" (in Tamil). தினமணி (Chennai): p. 5. 23.01.2022.
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 359-360.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)