எம். ஆர். சந்திரசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம். ஆர். சந்திரசேகரன்
பிறப்பு26 பெப்ரவரி 1929 (1929-02-26) (அகவை 92)
போட்டோர், திருச்சூர்
இருப்பிடம்பாலக்காடு, கேரளா, இந்தியா
தேசியம்இந்தியன்
குடியுரிமைஇந்தியா
கல்விகலையில் முதுகலை
படித்த கல்வி நிறுவனங்கள்
பணிஇலக்கிய விமர்சகர், பேராசிரியர், ஆசிரியர்
பட்டம்
  • பேராசிரியர்
பெற்றோர்மலப்புரத் ராமன் வைத்தியர், கே. எஸ். தேவகி
வாழ்க்கைத்
துணை
வப்பலகலத்தில் விஜயகுமாரி
பிள்ளைகள்இராம்குமார், பிரியா

மலப்புரத்து ராமன் சந்திரசேகரன் ( Malappurath Raman Chandrasekharan) (பிறப்பு 1929 பிப்ரவரி 26), எம்.ஆர்.சந்திரசேகரன் அல்லது வெறுமனே எம்.ஆர்.சி , என்றும் அறியப்படும் இவர் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த மலையாள இலக்கிய விமர்சகரும் மற்றும் எழுத்தாளரும் ஆவார். சந்திரசேகரன் இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல், சமூகம் போன்ற பல்வேறு இலக்கியப் பிரிவுகளில் 40 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். பத்திரிகை மற்றும் கல்வித் துறையில் பணியாற்றியதற்காகவும் இவர் குறிப்பிடத்தக்கவர். இலக்கிய விமர்சனத்திற்காக 2010 கேரள சாகித்ய அகாதமி விருதை பெற்றுள்ளார்.

சுயசரிதை[தொகு]

சந்திரசேகரன் 1929 பிப்ரவரி 26 அன்று கேரளாவின் திருச்சூரின் போட்டோரில் மலபுரத்து ராமன் வைத்தியர் மற்றும் கே.எஸ்.தேவகி ஆகியோருக்கு பிறந்தார். திருச்சூர் திருர் லோயர் மேல்நிலைப் பள்ளி மற்றும் விவேகோடயம் உயர்நிலைப் பள்ளியில் இவரது குழந்தை பருவ நாட்கள் கழிந்தன. திருச்சூர் சிறீ கேரள வர்மா கல்லூரியில் இளங்கலை பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டமும் படித்தார். பின்னர் மலையாள மொழி மற்றும் இலக்கியத்தில் கேரளப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்காக ஜோசப் முண்டசேரி தொகுத்த நவஜீவனில் பத்திரிகையாளராக சந்திரசேகரன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, கோழிக்கோட்டில் மாத்ருபூமி நாளிதழில் துணை ஆசிரியராக சேர்ந்தார். ஆனால் இவரது கம்யூனிச ஆதவின் காரணமாக வெளியேற்றப்பட்டார்.

இவர் கோடகர தேசிய உயர்நிலைப்பள்ளியில் பள்ளி ஆசிரியராகவும், பெக்கல் அரசு உயர் நிலைப்பள்ளியிலும் பணியாற்றினார். 1956ஆம் ஆண்டில் கோழிக்கோடு மலபார் கிறித்துவக் கல்லூரியில் [1] விரிவுரையாளராக சேர்ந்தார். 1965இல் மூத்த விரிவுரையாளராக கண்ணூரின் பையனூர் கல்லூரிக்குச் சென்றார். 1989ஆம் ஆண்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கற்பித்தல் பணிக்குப் பின்னர் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு சிறீ சங்கராச்சாரியார் சமசுகிருத பல்கலைக்கழகத்தில் மலையாள பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

வகித்த பதவிகள்[தொகு]

அனைத்து கேரள தனியார் கல்லூரி ஆசிரியர் சங்கத்தில் [2] ) சந்திரசேகரன் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். மேலும் கல்லூரி குழு செயலாளர், பிராந்திய செயலாளர், பிராந்திய தலைவர், பொது செயலாளர் மற்றும் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். சங்க பிரதிநிதியாக, இவர் கோழிக்கோடு பல்கலைக்கழக செனட் மற்றும் சிண்டிகேட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கேரள சாகித்ய அகாதமியின் பொதுக்குழு மற்றும் அதன் செயற்குழு உறுப்பினராக இருந்தார். [3] 2006 முதல் 2013 வரை கோழிக்கோடு நகர சேவை கூட்டுறவு வங்கியின் இயக்குநர்களில் ஒருவராக சந்திரசேகரன் இருந்தார் [4] சந்திரசேகரன் 2012இல் நிறுவப்பட்ட துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகத்தின் கல்விக் குழுவில் உறுப்பினராக உள்ளார் [5] [6]

1961ஆம் ஆண்டில், கேரள சாகித்ய சமிதியின் குட்டிபுழா கிருஷ்ண பிள்ளை தலைவராகவும் , எஸ்.கே.போட்டெக்காட், துணைத் தலைவராகவும் கோழிக்கோட்டில் பொதுச் செயலாளராக என்.வி.கிருஷ்ணா வாரியர், சந்திரசேகரன் மற்றும் வயலார் ராமவர்மா ஆகியோர் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். பின்னர் இவர் பொதுச் செயலாளராகவும் அமைப்பின் தலைவராகவும் பணியாற்றினார்.

1969ஆம் ஆண்டில் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாடு, எம்.எஸ்.தேவதாஸ் மற்றும் பி.கோவிந்தபிள்ளை ஆகியோருடன் கேரளாவில் தீவிரமான மற்றும் பரவலான இலக்கிய இயக்கமாக அமைந்திருந்த தேசபிமானி ஆய்வு வட்டம் அமைப்பதிலும் இவர் ஈடுபட்டார் [7] 1976-80 காலப்பகுதியில் பையனூரிலிருந்து "சாகித்ய சமிதி மசிகா" என்ற இலக்கிய விமர்சன இதழை வெளியிட்டார். 1969ஆம் ஆண்டில் இவர் கேரள பாஷா நிறுவனத்தில் ஆராய்ச்சி அதிகாரியாக இருந்தபோது, " கைரலி" என்ற இதழின் இதழின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றினார்.

1989 இல் ஓய்வு பெற்ற பின்னர், கண்ணூரிலிருந்து வெளியிடப்பட்ட "சிந்தனா" என்ற பத்திரிகையின் ஆசிரியர் பதவியை இவர் ஏற்றுக்கொண்டார். இவர் சி.எம்.பி.யின் வார இதழான மலையாள மன்னுவின் ஆசிரியராக இருந்தார். 1990 முதல் 2013 வரை பத்திரிகைக்கு சேவை செய்தார்

விருதுகள் மற்றும் கௌரவங்கள்[தொகு]

சந்திரசேகரன் தனது "இன்னும் இனலேயும்" என்ற மலையாள புத்தகத்திற்காக இலக்கிய விமர்சனத்திற்காக 2010 கேரள சாகித்ய அகாடமி விருதை வென்றுள்ளார். 2005ஆம் ஆண்டுக்கான கேரளத்தில புரோகமண சாகித்ய பிரஸ்தானதின்தே சரித்திரம் என்ற புத்தகத்திற்காக இலக்கியத்தில் முற்போக்கான பள்ளி ஆய்வுக்காக மருத்துவர் சிபிமேனன் விருதை வென்றார்.

மொழிபெயர்ப்பாளராக மலையாள இலக்கியத்திற்கு இவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக எம்.என் சத்யார்த்தி விருது இவருக்கு வழங்கப்பட்டது. பல பிரபலமான இந்திய மொழிப் படைப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்த்ததற்காக நினைவுகூரப்பட்ட எழுத்தாளரின் நினைவாக இந்த விருதை எம்.என்.சத்யார்த்தி அறக்கட்டளை நிறுவியுள்ளது. இவருக்கு 2018 ஆம் ஆண்டிற்கான எம்.வி.ஆர் விருது வழங்கப்பட்டது https://www.mathrubhumi.com/print-edition/kerala/thiruvananthapuram-1.3290187

தற்போது[தொகு]

இவர் இப்போது கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் ஒற்றப்பாலத்தின் பனமண்ணாவில் வசித்து வருகிறார். இவர் தனது எழுத்துக்களில் தீவிரமாக உள்ளார். மேலும் இயற்கை வேளாண்மையையும் செய்து வருகிறார். இவரது மனைவி வப்பலகலதில் விஜயகுமாரி 2013 திசம்பரில் காலமானார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Malabar Christian College".
  2. "AKPCTA Official Website - Official Website". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது.
  3. "Administration of the Akademi". மூல முகவரியிலிருந்து 19 January 2015 அன்று பரணிடப்பட்டது.
  4. "Calicut City Service Co-Operative Bank Ltd.".
  5. "Malayalam Sarvakalasala".
  6. "The Academic Council - Malayalam Sarvakalasala". மூல முகவரியிலிருந்து 2015-05-13 அன்று பரணிடப்பட்டது.
  7. Pillai, P. Govinda (1 January 1975). "Deshabhimani Study Circles: Literary Movement in Kerala". Social cientist 4 (2): 56–60. doi:10.2307/3516305.