எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
பிறப்புஎம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
1940
இறப்பு2 ஆகத்து 2012(2012-08-02) (அகவை 72)[1]
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை
பணிநடிகர்

எம். ஆர். கே என பிரபலமாகக் குறிப்பிடப்பட்டவரான எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி (1940–2012) என்பவர் ஒரு திரைப்பட நடிகரும், நாடக நடிகருமாவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் தோன்றியுள்ளார். இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார் மற்றும் 500 க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

எம்.ஆர்.கேவின் முக்கிய படங்களில் குறிப்பாக வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன், பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே மற்றும் இரசினிகாந்து நடித்த தர்மத்தின் தலைவன், அருணாசலம் போன்ற படங்களிலும், கமல்ஹாசனின் மகராசன், விக்ரமின் தில் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் மறைந்த புகழ்பெற்ற இயக்குனர் சி. வி. ஸ்ரீதரிடம் ஒரு ஓடை நதியாகிறது படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அப்படத்தில் ரகுவரன் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். வி. கோபால கிருஷ்ணன் மற்றும் செந்தமரை போன்றவர்கள் நடத்திய நாடகக் குழுக்களிலும் இவர் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் நடித்தார். இவர் திரைப்படங்களிலும் மேடைகளிலும் பிரபலமான நடிகராக இருந்தார்.[2]

பகுதி திரைப்படவியல்[தொகு]

ஆண்டு படம் மொழி பாத்திரம் குறிப்புகள்
1969 காவல் தெய்வம் தமிழ்
1972 தவப்புதல்வன் தமிழ்
1983 வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன் தமிழ்
1983 ஒரு ஓடை நதியாகிறது தமிழ்
1986 புதிய பூவிது தமிழ்
1988 தர்மத்தின் தலைவன் தமிழ்
1990 அதிசயப் பிறவி தமிழ்
1990 மல்லுவேட்டி மைனர் தமிழ் பரமசிவம்
1990 நாங்கள் புதியவர்கள் தமிழ்
1990 புது வசந்தம் தமிழ்
1990 பொண்டாட்டி தேவை தமிழ் நாயுடு
1990 தாலாட்டு கேக்குதம்மா தமிழ்
1992 சேவகன் தமிழ் ஆறுமுகம்
1992 தலைவாசல் தமிழ்
1992 உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் தமிழ்
1993 மகராசன் தமிழ்
1993 உள்ளே வெளியே தமிழ்
1994 நம்ம அண்ணாச்சி தமிழ்
1995 புதிய ஆட்சி தமிழ்
1995 சீதம் தமிழ்
1996 சேனாதிபதி தமிழ்
1997 அருணாச்சலம் தமிழ்
1997 தேடினேன் வந்தது தமிழ்
1998 புதுமைப்பித்தன் தமிழ்
2001 தில் தமிழ்
2001 12 பி தமிழ் சக்தியின் மாமா
2003 சாமி தமிழ்
2008 சேவல் தமிழ்

இறப்பு[தொகு]

எம்.ஆர்.கே 2012 ஆகத்து 2 அன்று இறந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இவர் சில மாதங்களாக படுக்கையில் இருந்தார். இவரது மனைவி 2008 இல் இறந்தார், எம்.ஆர்.கேவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு.[சான்று தேவை]

குறிப்புகள்[தொகு]

  1. "Actor MRK passes away in Chennai | CineBuzz - Movies - ChennaiOnline". chennaionline.com. 8 August 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2014-08-06 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Actor MRK passes away | நடிகர் எம்ஆர்கே மரணம் | நடிகர் எம்ஆர்கே மரணம் - Oneindia Tamil". tamil.oneindia.in. 10 August 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-06 அன்று பார்க்கப்பட்டது.