எம். ஆர். கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். ஆர். கண்ணன் (M. R. Kannan)(பிறப்பு 1922) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்த கண்ணன், சென்னை மாவட்டம் சென்னை அண்ணாபிள்ளை தெருவில் வசித்து வந்தார். இவர் எம். பி. யூ. உயர்நிலைப் பள்ளியிலும் சென்னை, இந்து இறையியல் உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றுள்ளார். இவர், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். கண்ணன் 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக பேசின்பிரிட்ஜ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1967 பேசின்பிரிட்ஜ் திமுக 40,109 52.38
1971 பேசின்பிரிட்ஜ் திமுக 48,959 55.39

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாட்டுச் சட்டப் பேரவை ”யார் எவர்” [Madras Legislative Assembly "Who's Who"]. 01.03.1968: Tamil Nadu Legislative Assembly Department. 1968. பக். 96. 
  2. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்” [Tamil Nadu Legislative Assembly "Who's Who"]. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. பக். 142. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஆர்._கண்ணன்&oldid=3538132" இலிருந்து மீள்விக்கப்பட்டது