உள்ளடக்கத்துக்குச் செல்

எம்மி ஆபிரகாம்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2011 கோட்போர்க்கு புத்தகக் கண்காட்சியில் எம்மி ஆபிரகாம்சன்

எம்மி சூலியா கரோலினா கோகுலா ஆபிரகாம்சன் (Emmy Julia Carolina Kocula Abrahamson) சுவீடிய நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகையும் எழுத்தாளரும் ஆவார். 1976 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். மாசுகோவில் வளர்ந்தார். பின்னர் இலண்டனில் நாடகம் பயின்றார், ஆம்சுடர்டாமில் ஒரு நடிகராகவும், பின்னர் வியன்னாவில் ஓர் இயக்குனராகவும் கலை இயக்குநராகவும் பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டில் மீண்டும் சுவீடன் நாட்டில் வசிக்கத் திரும்பினார்.[1]

இவரது இலக்கிய அறிமுகமானது 2011 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அடுத்த ஆண்டிலேயே குழந்தைகள் மற்றும் இளம் வயது இலக்கியத்திற்கான பிரிவில் ஒரு புத்தகம் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.[2]

எம்மி ஆம்சுடர்டாமில் தங்கியிருந்த போது கணவர் விக் கோகுலாவை சந்தித்தார். விக் அப்போது வீடற்ற மனிதராக இருந்தார். அவர் வியன்னாவுக்குத் திரும்பிச் சென்றார். புதரில் வாழும் ஒரு மனிதனை எப்படி காதலிப்பது என்று எமி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Emmy Abrahamson". Rabén & Sjögren. Archived from the original on 2 February 2014. Retrieved 11 June 2012.
  2. "LIBRIS – sökning: emmy abrahamson". libris.kb.se (in ஸ்வீடிஷ்). Retrieved 2012-07-11.
  3. "Emmy Abrahamson discusses how she met her husband on "This Morning" with Philip & Holly". YouTube.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்மி_ஆபிரகாம்சன்&oldid=3868908" இலிருந்து மீள்விக்கப்பட்டது