எம்மா வுசோத்சுகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம்மா வுசோத்சுகி (Emma Vyssotsky) (அக்தோபர் 23, 1894 – மே 12, 1975[1]), பென்சில்வேனியா, மீடியா வில் எம்மா வில்லியம்சு என்ற பெயரில் பிறந்தார். இவர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

இவர் 1930 இல் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் தன் முனைவர் பட்ட்த்தைப் பெற்றார். இவரது வாழ்க்கைப்பணி வர்ஜீனியா பல்கலைக்கழக மெக்கார்மிக் வான்காணகத்தில் அமைந்தது. அங்கு, இவர் விண்மீன்களின் இயக்கமும் பால்வெளியின் இயங்குவடிவியலும் பற்றிய சிறப்புப் புலத்தில் பணிபுரிந்தார்.

இவர் உருசிய வானியலாளராகிய அலெக்சாந்தர் விசோத்சுகியை 1929 இல் மணந்தார். இவர்களது மகனாகிய விக்டர் ஏ.விசோத்சுகி கணிதவியலாளரும் கணினி அறிவியலாளரும் ஆவார். இவர் மல்ட்டிக் திட்ட்த்தில் இணைந்து டார்வின் நிரலீட்டு விளையாட்டை 9கணினி விளையாட்டை) உருவாக்கினார்.

இவர் 1946 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதைப் பெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Florida Death Index, 1877-1998". FamilySearch. பார்க்கப்பட்ட நாள் ஏப்பிரல் 4, 2016.
  2. "Annie Jump Cannon Award in Astronomy". American Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 30, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்மா_வுசோத்சுகி&oldid=3874095" இலிருந்து மீள்விக்கப்பட்டது