எம்மா ரதுகானு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம்மா ரதுகானு
Emma Raducanu
Raducanu WMQ18 (16) (42834286534).jpg
2018 விம்பிள்டன் கோப்பை போட்டியில் ரதுகானு
நாடு பெரிய பிரித்தானியா
வாழ்விடம்இலண்டன், இங்கிலாந்து
பிறப்பு13 நவம்பர் 2002 (2002-11-13) (அகவை 18)
தொராண்டோ, ஒன்றாரியோ, Canada
உயரம்1.75மீ [1]
தொழில் ஆரம்பம்2018
விளையாட்டுகள்வலக்கை
பயிற்சியாளர்ஆன்ட்ரூ ரிச்சார்ட்சன்
பரிசுப் பணம்$2,803,376
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்69–22 (75.82%)
பட்டங்கள்1
அதிகூடிய தரவரிசைஇல. 23 (11 செப்டம்பர் 2021)
தற்போதைய தரவரிசைஇல. 23 (11 செப்டம்பர் 2021)
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள்
விம்பிள்டன்4R (2021)
அமெரிக்க ஓப்பன்வெ (2021)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்0–0
பட்டங்கள்0
இற்றைப்படுத்தப்பட்டது: 11 செப்டம்பர் 2021.

எம்மா ரதுகானு (Emma Raducanu; பிறப்பு: 13 நவம்பர் 2002) பிரித்தானியத் தென்னிசு வீராங்கனை ஆவார்.[2][3] இவர் 2021 அமெரிக்க ஓப்பன் கோப்பையை வென்றுள்ளார். உலக அளவில் பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் 23 வது இடத்தையும், பிரித்தானியாவில் 1-வது இடத்தையும் 2021 செப்டம்பர் 11 இல் கைப்பற்றினார்.

உலகத் தர வரிசையில் 338 ஆவதாக இருந்து, முதல் தடவையாக பெருவெற்றித் தொடரில் 2021 விம்பிள்டன் போட்டியில் நான்காவதாக வந்தார்.[4] இதன் மூலம் 2021 அமெரிக்க ஓப்பன் போட்டியில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தது. 2021 அமெரிக்க ஓப்பன் போட்டியில் இறுதிச் சுற்றில் கனடாவின் லைலா பெர்னாண்டசை 6–4, 6–3 என்ற நேர்க்கணக்கில் வெற்றி பெற்று, 1977 இல் வெற்றி பெற்ற வெர்ஜினியா வேடிற்குப் பின்னர் முதலாவது பிரித்தானியப் பெண்ணாக பெருவெற்றித் தொடர் ஒன்றில் கோப்பையை வென்று சாதனை படைத்தார்.[2][5][6] அத்துடன் மரியா சரப்போவாவின் 2004 சாதனையை முறியடித்து, உலகிலேயே மிக இளம் வயதில் பெருவெற்றித் தொடரை வென்ற வீராங்கனை என்ற சாதனையையும்,[7] செரீனா வில்லியம்சின் 2014 சாதனையை முறியடித்து ஒரு செட் கூட விட்டுக் கொடுக்காமல், அமெரிக்க ஒப்பன் தொடரை வென்ற இளம் வயது வீராங்கனை[7] என்ற சாதனையையும் இவர் ஏற்படுத்தினார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

எம்மா ரதுகானு கனடா, தொராண்டோ நகரில் பிறந்தார். இவரின் தந்தை இயன் உருமேனியாவையும், தாயார் ரெனீ சீனாவையும் சேர்ந்தவர்கள்.[8][9][10] இரண்டு வயதிலேயே குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் குடியேறினார்.[11] இலண்டனில் வளர்ந்த ரதுகானு, பாலே, குதிரையேற்றம், நீச்சல், கூடைப்பந்து, போன்ற பல விளையாட்டுகளைப் பயில ஆரம்பித்து, இறுதியில் புரோம்லி தென்னிசுக் கழகத்தில் ஐந்தாவது அகவையில் தென்னிசில் பயிற்சி பெற ஆரம்பித்தார்.[7][12]

ஒற்றையர் ஆட்டம்[தொகு]

பெருவெற்றித் தொடர் இறுதி[தொகு]

முடிவு ஆண்டு சுற்று தரை எதிராளி புள்ளிகள்
வெற்றி 2021 அமெரிக்க ஓப்பன் கடின கனடா லைலா பெர்னாண்டசு 6–4, 6–3

மேற்கோள்கள்[தொகு]

 1. "Wimbledon bio". பார்த்த நாள் 8 September 2021.
 2. 2.0 2.1 "Raducanu beats Bencic, becomes 1st qualifier to reach US Open semis in Open Era".
 3. MaHoney, Brian. "Global citizens, teen US Open finalists have fans all over".
 4. "Brit Raducanu, 18, into Wimbledon 4th round" (en) (2021-07-03).
 5. "Emma Raducanu roars past Sakkari to set up US Open final against Fernandez". Guardian (10 September 2021). பார்த்த நாள் 10 September 2021.
 6. [1]
 7. 7.0 7.1 7.2 "18 வயதில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற இளம்புயல் எம்மா ரடுகானு". பிபிசி தமிழ் (12 செப்டம்பர் 2021). பார்த்த நாள் 12 செப்டம்பர் 2021.
 8. "Emma Raducanu – Who is Britain’s Chinese-Romanian teen tennis star". South China Morning Post (Hong Kong). 2021-07-05. https://www.scmp.com/sport/china/article/3139848/emma-raducanu-who-britains-chinese-romanian-teen-tennis-star. 
 9. "Meet Emma Raducanu". பார்த்த நாள் 10 September 2021.
 10. "Emma Raducanu shock at reaching US Open semi-finals in New York". பார்த்த நாள் 10 September 2021.
 11. "Nothing to fear for Emma Raducanu in draw filled with intrigue". தி டைம்ஸ் (5 July 2021). மூல முகவரியிலிருந்து 5 July 2021 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 July 2021.
 12. "Emma Raducanu > Bio". WTA.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்மா_ரதுகானு&oldid=3278702" இருந்து மீள்விக்கப்பட்டது