எம்மலின் பான்கர்ஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்மலின் பான்கர்ஸ்ட்
எம்மலின் பான்கர்ஸ்ட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 ஜூலை, 1858
இங்கிலாந்து
இறப்பு14 ஜூன் , 1928
ஹாம்ப்ஸ்டெட், லண்டன்
அரசியல் கட்சிமகளிர் சமுதாய மற்றும் அரசியல் கூட்டமைப்பு
துணைவர்ரிச்சர்ட் பான்கர்ஸ்ட்

எம்மலின் பான்கர்ஸ்ட் (Emmeline Pankhurst, 15 ஜூலை, 1858 - 14 ஜூன் , 1928 ) ஒரு பெண் அரசியல் போராளி ஆவார். பெண்களுக்கான வாக்குரிமைக்காகக் குரல் கொடுத்து அதை பெற்றுத் தந்த உலகின் முதல் பெண்.[சான்று தேவை] 1999 ஆம் ஆண்டு டைம் இதழ் இவரை 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய 100 நபர்களில் ஒருவராக அறிவித்தது.[1]

பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை[தொகு]

இவர் 1858ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் நாள் இங்கிலாந்தில் பிறந்தார். சிறுவயதிலே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பலவற்றையும் கண்டு வேதனையடைந்தார். இந்த நிலைமையை மாற்றி அமைக்க உறுதியேற்றார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

அவர் வாழ்ந்த காலத்தில் பெண்களுக்கு வாக்கு உரிமை மறுக்கப்பட்டது. இதனை “சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்கும் திறன் பெண்பாலுக்கு இல்லை" என்று கேலி பேசப்பட்டது. பெண்கள் இயக்கத்தில் சேர்ந்து எம்மலின் அவர்களின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுக்கத் தொடக்கினார். இதன் பிறகு, 1898ல் "மகளிர் சமுதாய மற்றும் அரசியல் கூட்டமைப்பு" என்ற அமைப்பை உருவாக்கினர். இவரின் நீண்டக் காலப் போராட்டத்திற்கு பலனிளிக்கும் விதமாக 1918ல் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது.[சான்று தேவை]

இறப்பு[தொகு]

தொடர்ந்து பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த எம்மலின் 1928ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் நாள் மரணமடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்மலின்_பான்கர்ஸ்ட்&oldid=3858023" இலிருந்து மீள்விக்கப்பட்டது