எம்பக்க முருகன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம்பக்க தேவாலயம்

எம்பக்க தேவாலயம் (Embakka Devalaya, சிங்களம்: ඇම්බැක්කේ දේවාලය) இலங்கை வரலாற்றில் கம்பளை இராச்சியத்தின் மூன்றாம் விக்கிரபாகு மன்னனினால் கிபி 1370 இல் அமைக்கப்பட்ட ஒரு முருகன் கோவில் ஆகும்.[1]

வாய் மொழி வரலாறு[தொகு]

கண்டி வியனமுழ எனும் இடத்தை சேர்ந்த மேல வாத்தயக்காரன் ஒருவன் கடுமையான குஷ்ட ரோகத்தால் அவதியுற்ற போது தன்னை இந்த நோயின் அவலத்திலிருந்து மீட்டெடுக்கும்படி அவன் கதிரமலைக் கந்தனிடம் (முருகனிடம்) தவஞ்செய்து நேர்த்திக் கடன் வைத்தான். அதனைத் தொடர்ந்து அவனுக்கு அந்த நோயில் இருந்து சுகம் கிடைத்தது.அதனால் மகிழ்ச்சியடைந்த அவன், வருடந்தோறும் கதிர்காமத்துக்குச் சென்று, பூஜை வழிபாடுகள் செய்து கந்தப் பெருமானை வழிபட்டு வந்தான்.ஒருநாள் கதிர்காமக் கந்தன் அவனுக்கு காட்சியளித்து எம்பக்க எனும் ஊருக்குப் போகும் படியும், ஊரில் நல்ல தகவல் கிடைக்குமென்றும் அருளிச் சென்றார்.எம்பக்க எனும் ஊருக்கு அவன் போன போது அவனுக்கு அந்த விசித்திரமான செய்தி கிடைத்தது.'எம்பக்க' என்ற கிராமத்து தச்சன் ஒருவன் கதிர மரம் ஒன்றை தரிசித்தபோது ஐந்தாறு அடி உயரத்துக்கு அதில் இருந்து இரத்தம் சீறிப் பாய்ந்ததாம். உடனே அவ்விடத்துக்குச் சென்ற வாத்தியக்காரன் கதிர்காமக் கந்தன் தனக்கு காட்சியளித்து சொன்ன செய்தியைக் கூறி மேலவாத்தியம் இசைத்து வழிபடத் தொடங்கினான்.அதை கண்ட ஊர் மக்களும் கதிரமலைக் கந்தனை (முருகனை) வழிபடத் தொடங்கினர்.[2]

வரலாறு[தொகு]

கி.பி. 1370 ஆம் ஆண்டு கம்பளை இராச்சியத்தை 3 ஆம் விக்கிரமபாகு மன்னன் ஆட்சி செய்தபோது எம்பெக்க என்ற இடத்தில் மக்கள் கதிர்காமக் கந்தனுக்கு வழிபாடு செய்வதை கண்ணுற்று அங்கு ஒரு தேவாலயத்தை அமைக்க நன்கொடையும் உதவி, உபகாரங்களும் செய்துள்ளான்.[3] தேவாலயத்தின் பணிகளுக்கென 67 பேரை நியமித்தான். இக்கோயிலின் நிர்வாகத்தை அரத்தன பணிக்கி என்ற மேல வாத்தியக்கார வம்சத்தினரே கவனித்து வருகின்றனர். இக்கோவிலின் பூந்தோட்டத்தினை கவனித்துக் கொண்டிருப்பவர்கள் 'கங்காணி வீட்டு' (தச்சன்) பரம்பரையினர். பிரதான நிர்வாகிகளாக விதானை ஒருவரும், வண்ணக்குரால என்பவரும் நிலமேயால் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்றும் தேவாலய நிர்வாகத்தை அரசனால் அன்று நியமிக்கப்பட்ட வம்சத்தினரே கவனித்து வருகின்றனர்.[4]

தேவாலயத்தின் கட்டிடஅமைப்பு[தொகு]

தேவாலயம் ஐந்து வேறு வேறான கட்டிடங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது

தேவாலயத்தின் கட்டிடக்கலை[தொகு]

தேவாலயத்தின் கட்டிடத் தொகுதி எட்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

தேவாலயத்தின் கூரை அமைப்பு[தொகு]

எம்பக்க தேவாலயத்தின் கூரை

மேலவாத்திய மண்ட கூரை அமைப்பு பல தனிச் சிறப்பு உடைத்து

வாத்தியக்கார மண்டபம் என்றழைக்கப்படும் முன் மண்டபம் சற்று நீண்டதும் அகலமானதுமாகும். இதன் நீளமான பக்கத்தில் ஆறு தூண்களும், அகலமான பக்கத்தில் நான்கு தூண்களும் கூரையைத் தாங்கி நிற்கின்றன.

அதனைத் தவிர உட்புறம் நான்கு பக்கத்திலும் வரிசையாக மொத்தம் 32 தூண்கள் மேலும் கூரையைத் தாங்கி நிற்கின்றன. கூரையைத் தாங்கும் தூண்களுக்கும் கூரைக்கும் இடையில் இணைப்புப் பாலங்களாக சமாந்தரங்களாக இடது புறமாகவும் வலது புறமாகவும் 7 ஜோடித் தூண்கள் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ளன.

  • கூரையில் அகலவாக்கில் 12 பலகைகளும், நீளவாக்கில் 66 பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர கூரையின் இறங்கு பிரதேசத்தைப் பிரித்து அவற்றில் இரு புறமும் நீளவாக்கில் 41 பலகைகளும், அகலவாக்கில் 12 பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பலகைகள் அனைத்தும் கூரையின் உச்சியில் இருந்து நாலாபுறமும் விரிந்து, ஒரு குடையை விரித்து வைத்த மாதிரி கூரையைத் தாங்கி நிற்கும் கிடையான தூண்களின் மேல் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கூரையின் உச்சியில் "குருப்பாவை' என்றழைக்கப்படும் உத்தரத்தில் பிணைக்கப்பட்டிருக்கும்.

கலை அம்சம் கொண்ட பூமடலுடன் செதுக்கப்பட்டுள்ள இத்தகைய 'குருப்பாவை' யுடன் கூடிய உத்தரத் தூண் வேறு எங்குமே கிடையாது என்று சொல்லப்படுகின்றது. எந்த விதமான இரும்பு ஆணி வகைகளும் பாவிக்கப்படாமல் முற்றிலும் மரப் பொறிமுறை வேலைப்பாடுகள் மட்டுமே கொண்டு முழுக் கூரையும் அமைக்கப்பட்டுள்ளமையாகும்.

மரச் சிற்பக்கலை[தொகு]

தெல்மட தேவேந்திர மூலாச்சாரியார் தலைமையின் கீழ் நூற்றுக்கணக்கான சிற்பிகள் தேவாலயம் முழுவதும் மரச் சித்திர வேலைப்பாடுகளை செய்துள்ளனர்

  • ஒரு தூணில் 4 என 32 தூண்களில் காணப்படும் மரச் சித்திர செதுக்கல்கள் 128
  • ஒரு தூணில் 8 என 32 தூண்களில் காணப்படும் சீவல் மர செதுக்கல்கள் 256
  • தூண்உச்சியில் செதுக்கப்பட்டுள்ள அலங்கார தாமரை மலர் வடிவங்கள் 64
  • உத்தரத் தூண் மரச் சித்திர செதுக்கல்கள் 30
  • உத்தர கிடைத் தூண் மரச் சித்திர செதுக்கல்கள் 36

மொத்தம் 514 [5]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]