எம்டன் ஆழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்டன் ஆழம் is located in பிலிப்பீன்சு
எம்டன் ஆழம்
எம்டன் ஆழம்
பிலிப்பீன் அகழியில் எம்டன் ஆழத்தின் தோராயமான இருப்பிடம்

எம்டன் ஆழம் (Emden Deep) தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஆழமான பகுதியாகும். காலாத்தியா ஆழம் என்ற பெயராலும் இப்பகுதி அழைக்கப்படுகிறது. 10540 மீட்டர் ஆழம் (34,580 அடி) கொண்ட பிலிப்பீன் அகழியைக் காட்டிலும் 6000 மீட்டர் அதிக ஆழம் (20000 அடி) கொண்டதாக எம்டன் ஆழம் கருதப்படுகிறது.

1927 ஆம் ஆண்டு செருமானிய கப்பலான எம்டனால் எம்டன் ஆழம் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. முதன்முதலில் 1951 ஆம் ஆண்டு டென்மார்க்கு நாட்டு கப்பலான கலாத்தியாவால் அதன் இரண்டாவது பயணத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இதனால்தான் காலாத்தியா ஆழம் என்ற பெயரையும் இப்பகுதி பெற்றது.[1] மீன்கள், பன்முகக்காலிகள், முட்தோலிகள், பாக்டீரியாக்கள் போன்றவை டென்மார்க்கு நாட்டின் காலாத்தியா பயணத்தின் போது சேகரிக்கப்பட்ட உயிரியல் மாதிரிகளாகும். இவை அங்கு உயிர்வாழ்வது மட்டுமல்லாமல், கடலின் ஆழமான பகுதிகளில் செழித்து வளர்ந்தன என்பதையும் இப்பயணம் முதன்முறையாக நிரூபித்தது.[2][3] இப்பயணத்தின் போது, ​​பிலிப்பீன்சு அகழி கடலின் ஆழமான பகுதியாக இருந்தது.

மார்ச் 23, 2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 23 ஆம் நாள் அமெரிக்க கடலடி ஆய்வாளர் விக்டர் வெசுகோவோவும் பிலிப்பீன்சு கடல் ஆய்வாளர் தியோ புளோரன்சு ஓண்டாவும் எம்டன் ஆழத்திற்கான முதல் குழுவாக கடலுக்குள் இறங்கினர்.[4][5] இந்த பயணத்தில் நீருக்கடியில் கடற்பரப்புக்கு அருகில் பரந்த குப்பைகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.[6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்டன்_ஆழம்&oldid=3442589" இலிருந்து மீள்விக்கப்பட்டது