உள்ளடக்கத்துக்குச் செல்

எமெய் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எமெய் மலை
எமெய்சான் Emei Shan
உயர்ந்த புள்ளி
உயரம்3,099 m (10,167 அடி)
புடைப்பு1,069 m (3,507 அடி)
பட்டியல்கள்சீனாவிலுள்ள மலைகள்
ஆள்கூறு29°31′11″N 103°19′57″E / 29.51972°N 103.33250°E / 29.51972; 103.33250
புவியியல்
எமெய் மலை is located in Sichuan
எமெய் மலை
எமெய் மலை
எமெய் மலை is located in சீனா
எமெய் மலை
எமெய் மலை
நாடுசீனா
மாகாணம்சிச்சுவான்
நகராட்சிஎமெய்சான் நகரம்
அலுவல் பெயர்லுசான் மாபெரும் புத்தர் காட்சிப் பரப்பை உள்ளடக்கிய எமெய் மலை காட்சிப் பரப்பு,
வகைகலவையானது
வரன்முறைiv, vi, x
தெரியப்பட்டது1996 (20-ஆவது அமர்வு)
உசாவு எண்779
மண்டலம்ஆசிய பசிபிக்

எமெய் மலை ([ɤ̌.měi]; சீன மொழி: 峨眉山[1]; பின்யின்: Éméi shān), அல்லது ஓமெய் மலை எனப்படுவது சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 3,099 மீட்டர் (10,167 அடி) உயரமுள்ள ஒரு மலை. இந்த மலை சீனாவிலுள்ள நான்கு புனித புத்த மலைகளுள் உயரமானதாகும்.[2] இது சிச்சுவான் படுகையின் மேற்கு விளிம்பில் அமைந்துள்ளது. இதற்கு மேற்கே உள்ள மலைகள் டாசியாங்லிங் மலைத்தொடர் என்று அறியப்படுகின்றன.[3]

இந்த மலையைச் சுற்றியுள்ள ஒரு பெரிய நாட்டுப்புறப்பரப்பு, புவியியல் முறையில், பெர்மியன் எமெய்சான் மாபெரும் தீப்பாறை மாகாணம் என்று அழைக்கப்படுகிறது, இது பெர்மியன் காலத்தைச் சேர்ந்த எமெய்சன் அடுக்குக் கற்பாறை எரிமலைக் கக்குதல்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு பெரிய தீப்பாறை மாகாணமாகும்.

ஆட்சிமுறைப்படி, எமெய் மலை அதன் பெயரால் வழங்கப்படும் வட்டார நிலை நகரமான எமெய்சான் நகருக்கு அருகில், மாகாண நிலை நகரான லுசானின் ஒரு பகுதியாக உள்ளது. இது 1996-ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக ஆக்கப்பட்டது.[4]

பெயர்

[தொகு]
எமெய் மலை
சீன எழுத்துருவில் எமெய் மலை
சீன மொழி 峨眉山[1]

எமெய் என்ற சொல் சீன மொழியில் "விட்டில் பூச்சியின் உணரி" என்று பொருள்படும்.[5]

புத்தமதத் தொடர்பு

[தொகு]

புனித மலை

[தொகு]

சீனாவிலுள்ள நான்கு புனித புத்த மலைகளுள் ஒன்றான இந்த மலை, பாரம்பரிய முறைப்படி சமந்தபத்திரர் என்று அறியப்படும் பூசியன் போதிசத்துவரின் (普賢菩薩) போதிமண்டம், அதாவது அறிவொளியடைந்த இடம், எனக் கருதப்படுகிறது.

சீன மக்கள் தங்களுடைய "வானுலகிற்கான வேண்டல்களை" அனுப்ப இந்த மலைக்கருகில் எரியும் சந்தனமரக்கட்டைகளைக் கொடுக்கின்றனர்.[6] சீன புத்தப் பயணிகள் இந்த மலைக்கு வழமையாகப் பயணம் மேற்கொள்கின்றனர்.

பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த தரவுமூலங்கள் எமெய் மலையின் மடங்களில் போர்க்கலைகள் பயிலப்பட்டதைக் குறிப்பிடுகின்றன.[7] இது சீனப் போர்கலைகளின் பிறப்பிடமாக சாவொலின் மடம் இருந்ததற்கான முற்காலத்தைய மேற்கோளாகும்.[8]

கட்டிடக்கலை

[தொகு]

பொது ஊழியின் முதலாம் நூற்றாண்டில் சீனாவில் கட்டப்பட்ட முதல் புத்தக் கோவில் அமைந்த இடம் இதுவாகும்.[4] இந்த இடத்தில் மிங் மற்றும் சிங் அரசமரபுகளின் எழுபத்தாறு புத்த மடங்கள் உள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை மலையுச்சிக்கு அருகில் அமைந்துள்ளன. இந்த மடங்கள், அவையிருக்கும் நிலவமைப்புக்கேற்றவாறு நெகிழ்வான கட்டிடக்கலைப் பாணியைக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, பாவ்குவோசியின் கூடங்களைப் போன்ற சில, பல்வேறுபட்ட அடுக்குகளைக் கொண்ட மாடிகளில் கட்டப்பட்டுள்ளன, லெயின்சியின் கட்டுமானங்களை உள்ளடக்கிய மற்றபிற, மேலெழுப்பப்பட்ட நெடுங்கழித்தூண்களின் மேல் கட்டப்பட்டுள்ளன. இயற்கைக் காட்சியை முழுமையாகப் பயன்படுத்தும் வண்ணம், இங்கு முந்தைய காலங்களைச் சேர்ந்த புத்த மடங்களின் நிலையான திட்டங்கள் மாற்றப்பட்டோ புறக்கணிக்கப்பட்டோ உள்ளன. சிங்யிங்யேவின் கட்டடங்கள் கறுப்பு மற்றும் வெள்ளை டிராகன் ஆறுகளுக்கிடையிலுள்ள குறுகிய நிலப்பரப்பில் சீரற்ற மனைகளின் மேல் எழுப்பப்பட்டுள்ளன.

மலையைச் சுற்றி ஐம்பது கிலோமீட்டர் நீளம் கொண்ட சுற்றுநடைபாதை உள்ளது. மலையுச்சியை நடந்து அடைய பல நாட்களாகும்.[9] கம்பிவட ஊர்திகள், பைன் மரங்கள் மேலாக ஜின்டிங்கிற்கும், பின் ஒரு மணிநேர நடைபயண தூரத்தில் மலையின் உச்சிக்கும் சென்றடைவதை எளிதாக்குகின்றன.[2][10]

காலநிலை

[தொகு]

எமெய் மலையின் உச்சிப்பகுதி நீண்ட அவ்வளவாகக் கடுமையானதாக இல்லாத குளிர்காலத்தையும் குறுகிய குளிர்ந்த வேனிற்காலத்தையும் கொண்ட அல்ப்பைன் வடதுருவ அண்மைக் காலநிலையைக் (கோப்பென் Dwc) கொண்டுள்ளது. மாத 24-மணி நேர சராசரி வெப்பநிலை அளவு சனவரியில் −5.7 °C (21.7 °F) இருந்து சூலையில் 11.6 °C (52.9 °F) ஆகவும், ஆண்டின் சராசரி 3.07 °C (37.5 °F) ஆகவும் இருக்கிறது. மழைப்பொழிவு ஆண்டு முழுவதுமே பரவலாக இருக்கிறது (ஆண்டில் 250 நாட்களுக்கும் மேலாக), இருப்பினும் பருவப் பெயர்ச்சியின் தாக்கத்தால் மழையளவு வேனிற்காலத்தில் அதிகமாக இருக்கிறது. ஆண்டின் மொத்த அளவின் 70%-க்கும் மேல் சூனிலிருந்து செப்டம்பர் வரையான காலத்தில் பொழிகிறது.

தாவரவளம்

[தொகு]

எமெய் மலை பெரிய அளவிலான அகணியத் தன்மைக்கு அறியப்படுகிறது. ஏறத்தாழ 200 தாவர இனங்கள் இப்பகுதிக்கு மட்டுமே உரியன. ஒரு அரிய ஊசியிலை மரவகையான அபிஸ் ஃபேப்ரி ஓர் எடுத்துக்காட்டாகும்.

விலங்கினங்கள்

[தொகு]

எமெய் மலையைத் தோற்றிடமாகக் கொண்ட விலங்குகள், முதுகெலும்பிலிகள், தாவரங்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 400 உயிரினங்கள் உள்ளன. சீன நத்தைப் பாம்பு, மாண்டரின் எலிப்பாம்பு, மலைநீர் பாம்பு, பீட்டரின் ஒற்றைச் செதில் பாம்பு, கடுமையான நஞ்சுடையவையான சீன பச்சைமர விரியன், பழுப்பு புள்ளியுடைய குழிவிரியன், தைவான் மலை குழிவிரியன் எனக் குறைந்தது ஆறு பாம்பு வகைகள் இந்தப் பகுதியை தோற்றிடமாகக் கொண்டுள்ளன.

எமெய் மலையைப் பார்வையிட வருபவர்கள் சுற்றுலாப் பயணியரிடமிருந்து உணவைப் பெறும் திபெத்திய மக்காக்களை {மூதுலகக் குரங்குகள்} அடிக்கடி காணலாம். சுற்றுலாப் பயணிகள் குரங்குகளுக்கு உணவளிக்க முயற்சிக்கும் வகையில் உள்ளூர் வணிகர்கள் கொட்டைகளையும் பிற உணவுகளையும் விற்கின்றனர்.

பிற விலங்குகளில் இந்தியக் காட்டு அரணை, லசெர்டா டாகிடிரோமுஸ் இன்டர்மெடீயஸ் போன்ற பல்லிகளும். ராணா அடினோப்ளூரா, விப்ரிசாபோரா லியுயி போன்ற தவளைகளும், அரை மீட்டர் நீளமுள்ள பேருருவ மண்புழு இனமான பெரெட்டீமா பிரேபிங்குயிஸ் போன்றவையும் அடங்கும்.

சான்றுகள்

[தொகு]
  1. 1 2 "Emei" என்ற பெயரில், méi 眉 என்ற எழுத்துரு சிலவேளைகளில் 嵋 என்று குறிக்கப்படும்; "É" 峨 என்ற எழுத்துரு சில வேளைகளில் 峩 என்று குறிக்கப்படும்.
  2. 1 2 Hayes, Holly (2009) Emei Shan, Sacred Destinations. Updated 24 July 2009.
  3. ↑ E.g., 实用中国地图集 (Shiyong Zhongguo Dituji, "Practical Atlas of China"), 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-7-5031-4772-2; map of Sichuan on pp. 142–143
  4. 1 2 "Mount Emei Scenic Area, including Leshan Giant Buddha Scenic Area". UNESCO. Retrieved 2007-09-06.
  5. ↑ Guangwei, He; Hualing, Tong; Wenzhen, Yang; Zhenguo, Chang; Zeru, Li; Ruicheng, Dong; Weijan, Gong, eds. (1999). Spectacular China. Translated by Wusun, Lin; Zhongping, Wu. Cologne: Könemann. p. 98. ISBN 9783829010771.
  6. ↑ Cohen, David, ed. (1989). A Day in the Life of China. San Francisco: William Collins Sons. pp. 108, 150. ISBN 978-0-00-215321-8.
  7. ↑ Zhāng Kǒngzhāo 張孔昭 (c. 1784). Boxing Classic: Essential Boxing Methods 拳經拳法備要 Quánjīng Quánfǎ Bèiyào (in சீனம்).
  8. ↑ Henning, Stanley E. (Fall 1999). "Academia Encounters the Chinese Martial Arts". China Review International 6 (2): 319–332. doi:10.1353/cri.1999.0020. பன்னாட்டுத் தர தொடர் எண்:1069-5834..
  9. ↑ Dazhang, Sun (2002). Chinese Architecture -- The Qing Dynasty (English ed.). Yale University Press. pp. 328–329. ISBN 0-300-09559-7.
  10. ↑ Gluckman, Ron (2002). Getting to the Top, Silk Road, December 2002. Hong Kong; Dragon Airlines.
  11. ↑ "峨眉山城市介绍". Weather China. 2023-04-20. Archived from the original on 2023-04-20.

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
எமெய் மலை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமெய்_மலை&oldid=4640383" இலிருந்து மீள்விக்கப்பட்டது