எமிலி மில்லர்
எமிலி மில்லர் Emily Miller | |
|---|---|
| பிறப்பு | 10 மார்ச்சு 1871 கோவன், இசுக்காட்லாந்து |
| இறப்பு | 10 மார்ச்சு 1962 நியூட்டன் மியர்ன்சு, இசுக்காட்லாந்து |
| பெற்றோர் | ஆன் கல்லாகர் மற்றும் இயான் மில்லர் |
எமிலி மில்லர் (Emily Miller) என்பவர் இசுக்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த செவிலியர் மற்றும் காவலர் அலுவலர் ஆவார். 1871 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 10 ஆம் தேதியன்று பிறந்தார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]எமிலி மில்லர் இசுக்காட்லாந்து நாட்டின் கோவன் மாவட்டத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆன் கல்லாகர் மற்றும் மரச்சாமான்கள் செய்யும் தொழிலாளியான இயான் மில்லர் ஆகியோர் ஆவர்..[1]
தொழில்
[தொகு]கிளாசுக்கோ ராயல் மருத்துவப்பள்ளி மற்றும் கிரீனாக்கு நகரத்திலிருந்த ஏழைகள் இல்லம் மற்றும் புகலிடத்தில் செவிலியராகப் பணியாற்றினார். 1910 ஆம் ஆண்டு முதல் 1915 ஆம் ஆண்டு வரை 'தேசிய விழிப்புணர்வு சங்க அமைப்பிற்காக ஆய்வுகளை மேற்கொண்டார். 1915-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கிளாசுகோ நகரக் காவல் துறையில் அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். இப்பணியை வகித்த முதல் பெண் இவரே ஆவார்.[2][3][4] பாலியல் வன்முறைக்கு ஆளான அல்லது அத்தகைய சம்பவங்களுக்கு நேரில் சாட்சியாக இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் பணியில் இவர் ஈடுபட்டிருந்தார்.[1][5][6]
1920- ஆம் ஆண்டில், சக காவல்துறை அதிகாரியான இயீன் தாம்சனுடன் இணைந்து, காவல்துறைப் பணிகளில் பெண்களைப் பணியமர்த்துவது குறித்த துறைசார் குழுவிடம் இவர் சாட்சியம் அளித்தார். ஆண்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதிய உரிமைகள் மற்றும் கைது செய்யும் அதிகாரங்கள் பெண் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று இவர்கள் வாதிட்டனர்.
மில்லர் 1924-ஆம் ஆண்டில் காவல் துறையிலிருந்து விலகினார்.
அவர் நியூட்டன் மியர்ன்சு நகரத்தில் 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 10 ஆம் தேதியன்று காலமானார்.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Ewan, Elizabeth., ed. (2018). The new biographical dictionary of Scottish women. Edinburgh: Edinburgh University Press. p. 317. ISBN 978-1-4744-3629-8. கணினி நூலகம் 1057237368.
- ↑ "Lady added to glasgow police establishment". The Scotsman. 10 September 1915.
- ↑ Authority, Scottish Police Services. "International Women's Day - Police Scotland". www.scotland.police.uk (in ஆங்கிலம்). Retrieved 2020-05-14.
- ↑ "Glasgow Police "Female Officer"". The Glasgow Herald. 10 September 1915.
- ↑ "How women stopped the police being a man's world" (in en-GB). BBC News. 2017-11-25. https://www.bbc.com/news/uk-scotland-42065874.
- ↑ "Glasgow's Policewomen Pioneers – Glasgow Police Museum". Glasgow Police Museum (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2020-05-14.