எமிலி புராண்ட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எமிலி புராண்ட்டி

எமிலியின் சகோதரன் பிரான்வெல் புராண்ட்டி வரைந்த உருவப்படம்
பிறப்பு எமிலி ஜேன் புராண்ட்டி
சூலை 30, 1818(1818-07-30)
தார்ண்ட்டன், யார்க்‌ஷையர், இங்கிலாந்து
இறப்பு 19 திசம்பர் 1848(1848-12-19) (அகவை 30)
ஹாவொர்த், யார்க்‌ஷையர், இங்கிலாந்து
புனைபெயர் எல்லிசு பெல்
தொழில் கவிஞர், புதின எழுத்தாளர், வீட்டு ஆசிரியை
நாடு இங்கிலாந்து ஆங்கிலேயர்
இலக்கிய வகை புனைவு, கவிதை
இயக்கம் கற்பனையியம் / புனைவியம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
வுதரிங் ஹைட்ஸ்
உறவினர்(கள்) புராண்ட்டி குடும்பம்

எமிலி புராண்ட்டி (Emily Brontë, ஜூலை 30, 1818டிசம்பர் 19, 1848) ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஒரு பெண் கவிஞர் மற்றும் புதின எழுத்தாளர். இவரது ஒரே புதினமான ”வுதரிங் ஃகைட்சு” (Wuthering Heights) ஆங்கில இலக்கியத்தின் செவ்வியல் படைப்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. எமிலி மற்றும் அவரது தங்கைகள் ஷார்லட் மற்றும் ஆனி ஆகியொர் இலக்கிய உலகில் ”புராண்ட்டி சகோதரிகள்” என்றழைக்கப்படுகின்றனர். தன் படைப்புகளை வெளியிட எல்லிசு பெல் என்ற ஆண் புனைப்பெயரை எமிலி பயன்படுத்தினார்.

இங்கிலாந்தில் ஒரு இலக்கிய குடும்பத்தில் பிறந்த எமிலியும் அவரது சகோதரிகளும் சிறுவயது முதலே கவிதைகள் மற்றும் கதைகள் எழுதத் தொடங்கினர். 1846ல் புராண்ட்டி சகோதரிகளின் கவிதைகள் ஒரே கவிதைத் தொகுப்பாக வெளியாகின. இத்தொகுப்பு கவிதை விம்ர்சர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதால், புராண்ட்டி சகோதரிகள் அடுத்து புதினங்கள் எழுதும் முயற்சியில் இறங்கினர். 1847ல் எமிலியின் ”வுதரிங் ஃகைட்சு” வெளியானது. திருமண உறவுக்கு அப்பாற்பட்ட காதல், காமம் போன்ற கருப்பொருளைக் கொண்டிருந்ததால் பெரிதாக வரவேற்கப்படவில்லை. ஆனால் காலப்போக்கில் ஆங்கில செவ்வியல் புதினங்களில் ஒன்றாக பெயர் பெற்று விட்டது. எமிலி 1848ல் உடல் நிலை குன்றி மரணமடைந்தார். அவரது மரணத்துக்குப் பின் அவரது புதினம் அவரது இயற்பெயரில் வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எமிலி_புராண்ட்டி&oldid=1757575" இருந்து மீள்விக்கப்பட்டது