எமிலியோ சாந்தோசு கோர்செரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எ. சாந்தோசு 1972

எமிலியோ சாந்தோசு கோர்செரோ (Emilio Santos Corchero) (பிறப்புஃ அக்டோபர் 7,1935) (சான் விசெண்டே டி அல்காண்டரா, எக்ஸ்ட்ரீமாடுரா ஸ்பெயின்) கோசுட்டா ரிகா பல்கலைக்கழகங்களில் கோட்பாட்டு இயற்பியலாளர் (கோட்பாட்டுப் பேராசிரியராக) உள்ளார். 1998 ஆம் ஆண்டில் எசுப்பானிய இயற்பியல் கழகத்தின் பதக்கத்தை பெற்றார்.

அவரது அறிவியல் பணி ( அறிவியல் இதழ்களில் 100 கட்டுரைகள்) முக்கியமாக குவைய இயக்கவியலின் உயர்வாய்ப்பியல்பு விளக்கத்தை உருவாக்க முனைந்தது, இது கண்டிப்பான காரணத்தை பேணுகிறது (அதாவது " கடவுள் பகடை விளையாடுவதில்லை " என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கருத்தை ஆதரிக்கிறது). அந்த விளக்கத்தில், அளவீடுகளில் முடிவுகளின் விரவலுக்கு, காரணமின்மை (பல குவைய இயற்பியலாளர்கள் நம்புவது போல) காரணத்தைக் காட்டிலும், தொடர்புடைய அனைத்து காரணிகளின் கட்டுப்பாடின்மை காரணமாகும். சுருக்கத்திற்கு, அறிவியலின் அடித்தளங்கள், 20, 357-386 (2015) ஐப் பார்க்கவும், இதற்கான ஒரு பயன்பாடு என்பது குவாண்டம் ஒளியியலில் விக்னர் உருவகத்தைப் பயன்படுத்திய " அளவுரு வழி மாற்றுதல் " செய்முறைகளின் ஆய்வு ஆகும்; காண்க,ஐரோப்பிய இயற்பியல் இதழ் D 13, 109-119 (2001) (A. Casado, TW Marshall மற்றும் R. Risco-Delgado ஆகியோருடன் இணைந்து எழுதிய கட்டுரையையும் அதில் உள்ள மேற்கோள்களையும் சேர்த்து). பெல் சமனின்மைகள், அவற்றின் ஆய்வகச் செய்முறைகள் நம்பகமானதாக இருக்க வேண்டிய தேவைகள் ஆகியவை தொடர்புடைய ஆர்வமுள்ள கருதலாகும். காண்க,. இயற்பியல் கடிதங்கள் 98A, 5-9 (1983) ( F. Selleri மற்றும் TW மார்ஷல் உடன் இணைந்து), இயற்பியல் கடிதங்கள் 115A, 363-365 (1986), இயற்பியல் ஆய்வு A 46, 3646-3656 (1992 இன் பன்னாட்டு இதழ் ) இயற்பியல் 42, 2545-2555 (2003). குவைய வெற்றிடம் உண்மையான புலங்களைக் கொண்டுள்ளது என்ற கருதலின் அடிப்படையில் உயர்வாய்ப்பியல்பு விளக்கம் உள்ளது. வெற்றிடப் புலங்களின் அலைவுகள் அண்டவியலில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட " இருண்ட ஆற்றலை " விளக்கவும்கூடும்; காண்க, வானியற்பியல் மற்றும் விண்வெளி அறிவியல், 332, 423-435 (2011). பொதுவான சார்பியலின் சில மாற்றங்கள் (குவையவழி உருவானதாகவும் இருக்கலாம்) வழுவுநிலைகளுக்கு (" கருந்துளைகள் ") குலைவதைத் தடுக்குமா என்பதைப் பார்ப்பதற்காக , சார்பியல் விண்மீன்களைப் பற்றிய ஆய்வு மற்றொரு கருதலாக உள்ளது; காண்க, வானியற்பியல் மற்றும் விண்வெளி அறிவியல் 341, 411-416 (2012)

2022 இல் சாந்தோசு குவைய இயக்கவியலின் இயல்புநிலை விளக்கம் எனும் புத்தகத்தை வெளியிட்டார். அவரது அறிவியல் வாழ்க்கையை சுருக்கமாகக் கூறி , குவைய நிகழ்வுகளில் உள்ளூர் இயல்புவாதத்தின் வெளிப்படையான மீறல்களை முன்மொழிந்து சில வெற்றிட புலங்களை உண்மையான உறுப்புகளாகக் கருதுவதன் வழி ஒரு நடப்பியலான விளக்கத்தைத் த்ந்தார் .[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]