உள்ளடக்கத்துக்குச் செல்

எமிலியோ கோர்னாலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எமிலியோ கோர்னாலியா
பிறப்புஎமிலியோ கோர்னாலியா
(1824-08-25)25 ஆகத்து 1824
இறப்பு8 சூன் 1882(1882-06-08) (அகவை 57)

எமிலியோ கோர்னாலியா (Emilio Cornalia)(25 ஆகத்து 1824-8 சூன் 1882) என்பவர் இத்தாலிய இயற்கை ஆர்வலர் ஆவார்.[1] இவர் மிலனில் பிறந்து மிலன் நகரத்திலே இறந்தார். 1851 முதல் 1866 வரை மிலன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பாதுகாவலராகவும், 1866 முதல் இறக்கும் வரை இயக்குநராகவும் இருந்தார். இத்தாலிய பூச்சியியல் சங்கமான லா சொசைட்டா என்டோமோலாஜிகா இத்தாலியா நிறுவனத்தை நிறுவியதில் முக்கிய பங்கு வகித்த முன்னணி அறிவியலாளர் குழுவில் இவரும் ஒருவர். 1856ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒருபொருள் வெளியிடான டெல் பாம்பைசு டெல் ஜெல்சோ போன்ற பயன்பாட்டு பூச்சியியலின் முக்கியமான படைப்புகளின் ஆசிரியராக இருந்தார். மேலும் 1873ஆம் ஆண்டில் மேல் நைல் பள்ளத்தாக்கிற்கான அறிவியல் பயணத்தில் பங்கேற்றவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

மல்பெரி பட்டுப்புழு குறித்த ஆய்வு நூல்
மல்பெரி பட்டுப்புழு குறித்த ஆய்வு நூல்
மல்பெரி பட்டுப்புழு குறித்த ஆய்வு நூல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Emilio Cornalia in Dizionario Biografico – Treccani". l'Enciclopedia italiana. Treccani.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமிலியோ_கோர்னாலியா&oldid=4599779" இலிருந்து மீள்விக்கப்பட்டது