எமிலியா பிளேட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Emilia Plater.PNG

கோமாட்டி எமிலியா பிளேட்டர் போலிசு-லிதுவேனிய புரட்சிப் பெண்மணியாவார். இவர் வாழ்ந்த காலம் 1806க்கும் 1831க்கும் இடைப்பட்ட காலமாகும். நவம்பர் புரட்சியில் (போலிசு-உருசியப் போர்) கலந்துகொண்டதற்காக பொதுநலவாய நாடுகளான போலந்து, பெலாரசு, லிதுவேனியா ஆகிய நாடுகளில் போற்றப்படுகிறார்.

வாழ்க்கை[தொகு]

எமிலியா வில்னியசில் பிறந்தார். இவரது குடும்பம் லிதுவேனிய நாட்டிற்கு குடிபெயர்ந்தது. எமிலியா நன்கு கற்றவர். செருமானிய மொழியையும் சிறப்பாக கற்றார். 1831 இல் உடல்நிலை சரியில்லாததால் இறந்தார். பிரபலமான கவிஞர்கள் பலர் இவரை போற்றி பாடியுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எமிலியா_பிளேட்டர்&oldid=2148111" இருந்து மீள்விக்கப்பட்டது