உள்ளடக்கத்துக்குச் செல்

எப். சே. துவார்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எப். சே. துவார்டே, 2006

பிரான்சிஸ்கோ சேவியர் "ஃபிராங்க்" துவார்டே (Francisco Javier "Frank" Duarte, பிறப்பு: சுமார் 1954) என்பவர் சிறந்த சீரொளி இயற்பியலாளர் ஆவார். மேலும் இவர் டியூனபிள் சீரொளிகள் தொடர்பான பல நூல்களை எழுதியுள்ளார்; பதிப்பித்தும் உள்ளார்.[1] இயற்பியல் ஒளியியல், சீரொளி உருவாக்கத்தில் இவர் மேற்கொண்ட பல குறிப்பிடத்தக்க ஆய்வுகளுக்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக, 1995 ஆம் ஆண்டில் என்-ஸ்லிட் சீரொளி குறுக்கீட்டுமானியைக் கண்டுபிடித்தமைக்காக, இவருக்குப் பொறியியல் சிறப்பு விருது வழங்கப்பட்டது.[2]

கல்வி வாழ்க்கை

[தொகு]

துவார்டே சிலியில் உள்ள சாண்டியாகோவில் பிறந்தார். தனது இளமைக் காலத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குடிபெயர்ந்தார். அங்கு முதலில் ஸ்ட்ராத்ஃபீல்டிலும், பின்னர் கோவன் என்ற சிறிய நகரத்திலும் வசித்தார். இவர் மெக்குவாரி பல்கலைக்கழகத்தில் ஜான் கிளைவ் வார்டு என்பவரின் வழிகாட்டுதலில் குவாண்டம் இயற்பியலையும், ரொனால்ட் எர்னஸ்ட் ஐட்சன் என்பவரிடம் குறைகடத்தி இயற்பியலையும் கற்றார். அங்கு ஜேம்ஸ் ஏ. பைப்பர் வழிகாட்டுதலின் கீழ், சீரொளி இயற்பியலில் தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார்.[சான்று தேவை]

பல்கலைக்கழக அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்ட இவர், மெக்குவாரி அறிவியல் சீர்திருத்த இயக்கத்தை நிறுவி அதற்குத் தலைமை தாங்கினார்.[3][4] இந்த இயக்கம் பல்கலைக்கழகத்தின் பட்டப் படிப்பு கட்டமைப்பில், பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. 1980 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய மாணவர் சங்கத்திற்கு மெக்குவாரி பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

துவார்டே 1983 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு அலபாமா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். பின்னர் 1985 ஆம் ஆண்டில் ஈஸ்ட்மேன் கோடாக் நிறுவனத்தின் இமேஜிங் ஆய்வுக்கூடங்களில் இணைந்து 2006 ஆம் ஆண்டு வரை அங்கு பணியாற்றினார். கோடாக் நிறுவனத்தில் இருந்தபோது, லேசர்கள் '87 என்பதிலும், அதன் தொடர்ச்சியாக நடந்த பல மாநாடுகளுக்குத் தலைவராகச் செயல்பட்டார்.[5] இவர் அமெரிக்க இராணுவத்தின் ஏவுகணை, விமானப் போக்குவரத்து கட்டளையகத்துடன் நீண்டகாலத் தொடர்பு கொண்டிருந்தார். அங்கு ட்ராவிஸ் எஸ். டெய்லர் போன்றவர்களுடன் இணைந்து, இயங்கு ஆற்றல் தொடர்பான ஆய்வுகளிலும் பங்கேற்றார்.[6] இவர் 1987 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய இயற்பியல் கழகத்தின் ஃபெலோவாகவும், 1993 ஆம் ஆண்டில் அமெரிக்க ஒளியியல் சங்கத்தின் ஃபெலோவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8]

அறிவியல் ஆய்வுகள்

[தொகு]

துவார்டே, பைப்பருடன் இணைந்து செம்பு-ஆவி சீரொளியால் உந்தப்பட்ட குறுகிய-வரி அகலம் கொண்ட டியூனபிள் லேசர் ஆஸிலேட்டர்களை அறிமுகப்படுத்தினார்.[9] மேலும், அதிவேக சாய சீரொளிகளில் பல்சு கம்ப்ரஷனுக்கான பன்முக முப்பட்டகச் சிதறல் கோட்பாட்டை உருவாக்கினார்.[10][11] யூரேனியம் அணுக்கரு ஆவி சீரொளி ஐசோடோப்புப் பிரிப்பு (AVLIS) ஆய்வில் பல்வேறு குழுக்களால் இவரது டியூனபிள் லேசர் ஆஸிலேட்டர் வடிவமைப்பு பயன்படுத்தப்பட்டது.[12]

1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், படமெடுத்தல், நுண்ணோக்கியியல் பயன்பாடுகளுக்காக, எண்ம முறையில் செயல்படும் என்-ஸ்லிட் சீரொளி குறுக்கீட்டுமானியை இவர் கண்டுபிடித்தார்.[13] குவாண்டம் இயற்பியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி குறுக்கீட்டு விளைவு, விளிம்பு விளைவு, ஒளிவிலகல் போன்ற பாரம்பரிய ஒளியியல் நிகழ்வுகளை விளக்குவதற்காக இவர் பல சமன்பாடுகளைத் தந்துள்ளார். இவரது ஆய்வுகள் விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

  • எடுத்துக்காட்டு சமன்பாடு:

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Francisco J. Duarte". Optica. Retrieved March 26, 2025.
  2. "OSA Announces Recipients of Several Awards". Physics Today 48 (11): 104–105. 1995. doi:10.1063/1.2808274. Bibcode: 1995PhT....48k.104.. "There are six recipients of Engineering Excellence Awards from OSA: Francisco J. Duarte, John D. Gonglewski, Gary Guenther, Melvyn H. Kreitzer, Frank Luecke and David G. Voelz. Duarte, a business leader at Eastman Kodak in Rochester, New York, is recognized for "the invention of an electrooptic coherent interferometer for direct applications to imaging diagnostics of transparent surfaces, such as photographic film and film substrates."".
  3. G. Sheridan, Australian physicist wins Guthrie Medal, The Bulletin 101 (5239) 49-50 (1980).
  4. B. Mansfield and M. Hutchinson, Liberality of Opportunity: A history of Macquarie University 1964-1989 (Hale and Iremonger, Sydney, 1992)
  5. F. J. Duarte, Proceedings of the International Conference on Lasers '87 (STS Press, Mc Lean, VA, 1988).
  6. Duarte, F.J.; Davenport, W.E.; Ehrlich, J.J.; Taylor, T.S. (1991). "Ruggedized narrow-linewidth dispersive dye laser oscillator". Optics Communications (Elsevier BV) 84 (5–6): 310–316. doi:10.1016/0030-4018(91)90093-s. பன்னாட்டுத் தர தொடர் எண்:0030-4018. Bibcode: 1991OptCo..84..310D. https://archive.org/details/sim_optics-communications_1991-08-01_84_5-6/page/310.
  7. Dombey, Norman (2021). "John Clive Ward". Biogr. Mem. Fellows R. Soc. (Royal Society) 70 (1): 419–440. doi:10.1098/rsbm.2020.0023. பன்னாட்டுத் தர தொடர் எண்:0080-4606.
  8. Pryce, M. H. L.; Ward, J. C. (1947). "Angular Correlation Effects with Annihilation Radiation". Nature 160 (4065): 435. doi:10.1038/160435a0. Bibcode: 1947Natur.160..435P. https://archive.org/details/sim_nature-uk_1947-09-27_160_4065/page/435.
  9. Duarte, F. J.; Piper, J. A. (1981-06-15). "Prism preexpanded grazing-incidence grating cavity for pulsed dye lasers". Applied Optics (The Optical Society) 20 (12): 2113–6. doi:10.1364/ao.20.002113. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-6935. பப்மெட்:20332895. Bibcode: 1981ApOpt..20.2113D. https://archive.org/details/applied-optics_1981-06-15_20_12/page/2113.
  10. Duarte, F. J. (1987). "Generalized multiple-prism dispersion theory for pulse compression in ultrafast dye lasers". Optical and Quantum Electronics (Springer Science and Business Media LLC) 19 (4): 223–229. doi:10.1007/bf02032516. பன்னாட்டுத் தர தொடர் எண்:0306-8919. Bibcode: 1987OQEle..19..223D. https://archive.org/details/sim_optical-and-quantum-electronics_1987-07_19_4/page/223.
  11. Duarte, F. J. (2009-04-03). "Generalized multiple-prism dispersion theory for laser pulse compression: higher order phase derivatives". Applied Physics B (Springer Science and Business Media LLC) 96 (4): 809–814. doi:10.1007/s00340-009-3475-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0946-2171. Bibcode: 2009ApPhB..96..809D.
  12. Singh, Sunita; Dasgupta, K.; Kumar, S.; Manohar, K. G.; Nair, L. G.; Chatterjee, U. K. (1994-06-01). "High-power high-repetition-rate copper-vapor-pumped dye laser". Optical Engineering (SPIE-Intl Soc Optical Eng) 33 (6): 1894–1904. doi:10.1117/12.168243. பன்னாட்டுத் தர தொடர் எண்:0091-3286. Bibcode: 1994OptEn..33.1894S. https://archive.org/details/sim_optical-engineering_1994-06_33_6/page/1894.
  13. F. J. Duarte, Electro-optical interferometric microdensitometer system, US Patent 5255069 (1993).
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்._சே._துவார்டே&oldid=4607831" இலிருந்து மீள்விக்கப்பட்டது