உள்ளடக்கத்துக்குச் செல்

எப்ஸ்டீன் கோப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2025 ஆம் ஆண்டு எப்ஸ்டீன் கோப்புகள் கட்டம் 1 வெளியீட்டின் போது ஒரு தொடர்பு புத்தகம் பொதுவில் வெளியிடப்பட்டது. அதன் உள்ளடக்கத்தின் பெரும்பகுதி திருத்தப்பட்டது.[1][2]

எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein files) என்பது அமெரிக்க நிதியாளரும், சிறார் பாலியல் குற்றத்துக்கு தண்டனை பெற்றவருமான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் குற்றச் செயல்களை விவரிக்கும் இலட்சக் கணக்கான ஆவணங்கள், படங்கள், காணொளிகளின் தொகுப்பாகும், இந்தக் கோப்புகளில் அவரது சமூக வட்டம் பொது நபர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் உட்பட பலர் உள்ளனர்.[3] இந்தக் கோப்புகள் எப்ஸ்டீன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் ஆதாரமாக சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் ஆகும். அவை புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகத்தின் (எஃ.பி.ஐ) சென்டினல் வழக்கு மேலாண்மை அமைப்பில் 300 கிகாபைட்டு தரவு மற்றும் பிற ஊடகங்களாக சேமிக்கப்பட்டுள்ளன.[1] அவற்றில் அவரின் தொடர்பில் இருந்தவர்கள், அவரது வானூர்தி பயணப் பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள் ஆகியவை அடங்கும்.[2][4][5] எப்ஸ்டீன் தொடர்பான பல பதிவுகள் மற்றும் கோப்புகள் அவரது சொத்துக்கள் தொடர்பானவை. அவை தற்போது வழக்கறிஞர் டேரன் இண்டிக் மற்றும் கணக்காளர் ரிச்சர்ட் கான் ஆகியோரால் நிருவகிக்கப்படுகின்றன.[6]

2025 நவம்பரில், அமெரிக்க பிரதிநிதிகள் சபை எப்ஸ்டீன் கோப்புகள் வெளியிடுதல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்றியது. அதை அமெரிக்க மூப்பவை ஒருமனதாக அங்கீகரித்தது. மறுநாள் ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் அதற்கான மசோதாவில் கையெழுத்திட்டார். அடுத்த மாதம், அமெரிக்க நீதித்துறை ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான கோப்புகளை வெளியிட்டது, இது இரு கட்சிகள் சார்ந்த விமர்சனங்களுக்கு காரணமாயிற்று.[7] முன்னதாக 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போது டிரம்ப் கோப்புகளை வெளியிடும் யோசனையை முன்வைத்தார்.[8] இருப்பினும் பின்னர் கோப்புகளைப் பற்றிய சர்ச்சைகள் ஜனநாயகக் கட்சியினரால் புனையப்பட்டவை என்று அவர் கூறினார்.

2026 சனவரி 30 அன்று கூடுதலாக 30 இலட்சம் பக்கங்கள் வெளியிடப்பட்டன, அவற்றில் 2,000 காணொளிகளும், 180,000 படங்களும் அடங்கும்.[7] நீதித்துறை மொத்தம் 60 இலட்சம் பக்கங்கள் வெளியிடப்பட வேண்டிய கோப்புகளாக இருக்கலாம் என்று ஒப்புக்கொண்டாலும்,[9] சனவரி 30 அன்றைய வெளியீடு இறுதியானதாக இருக்கும் என்றும், அது தன் சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றியதாகவும் கூறியது.[10][11] வெளியிடப்பட்ட கோப்புகளில் பல பிரபலங்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததால், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து அதிக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.[12]

பின்னணி

[தொகு]
2013 இல் ஜெஃப்ரி எப்ஸ்டீன்

1996 ஆம் ஆண்டில், மரியா ஃபார்மர் என்பவர் வயது குறைந்த தன் உடன்பிறப்புகளின் நிருவாண ஒளிப்படங்களை எப்ஸ்டீன் திருடியதாக காவல் துறையில் புகார் அளித்தார், இருப்பினும் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. ஒரு பெண் தன் 14 வயது வளர்ப்பு மகளை எப்ஸ்டீனின் மாளிகைக்கு அழைத்துச் சென்று, எப்ஸ்டீனை ஆடைகளை அவிழ்த்து உடல்பிடித்துவிட (மசாஜ்) பணம் கொடுத்ததாக புளோரிடாவின் பாம் பீச் காவல் துறையினரிடம் 2005 ஆம் ஆண்டில், புகார் அளித்தார்.[13] விசாரணையைத் தொடர்ந்து, எப்ஸ்டீன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.[14] அதன்பிறகு எப்ஸ்டீன், அரசு வழக்கறிஞர்களுடன் ஒரு குற்ற ஒப்புதல் ஒப்பந்தத்தை (plea deal) மேற்கொண்டார்.[15] குற்ற ஒப்புதல் ஒப்பந்தத்தின் விளைவாக அவர் கடுமையான சிறைத்தண்டனையிலிருந்து தப்பினார். 2019 இல் பாலியல் தொழிலுக்காகக் குறைந்த வயதுடைய சிறுமிகளைக் கொண்ட ஒரு வலைப்பிண்ணலை நடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.[16] விசாரணைக்கு காத்திருந்த காலத்தில் சிறையில் இறந்தார். அவரது மரணம் தற்கொலை என்று அறிவிக்கப்பட்டது.

அரசியல்வாதிகள், பிரபலங்கள் போன்ற உயரடுக்கு மனிதர்கள் கொண்ட சமூக வட்டத்தை எப்ஸ்டீன் வளர்த்திருந்தார்.[3] இது எப்ஸ்டீன் இளம் பெண்களை பாலியல் தேவைக்கு கடத்திய வாடிக்கையாளர்களின் பட்டியலை வைத்திருந்தார் எனவும், அந்தப் பிரபலங்களை மிரட்ட அதைப் பயன்படுத்தினார் என்றும், எனவே அவர்களால் எப்ஸ்டீன் கொல்லப்பட்டார் என்ற சதி கோட்பாடு உருவானது; இந்தக் கோட்பாடுகள் 2019 ஆம் ஆண்டு அவரது மரணத்திற்குப் பிறகு பரவலாகப் பரவியது. இதில் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட்டுள்ளதாக [17] 2025 இல் மீண்டும் பரப்பபட்டது.[18][19]

உள்ளடக்கம்

[தொகு]

2007 வரைவு குற்றப்பத்திரிகை

[தொகு]

2006 ஆம் ஆண்டு, எப்ஸ்டீன் தனது புளோரிடா வீட்டில் சிறுமிகளிடம் பணம் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, எஃப்.பி.ஐ அவரை விசாரிக்கத் தொடங்கியது. 2007 ஆம் ஆண்டில், எப்ஸ்டீன் மற்றும் அவரது இரண்டு ஊழியர்களுக்கு எதிராக சிறுமிகளை கவர்ந்திழுத்தல், பாலியலுக்கு பயன்படுத்ததுல் ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட 32 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய வரைவு குற்றப்பத்திரிகையை மத்திய அரசு வழக்கறிஞர்கள் தயாரித்தனர்.[20][21] இறுதியில், அமெரிக்க வழக்கறிஞர் அலெக்சாண்டர் அகோஸ்டா, எப்ஸ்டீன் மீது வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்க்க அனுமதிக்கும் ஒரு குற்ற ஒப்புதல் ஒப்பந்தத்தை மேற்கொண்டார்; அதன்படி 18 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் பாலியல் சேவையை நாடியதாக அரசின் குற்றச்சாட்டை எப்ஸ்டீன் ஒப்புக்கொண்டார். மேலும் அவருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது ஊழியர்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை.[21]

கூட்டுச் சதிகாரர்கள் என்று கூறப்படுபவர்கள் குறித்த 2019 விசாரணை ஆவணங்கள்

[தொகு]

2019 ஆம் ஆண்டு எப்ஸ்டீன் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே, கிஸ்லைன் மேக்ஸ்வெல் மற்றும் 9 சக சதிகாரர்களை எஃப்.பி.ஐ முகவர்கள் தொடர்புகொண்டு அவர்களுக்கு கிராண்ட் ஜூரி சம்மன்களை வழங்குவது குறித்து விவாதித்ததாக 2019 ஆம் ஆண்டு மின்னஞ்சல்கள் காட்டுகின்றன. இந்த மின்னஞ்சல்களில் பெரும்பாலான சக சதிகாரர்களின் பெயர்கள் குறிப்பிடவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் எந்த நகரம் அல்லது மாநிலத்தில் உள்ளனர் என்பதைக் குறிப்பிடுகின்றன. ஒரு எஃப்.பி.ஐ முகவரின் மின்னஞ்சலில் "மூவருக்கு புளோரிடாவில் வைத்து [கிராண்ட் ஜூரி] சம்மன்களை வழங்கியுள்ளனர்; பாஸ்டனில் ஒருவர், நியூயார்க் நகரத்தில் ஒருவர், சி.டி.யில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டு சம்மன்கள் வழங்கப்பட்டன" என்று குறிப்பிட்டார்.[22]

நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் உள்ள கூட்டாட்சி வழக்கறிஞர்கள், "ஜெஃப்ரி எப்ஸ்டீனின் சாத்தியமான சக-சதிகாரர்கள் மீதான விசாரணை" என்ற 86 பக்க குறிப்பாணையை தயாரித்தனர். இது 2019 திசம்பர் அன்று அமெரிக்க வழக்கறிஞர் ஜெஃப்ரி பெர்மனுக்கு அனுப்பப்பட்டது. இந்த குறிப்பாணையில், எப்ஸ்டீனால் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக புகாரளித்த 24 பெண்களின் அறிக்கைகளும், எப்ஸ்டீனால் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக புகாரளித்த 14 பெண்களின் அறிக்கைகளும் உள்ளன. 2011 அல்லது 2012 ஆம் ஆண்டுகளில் இரண்டு ஆண்களுக்கு உடல்பிடித்துவிட (மசாஜ்) எப்ஸ்டீன் தன்னிடம் கூறியதாகவும், ஆண்களில் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், மற்றொரு ஆண் "தனது பிறப்புறுப்புகளைத் தொடும்படி கட்டாயப்படுத்தி பின்னர் [அவளை] பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்" ஒரு பெண் வழக்கறிஞர்களிடம் கூறினார். அந்த ஆண்கள் விசாரிக்கப்பட்டனரா இல்லையா என்பது குறித்து எஃப்.பி.ஐ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.[23][24]

விசாரணை ஆவணங்கள்

[தொகு]

எப்ஸ்டீனின் புளோரிடா பண்ணையில் ஒரு ஊழியருடன் எஃ.பி.ஐ நடத்திய நேர்காணல் குறிப்புகள் கோப்புகளில் இருந்தன. அதில் அவர் எப்ஸ்டீனின் படுக்கையறையில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை அப்புறப்படுத்துவது, எப்ஸ்டீனின் மெத்தைகளுக்கு இடையில் துப்பாக்கியை வைப்பது போன்ற பணிகளைச் செய்ததை விவரித்தார்.[21] 2007 ஆம் ஆண்டில், எப்ஸ்டீன் ஒரு முறை ராயல் பாம் பீச் உயர்நிலைப் பள்ளியில் ஒரு பள்ளி நாடகத்தில் தனது நடிப்பை நினைவுகூரும் வகையில் பூக்களை வாங்கி வழங்கச் சொன்னதாகவும் அந்த ஊழியர் எஃப்.பி.ஐ இடம் கூறினார்.[21]

ஒரு ஆவணம் எப்ஸ்டீனின் நெருக்கமான உள் வட்டத்தின் உள்ளவர்கள் குறித்து விவரித்தது, அதில் மேக்ஸ்வெல், அவரது வழக்கறிஞர் டேரன் இண்டிக், அவரது கணக்காளர் ரிச்சர்ட் கான் ஆகியோர் அடங்குவர்.[25] தேதி இல்லாத குறிப்பில், எப்ஸ்டீனுடன் நீண்டகால தொடர்புகளைக் கொண்டவராக பிரெஞ்சு மாடல் முகவரான ஜீன்-லூக் புரூனலைக் குறித்தது. அவர் பிரான்சில் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, 2022 இல் பிரெஞ்சு சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.[26] இந்த ஆவணம் எப்ஸ்டீனின் தனிப்பட்ட சமையல்காரர், விமானிகள், மாடல் ஸ்கவுட் பீட்டர் லிஸ்டர்மேன் உள்ளிட்ட பிற நெருங்கிய கூட்டாளிகளை பட்டியலிட்டது.[26] இது எப்ஸ்டீனை பண மேலாளராகப் பணியமர்த்திய பில்லியனர் வணிக அதிபரான லெஸ் வெக்ஸ்னரையும் குறிப்பிட்டுள்ளது. மேலும் 2007 இல் எப்ஸ்டீனுடனான உறவை அவர் துண்டித்ததாகக் கூறினார்.[26] வெளியிடப்பட்ட ஆவணங்கள் முழுவதும் பெயர்கள், விவரங்கள் போன்றவற்றில் கடுமையான ஆனால் சீரற்ற திருத்தங்கள் உள்ளன என நீதித்துறையை பாதிக்கப்பட்டவர்களும் வழக்கறிஞர்களும் விமர்சித்தனர்.[26]

சமூக தொடர்புகளும் சந்திப்புகளும்

[தொகு]

இந்த ஆவணங்கள் பல முக்கிய நபர்களுடனான எப்ஸ்டீனின் தொடர்புகளை விரிவாகக் கூறியது.[21][25][27][28][29] 2008 ஆம் ஆண்டில் பாலியல் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்ட பிறகும், சக்திவாய்ந்தவர்களுடன் எப்ஸ்டீனின் உறவு எவ்வாறு நீடித்தது என்பதை ஆவணங்கள் மேலும் விளக்குகின்றன. சிலர் அவருடனான தொடர்புகளை பல ஆண்டுகளாக மறுத்துவந்ததற்கு முரணாக இது உள்ளது குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.[30][31]

எப்ஸ்டீனின் மரணம்

[தொகு]

வெளியிடப்பட்ட கோப்புகளில் எப்ஸ்டீனின் மரணம் தொடர்பாக புலனாய்வாளர்கள் தங்களுக்குள் அனுப்பிய மின்னஞ்சல்களும் அடங்கும். அதில் அவரது இறுதி தகவல் தொடர்பு விவரங்கள் தற்கொலைக் குறிப்பாகத் தெரியவில்லை என்ற புலனாய்வாளரின் அவதானிப்பும் அடங்கும்.[32] பல விசாரணைகளில் எப்ஸ்டீனின் மரணம் தற்கொலை என்று கண்டறியப்பட்டுள்ளது.[32] எப்ஸ்டீனின் உடல் கொண்டுசெல்லப்பட்டபோது பெருநகர சீர்திருத்த மையத்திற்கு (சிறைக்கு) வெளியே கூடியிருந்த ஊடகங்களைத் தவிர்க்க சிறை ஊழியர்கள் பயன்படுத்திய ஒரு தந்திரத்தையும் இப்பதிவுகள் விவரித்தன: ஊழியர்கள் பெட்டிகளையும், தாள்களையும் பயன்படுத்தி ஒரு உடல் போலத் ஒரு தோன்றத்தை உருவாக்கி, தலைமை மருத்துவ பரிசோதகர் அலுவலகத்திற்குச் சொந்தமானது என்று குறிப்பிடப்பட்ட ஒரு வெள்ளை வேனில் ஏற்றினர்.[32] எப்ஸ்டீனின் உண்மையான உடல் ஒரு கருப்பு வாகனத்தில் ஏற்றப்பட்டது. அதை அறியாமல், சிறைச்சாலையை விட்டு வெளியேறிய வெள்ளை வேனை செய்தியாளர்கள் பின்தொடர்ந்தனர். உண்மையில் உடல் ஏற்றப்பட்ட கருப்பு வாகனத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று நேர்காணல் குறிப்புகள் தெரிவிக்கின்றன.[32]

சொத்துப் பகிர்வு

[தொகு]

எப்ஸ்டீன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அறக்கட்டளை குறித்த 32 பக்க ஆவணத்தில் கையெழுத்திட்டார். இந்த ஆவணத்தில் அவரது $600 மில்லியன் சொத்துக்களில் 40 பயனாளிகள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர் தன் காதலியான பெலாரஷ்ய பல் மருத்துவர் கரினா ஷுலியாக்கிற்கு $100 மில்லியனை உரிமையாக்கினார். அவர் தன் தனிப்பட்ட வழக்கறிஞர் டேரன் இண்டிகேவுக்கு $50 மில்லியனையும், அவரது கணக்காளர் ரிச்சர்ட் கானுக்கு $25 மில்லியனையும் உரிமையாக்கினார். எப்ஸ்டீனின் சொத்துக்களின் இணை நிர்வாகிகளாக இண்டிகே, காஹ்ன் ஆகியோரை நியமித்தார். மேலும் அவர் கிஸ்லைன் மேக்ஸ்வெல் மற்றும் அவரது சகோதரர் மார்க் எப்ஸ்டீனுக்கு தலா $10 மில்லியனையும், ஹார்வர்ட் கணிதப் பேராசிரியர் மார்ட்டின் நோவாக்கிற்கு $5 மில்லியனையும் கொடுத்துச் சென்றார். வரிகளும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் செலுத்துவதியதாலும் சொத்து சுருங்கிவிட்டதால், பயனாளிகள் எவ்வளவு பெற்றனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒரு பயனாளியான மார்க் எப்ஸ்டீன், எஸ்டேட்டின் பயனாளியாக குறிப்பிடப்பட்டது தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "The Epstein Files: How the saga unfolded within Trump's administration" (in en). The Independent. July 17, 2025. https://www.independent.co.uk/news/world/americas/us-politics/epstein-files-trump-bondi-loomer-b2789668.html. 
  2. 2.0 2.1 "What to know about the dismissal of the Epstein files by Trump's Justice Department" (in en-us). July 17, 2025. https://www.pbs.org/newshour/politics/what-to-know-about-the-dismissal-of-the-epstein-files-by-trumps-justice-department. 
  3. 3.0 3.1 "Jeffrey Epstein list: Who is named in court filings?" (in en-GB). BBC News. January 2, 2024 இம் மூலத்தில் இருந்து July 13, 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250713195321/https://www.bbc.com/news/world-us-canada-67861498. பார்த்த நாள்: July 15, 2025. 
  4. Steedman, Elissa (June 6, 2025). "Elon Musk says Donald Trump is in the Epstein files — here's the background" (in en-AU). ABC News இம் மூலத்தில் இருந்து July 9, 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250709213532/https://www.abc.net.au/news/2025-06-06/what-are-the-epstein-files-trump-musk-fight/105384646. பார்த்த நாள்: July 14, 2025. 
  5. Baio, Ariana (February 28, 2025). "Epstein files: Names in disgraced financier's contact book released by Pam Bondi" (in en). The Independent இம் மூலத்தில் இருந்து June 17, 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250617183100/https://www.independent.co.uk/news/world/americas/epstein-files-pam-bondi-names-list-b2706666.html. பார்த்த நாள்: July 14, 2025. 
  6. Baxter, Brian (February 4, 2026). "Epstein Estate's Co-Executors to Testify Before House Panel". Bloomberg Law.
  7. 7.0 7.1 "Office of Public Affairs | Department of Justice Publishes 3.5 Million Responsive Pages in Compliance with the Epstein Files Transparency Act". United States Department of Justice (in ஆங்கிலம்). January 30, 2026. Retrieved January 30, 2026.
  8. "What Trump has said about Epstein over the years, including on 2024 campaign trail". ABC7 San Francisco (in ஆங்கிலம்). July 16, 2025. Retrieved September 12, 2025.
  9. "DOJ announces full release of Epstein files". January 30, 2026. https://www.politico.com/news/2026/01/30/epstein-drop-live-00757275. 
  10. "Trump's Justice Department releases final cache of Jeffrey Epstein files". January 30, 2026. https://www.reuters.com/world/us/trumps-justice-department-releases-new-cache-jeffrey-epstein-files-2026-01-30/. 
  11. "Notable names in newly released Epstein file dump" (in en-IN). January 31, 2026. https://www.thehindu.com/news/international/trump-elon-musk-bill-gates-new-epstein-file-dump/article70572956.ece. 
  12. "British and Norwegian Royal Families Under Pressure Over Epstein Files". https://www.nytimes.com/2026/02/02/world/europe/epstein-norway-britain-princess-fergie-emails.html. 
  13. Weiss, Philip (December 8, 2007). "The Fantasist". New York (magazine). https://nymag.com/news/features/41826/. பார்த்த நாள்: November 7, 2016. 
  14. "Indictment: Billionaire Solicited 3 Times". July 1, 2008. Archived from the original on June 14, 2021. Retrieved April 9, 2021.
  15. North, Anna (July 31, 2019). "Alan Dershowitz helped sex offender Jeffrey Epstein get a plea deal. Now he's tweeting about age of consent laws". Vox. Archived from the original on August 21, 2019. Retrieved August 21, 2019.
  16. "Billionaire sex offender Jeffrey Epstein charged with sex trafficking". The Jerusalem Post. July 7, 2019. Archived from the original on July 10, 2019. Retrieved July 17, 2019.
  17. "Trump claims not to be following Maxwell case despite long ties to Epstein". CNN. July 23, 2020. https://edition.cnn.com/2020/07/23/politics/donald-trump-ghislaine-maxwell-jeffrey-epstein-history. 
  18. "Rightwing influencers indignant over FBI claim that Jeffrey Epstein's client list doesn't exist". தி கார்டியன். July 8, 2025. https://www.theguardian.com/us-news/2025/jul/08/rightwing-jeffrey-epstein-client-list. 
  19. "Former Trump lawyer claims he knows Epstein client list names: 'But I'm bound by confidentiality'". The Independent. July 7, 2025. https://www.independent.co.uk/news/world/americas/us-politics/dershowitz-epstein-client-list-trump-b2786911.html. 
  20. Barret, Devlin (January 30, 2025). "Draft Epstein Indictment Accused Him of Crimes Against More Than a Dozen Girls". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2026/01/30/us/politics/epstein-2007-draft-indictment.html?unlocked_article_code=1.KlA.bEPj.VcxVAIAjWxkl&smid=url-share. 
  21. 21.0 21.1 21.2 21.3 21.4 Sisak, Michael R. (January 31, 2026). "Epstein files lead to resignation in Slovakia and calls in Britain for former prince to cooperate". அசோசியேட்டட் பிரெசு. https://apnews.com/article/epstein-justice-department-trump-musk-andrew-tisch-d5dfbb26b93c46a4d6ab9ecf4eb3d3b1. 
  22. Spargo, Chris. "FBI Identified 10 Alleged Co-Conspirators of Jeffrey Epstein During 2019 Sex Trafficking Trial". People (magazine). Retrieved February 8, 2026.
  23. Healy, Claire; Brown, Julie K (February 7, 2026). "Who were the other men in the Epstein files? This is the FBI’s own list". Miami Herald. https://www.miamiherald.com/news/local/crime/article314609810.html. 
  24. Makortoff, Kalyeena (February 5, 2026). "Rape allegation against ex-Barclays CEO Jes Staley was raised in US Epstein investigation". தி கார்டியன். https://www.theguardian.com/us-news/2026/feb/05/jes-staley-barclays-rape-allegation-us-prosecutors-epstein. 
  25. 25.0 25.1 Ahn, Ashley (January 30, 2026). "Here's What to Know About the Millions of Pages of Epstein Documents". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2026/01/30/us/what-to-know-epstein-files.html. 
  26. 26.0 26.1 26.2 26.3 Owermohle, Sarah (January 31, 2026). "Diagram shows parts of Epstein's inner circle but redacts some close associates". CNN. https://www.cnn.com/2026/01/31/politics/jeffrey-epstein-files-release-doj. 
  27. Tucker, Eric; Sisak, Michael R. (January 30, 2026). "Justice Department releases largest batch yet of Epstein documents, says it totals 3 million pages" (in en). அசோசியேட்டட் பிரெசு. https://apnews.com/article/epstein-files-justice-department-trump-ed743598c320b94bd9d91631618678d9. 
  28. "New Epstein Files Name Elon Musk, Bill Gates and Other Powerful Men" (in en-US). த நியூயார்க் டைம்ஸ். January 31, 2026. https://www.nytimes.com/2026/01/31/us/epstein-trump-gates-musk-tisch-andrew.html. 
  29. "Millions of Jeffrey Epstein files released by US justice department" (in en-GB). BBC News. January 31, 2026. https://www.bbc.com/news/articles/cevnmxyy4wjo. 
  30. Confessore, Nicholas (January 31, 2026). "They Said They Weren't Close to Epstein. New Documents Show Otherwise.". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2026/01/31/us/epstein-powerful-men.html. 
  31. McKelvie, Geraldine (January 31, 2026). "What have we learned from the newly released Epstein files?". தி கார்டியன். https://www.theguardian.com/us-news/2026/jan/31/epstein-files-what-have-we-learned-prince-andrew-peter-mandelson-elon-musk-donald-trump. 
  32. 32.0 32.1 32.2 32.3 Whitehurst, Lindsay (January 30, 2026). "Huge cache of Epstein documents includes emails financier exchanged with wealthy and powerful". ABC News. https://abcnews.go.com/US/wireStory/huge-cache-epstein-documents-includes-emails-financier-exchanged-129722437. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"To access all files produced, visit: https://www.justice.gov/epstein"
searchable repository of 20,000 documents, released by US House Oversight Committee
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்ஸ்டீன்_கோப்புகள்&oldid=4481169" இலிருந்து மீள்விக்கப்பட்டது