எப்பொழுது அவர்களுக்கு நீதி கிடைக்கும்:நல்லிணக்க ஆணைக்குழுவின் தோல்விகள் (அறிக்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எப்பொழுது அவர்களுக்கு நீதி கிடைக்கும்: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தோல்விகள் ( When will they get justice? Failures of Sri Lanka's Lessons Learnt And Reconcillation Commission) என்பது செப்டம்பர் 7, 2011 அன்று அனைத்துலக மன்னிப்பு அவை வெளியிட்ட அறிக்கை ஆகும். இந்த அறிக்கை 69 பக்கங்களை உடையது. இது தொடர்பான செய்திகள் பிபிசி, ராய்ட்டர்சு, எ.எப்.பி உட்பட்ட பல அனைத்துலக ஊடகங்களிலும் வெளிவந்துருந்தன.

உள்ளக விசாரணைக்கும் இணக்கப்பாட்டுக்கும் என்று கூறி இலங்கை அரசு நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எல்லா நிலைகளிலும் அடிப்படைக் குறைபாடுகளை உடையது என்றும், ஆணைக்குழு செப்டம்பர் 2011 வெளியிட்ட அறிக்கையில் பொறுப்புடைமை தொடர்பாக ஒரு பரிந்துரையத் தானும் முன்வைக்கவில்லை என்றும் இந்த அறிக்கை விமர்சித்தது.[1] காலம் காலமாக இலங்கை அரசுகள் நியமித்த எந்தவொரு ஆணைக்குழுதானும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டி, இலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு ஏற்ப ஒரு சுதந்திர அனைத்துலக விசாரணை தேவை என்று இந்த அறிக்கை கோருகிறது. இந்தக் கோரிக்கையை செப்டம்பரில் கூடவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் அவைக்கு முன்வைக்கிறது.

குறிப்பான குற்றச்சாட்டுக்கள்[தொகு]

  • படைத்துறை, துணைப் படைகள், விடுதலைப் புலிகள் யார் எனினும் குற்றவாளிகளை அடையாளைப்படுத்தும் வகையில் சாட்சிகளை விசாரிக்கவில்லை. குறிப்பாக படைத்துறை குற்றம்சாட்டப்பட்டபோது இவ்வாறு விசாரிக்கவில்லை.
  • சாட்சிகளைப் தாக்குதல்களில் பழிவாங்கல்களில் இருந்து பாதுகாக்கா எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை.
  • படைத்துறை அல்லது துணைப்படைகளோ செய்தாக செய்யப்படும் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பற்றி அரசையோ, அரசு சார்பான சாட்சிகளையோ முறையாக விசாரிக்கவில்லை.
  • பொறுப்பானவர்களை நீதிக்கு முன் கொண்டுவரும்படி இதுவரை ஒரு பரிந்துரைதானும் முன்வைக்கவில்லை.

[2]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The LLRC published an interim report in September 2010, which did not contain any recommendations aimed at achieving accountability for past human rights abuses. It will submit its final report in November 2011". Archived from the original on 2011-09-10. பார்க்கப்பட்ட நாள் 2011-09-08.
  2. "அறிக்கை, பக்கம் 7" (PDF). Archived from the original (PDF) on 2011-09-10. பார்க்கப்பட்ட நாள் 2011-09-08.

வெளி இணைப்புகள்[தொகு]