எப்பிகிராபியா செய்லானிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எப்பிகிராபியா செய்லானிக்கா  
சுருக்கமான பெயர்(கள்) Epigr. Zeylan.
துறை தொல்லியல்
மொழி ஆங்கிலம்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் தொல்லியல் திணைக்களம் (இலங்கை)
வரலாறு 1904-தற்காலம்
வெளியீட்டு இடைவெளி: ஒழுங்கில்லை

எப்பிகிராபியா செய்லானிக்கா (Epigraphia Zeylanica) என்பது, ஒழுங்கற்ற கால இடைவெளிகளில் வெளியிடப்படும், பண்டைய இலங்கையின் கல்வெட்டுக்கள், பிற பதிவுகள் தொடர்பான ஒரு தொடர் வெளியீடு ஆகும்.[1] இது ஆங்கில மொழியில் வெளிவருகின்றது. 1904ல் தொடங்கப் பட்ட இந்த வெளியீட்டில் கல்வெட்டுக்கள் தொடர்பிலான தனிக் கட்டுரைகள், குறிப்புக்கள் போன்றவற்றுடன் ஒரே நூலாசிரியரின் நூல்களும் உள்ளடக்கங்களாக அமைந்தன. 20 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் பண்டைக்கால வரலாற்றுக்கும், பழங்காலக் கல்வெட்டுப் பதிவுகளுக்குமான ஒரு முக்கிய மூலமாகச் செயற்பட்டது. 2001 ஆம் ஆண்டு வரை இதன் 8 தொகுதிகள் வெளிவந்துள்ளன.

வெளியீட்டு வரலாறு[தொகு]

  1. தொகுதி 1ம் 2ம் - தொகுப்பாசிரியர்: டொன் மார்ட்டினோ டெ சில்வா விக்கிரமசிங்க.
  2. தொகுதி 3 (1928 - 1933) - தொகுப்பாசிரியர்: சேனரத் பரணவிதான.[2] 1933ல் வெளியிடப்பட்டது.[3]
  3. தொகுதி 4 (1934 - 1941) - தொகுப்பாசிரியர்: சேனரத் பரணவிதானவும் அம்பிரி வில்லியம் கொரிங்ட்டனும். 1943ல் வெளியிடப்பட்டது.
  4. தொகுதி 5 - பகுதி 1 - தொகுப்பாசிரியர்: சேனரத் பரணவிதான.[4] 1955ல் வெளியானது.
  5. தொகுதி 5 - பகுதி 2 - தொகுப்பாசிரியர்கள்: சேனரத் பரணவிதானவும் சி. இ. கொடபும்புரவும்.[5] 1963ல் வெளியானது.
  6. தொகுதி 5 - பகுதி 3 - தொகுப்பாசிரியர்கள்: சேனரத் பரணவிதானவும் சி. இ. கொடபும்புரவும். 1965ல் வெளியானது.
  7. தொகுதி 6 - இதுவும் பல பகுதிகளாக வெளியானது. தொகுப்பாசிரியர்: சேனரத் பரணவிதான. முதல் பகுதி 1973ல் வெளியானது.
  8. தொகுதி 7 - தொகுப்பாசிரியர்: சத்தாமங்கள கருணாரத்தின. 1984ல் வெளியனது.
  9. தொகுதி 8 - ஒரு ஆசிரியரின் நூல். மாலினி தயாஸ் எழுதிய பிராமிக் கல்வெட்டுக்களின்படி இலங்கையில் பௌத்த துறவி மடங்களின் வளர்ச்சி[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Samaraweera, Vijaya (1987). "572: Epigraphica Zeylanica, being lithic and other inscriptions of Ceylon.". Sri Lanka. World bibliographical series. 20. Clio Press. பக். 152. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780903450331. "This periodical presents to the reader inscriptions - an invaluable source for the reconstruction of Sri Lanka's past - as they are discovered, transliterated, and translated by the staff of the Archaeological Survey. Thus far, five complete volumes have been published and the sixth volume's first number was issued in 1973." 
  2. Paranavitana (1933). ""Preface"". Epigraphia Zeylanica. 3. பக். iii.. 
  3. Blagden, C. O. (July 1935). "Epigraphia Zeylanica, Being lithic and Other Inscriptions of Ceylon by S. Paranavitana". The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland (3): 550–551. 
  4. Godakumbura, C. E. (October 1956). "Epigraphia Zeylanica. Vol. V, Part I by S. Paranavitana". The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland (3/4): 237–241. 
  5. Reynolds, C. H. B. (1964). "Epigraphia Zeylanica, Being Lithic and Other Inscriptions of Ceylon. Vol. V, Pt. 2 by Ceylon. Archaeological Survey". Bulletin of the School of Oriental and African Studies, University of London 27 (3): 635. doi:10.1017/s0041977x00118531. 
  6. Ḍayas, Mālinī (2001). The growth of Buddhist monastic institutions in Sri Lanka from Brāhmī inscriptions. Epigraphia Zeylanica. VIII. Colombo: Dept. of Archaeological Survey, Govt. of Sri Lanka. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789559264040. http://openlibrary.org/works/OL3431806W/The_growth_of_Buddhist_monastic_institutions_in_Sri_Lanka_from_Bra%CC%84hmi%CC%84_inscriptions. (ஆங்கில மொழியில்)