எபிரோன் ஆளுநரகம்
எபிரோன் ஆளுநரகம் | |
---|---|
ஆள்கூறுகள்: 31°30′N 35°06′E / 31.5°N 35.1°E | |
நாடு | பலத்தீன் |
எபிரோன் ஆளுநரகம் (Hebron Governorate, அரபு மொழி: محافظة الخليل Muḥāfaẓat al-Ḫalīl ; எபிரேயம்: נפת חברון Nafat Ħevron ) என்பது மேற்குக் கரையில் தெற்கில் உள்ள பாலஸ்தீனத்தின் நிர்வாக மாவட்டமாகும்.
ஆளுநரகத்தின் நிலப்பரப்பு 1,060 சதுர கிலோமீட்டர் ஆகும். 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பாலஸ்தீனிய புள்ளிவிவர பணியகத்தின் படி இதன் மக்கள் தொகை 1,004,510 ஆகும். இது பாலஸ்தீனிய பிரதேசங்களில் மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பில் 16 ஆளுநரகங்களில் மிகப் பெரிதானதாக இது உள்ளது. [1] எபிரோன் நகரம் ஆளுநரகத்தின் மாவட்ட தலைநகரம் அல்லது முஹ்பாஸா ஆகும். ஆளுநரகத்தின் ஆளுநராக ஹுசைன் அல்-அராஜ் உள்ளார். மேலும் இதன் மாவட்டத் தளபதியாக அப்தெல் பத்தா அல்-ஜுயிடி உள்ளார். [2]
வட்டாரங்கள்
[தொகு]எபிரோன் ஆளுநரகத்தில் மொத்தம் ஏழு மாநகரங்களும் பதினெட்டு நகரங்களும் உள்ளன. கீழே பட்டியலிடப்படாத 100 க்கும் மேற்பட்ட பெடோயின் கிராமங்கள் மற்றும் குடியேற்றங்களும் ஆளுநரகத்தில் உள்ளன. [1]
மாநகரங்கள்
[தொகு]- துரா
- ஹல்ஹுல்
- எபிரோன் (தலைநகரம்)
- யட்டா
- அட் தகிரியா
- அல்-சமௌ
நகராட்சிகள்
[தொகு]பாலஸ்தீனிய தேசிய அதிகாரசபையின் உள்ளூராட்சி அமைச்சகத்திலிருந்து பின்வரும் வட்டாரங்கள் நகராட்சி அந்தஸ்தைக் கொண்டுள்ளன.
|
|
கிராம சபைகள்
[தொகு]பின்வரும் பகுதிகள் 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளன.
|
|
அகதிகள் முகாம்கள்
[தொகு]- அல்-அரோப்
- அல்-பவ்வர்
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Hebron Governorate Statistical Yearbook No. 2, page 59,60. PCBS, November 2010
- ↑ Hébron