எபிடோசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எபிடோசைட்டின் ஒரு மாதிரி

எபிடோசைட்டு (Epidosite) என்பது எபிடோட்டு மற்றும் குவார்ட்சு கனிமங்கள் ஆகியனவற்றை உள்ளடக்கிய ஓர் அரிய உருமாறியப் பாறையாகும் [1]. கண்டத்திட்டு பெயர்ச்சியின் ஒரு பகுதியான எரிமலைப் பாறை மற்றும் அக்னிப்பாறைகள் மெதுவான நீர்வெப்பவுருமாற்றம் அல்லது சுண்ணாம்புப்படிவுப் பாறைத் துணுக்குகளின் பாறை உருமாற்றம் மூலமாக கடற்பாறைகளுக்கு அடியில் இப்பாரிய எபிடோசைட்டு எனப்படும் சல்பைடு தாது படிவுகள் உருவாகின்றன. எபிடோசைட்டுகள் கீழே உள்ள ஆழமான உலோக வளைவு மண்டலத்தையும் மற்றும் பக்கவாட்டிலுள்ள சல்பைடு படிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன [1][2]. இது சூடான கடல் நீரின் வெப்பச்சலனத்தால் கற்பாறைகள் உடைந்து உருவானதாகும், எபிடோசைட்டுக்கான மூலம்பொருளானது வண்டலாகவோ, உருகிய பாறைக் குழம்பாகவோ அமையலாம். பொதுவாக எப்பிடோ சைட்டுகள் சுண்ணாம்புக்கற்களுடன் சேர்ந்து காணப் படுகின்றன. சிலசமயங்களில் எப்பிடோசைட்டுப் பாறைகளை வெட்டிப் பின்னர் மெருகேற்றி ஆபரணங்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Banerjee, Neil R., et. al., Discovery of epidosites in a modern oceanic setting, the Tonga forearc, Geology, February, 2000 v. 28, no. 2, p. 151-154" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-03-03.
  2. Lori Bettison-Varga, Robert J. Varga and Peter Schiffman, Relation between ore-forming hydrothermal systems and extensional deformation in the Solea graben spreading center, Troodos ophiolite, Cyprus, Geology, 1992, v. 20 no. 11 p. 987-990
"https://ta.wikipedia.org/w/index.php?title=எபிடோசைட்டு&oldid=3545751" இலிருந்து மீள்விக்கப்பட்டது