எபிடாரஸ்
எபிடாரஸ் Ἐπίδαυρος | |
---|---|
அமைவிடம் | |
Location within the region | |
அரசாண்மை | |
நாடு: | கிரேக்கம் |
நிர்வாக வலயம்: | பெலொப்பொனேசியா |
மண்டல அலகு: | Argolis |
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1] | |
நகராட்சி | |
- மக்கள்தொகை: | 8,115 |
- பரப்பளவு: | 340.4 km2 (131 sq mi) |
- அடர்த்தி: | 24 /km2 (62 /sq mi) |
நிர்வாக அலகு | |
- மக்கள்தொகை: | 3,887 |
- பரப்பளவு: | 160.6 km2 (62 sq mi) |
- அடர்த்தி: | 24 /km2 (63 /sq mi) |
சமூகம் | |
- மக்கள்தொகை: | 1,932 |
Other | |
நேர வலயம்: | EET/EEST (UTC+2/3) |
அஞ்சல் குறியீடு: | 210 59 |
வாகன உரிமப் பட்டை: | AP |
எபிடாரஸ் (Epidaurus, கிரேக்கம்: Ἐπίδαυρος ) என்பது பண்டைய கிரேக்கத்தின், சரோனிக் வளைகுடாவின், ஆர்கோலிட் தீபகற்பத்தில் இருந்த பண்டைய சிறிய நகரம் ஆகும். தற்காலத்தில் இரண்டு நவீன நகரங்கள் எபிடாவ்ரோஸ் என்ற பெயரைக் கொண்டுள்ளன. அவை பலா எபிடாவ்ரோஸ் மற்றும் நியா எபிடாவ்ரோஸ் ஆகியவை ஆகும். 2010 முதல் ஆர்கோலிசின் பிராந்திய அலகின் ஒரு பகுதியாக எபிடாரஸ் நகராட்சி உள்ளது. நகராட்சியின் தலைமையகம் லிகோரியோ நகரப்பகுதியில் உள்ளது.[2]
வரலாறு
[தொகு]எபிடாரஸ் ஆர்கோசிலிருந்து சுயாட்சிபெற்றதாக இருந்தது. மேலும் இப்பகுதி உரோமர்களின் காலம் வரை ஆர்கோலிசில் சேர்க்கப்படவில்லை. அதன் துணைப் பிரதேசமாக எபிடாரியா என்ற சிறிய பிரதேசப்பகுதியாக இருந்தது. இது அர்கோலிட் எபிடாரசால் நிறுவப்பட்டது அல்லது பெயர் சூட்டப்பட்டது, மேலும் அப்பல்லோவின் மகன் அஸ்க்லெபியசின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.
அஸ்கெல்பியஸ் கோயில்
[தொகு]எபிடாரஸ் அதன் சிற்றாலயத்துக்கு மிகவும் பிரபலமானது. அது நகரத்திலிருந்து ஐந்து மைல் (8 கிமீ) தொலைவில் அமைந்துள்ளது. இதன் பழங்கால அரங்கம் தற்போது மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எபிடாரஸில் உள்ள அஸ்க்லெபியசின் வழிபாட்டு முறை கிமு 6 ஆம் நூற்றாண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலை உச்சியில் உள்ள அப்போலோ மலேடாசின் என்ற பழைய சிற்றாலயமானது போதுமான விசாலமாக இல்லை. இது பாரம்பரிய காலத்தில் உலகின் மிகவும் பிரபலமான குணமாக்கும் மையமாக இருந்தது, நோய்வாய்ப்பட்டவர்கள் இங்கு வந்தால் குணமடைவார்கள் என்ற நம்பிக்கையில் வந்தனர். நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்களுக்கான சரியான சிகிச்சையைக் கண்டறிய, அவர்கள் இங்கிருந்த பெரிய உறங்கும் கூடமான என்கோமெட்ரியாவில் ஒரு இரவு உறங்கவைக்கப்பர். அவர்களின் கனவில், அவர்களின் உடல்நலத்தை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும் என்று கடவுளே அவர்களுக்கு அறிவுறுத்துவார் எனப்பட்டது. கோயில் வளாகத்துக்குள் 160 விருந்தினர்கள் தங்க ஏதுவாக அறைகள் கொண்ட விருந்தினர் மாளிகை இருந்தது. அருகிலேயே கனிம நீரூற்றுகள் உள்ளன, அவை நோயைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
பழங்காலத்தின் மிக முக்கியமான குணமாக்கும் கடவுளான அஸ்க்லெபியசை வழிபடும் பக்தர்களால், கோயில் செழிப்படைந்தது. இதனால் கிமு 4 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளில் கோயில் கட்டிடங்களை விரிவுபடுத்துவதற்கும் புனரமைப்பதற்குமான தேர்ந்த கட்டுமானத் திட்டம் தொடங்கப்பட்டது. ஹெலனிஸ்டிக் காலம் முழுவதும் அதன் புகழும், செழிப்பும் தொடர்ந்து நீடித்தது. கிமு 146 இல் கொரிந்து அழிக்கப்பட்ட பிறகு, உரோமானிய தளபதியான லூசியஸ் மம்மியஸ் கோயிலுக்குச் சென்று இரண்டு காணிக்கைகளை செலுத்தினார். கிமு 87 இல், கோயில் உரோமானிய தளபதி சுல்லாவால் சூறையாடப்பட்டது. கிமு 74 இல், மார்கஸ் அன்டோனியஸ் கிரெடிகசின் தலைமையின் கீழ் ஒரு உரோமானிய காவற்படை நகரத்தில் நிறுவப்பட்டது. இதனால் இங்கு தானிய பற்றாக்குறை ஏற்பட்டது. இருப்பினும், கிமு 67 க்கு முன், கோயில் கடற்கொள்ளையர்களால் சூறையாடப்பட்டது. கி.பி 2 ஆம் நூற்றாண்டில் உரோமானியர்களின் கீழ் கோயில் ஒரு புதிய எழுச்சியைக் கண்டது. ஆனால் கி.பி 395 இல் கோத்துகள் கோயில் மீது திடீர்த் தாக்குதலில் நடத்தினர்.
கிறித்துவம் பரவிய பிறகு, ஆரக்கிள்கள் முக்கியத்துவத்தை இழந்த பிறகும், எபிடாரசில் இருந்த கோயில் 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிறிஸ்தவ குணப்படுத்தும் மையமாக அறியப்பட்டது.
மற்ற கட்டிடங்கள்
[தொகு]எபிடாரஸ் நகரம் சொந்தமாக ஒரு அரங்கைக் கொண்டிருந்தது. இது 1990 இல் அகழப்பட்டது. அது நன்கு பாதுகாக்கப்பட்டுவந்ததாகக் கண்டறியப்பட்டது. கிமு 4 ஆம் நூற்றாண்டில் இருந்து அது சுமார் 2000 இருக்கை வசதியைக் கொண்டிருந்தது. கிரேக்கம் முழுவதும் உள்ள 140 புராதன அரங்குகளை பாதுகாத்து மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இது புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.[3]
அரங்கம்
[தொகு]அஸ்க்லெபியனால் வந்த செழிப்பு, எபிடாரசு குடிமக்களின் தேவைக்கான கட்டடங்களை உருவாக்க உதவியது. அவற்றின் சமச்சீர்மை மற்றும் அழகைக் கண்டு கிரேக்கப் பயணி பௌசானியாசை மகிழ்வித்தது. இங்கு இருந்த மிகப்பெரிய அரங்கு, சடங்கிற்கான ஹெஸ்டியாடோரியன் ( விருந்து மண்டபம்), ஒரு மற்போர் அரங்கம் போன்றவை இன்று மீண்டும் வியத்தகு நிகழ்ச்சிகள் நடத்த பயன்படுத்தப்படுகிறது. எபிடாரசின் பண்டைய அரங்கம் கிமு 4 ஆம் நூற்றாண்டில் இளைய பாலிக்லீடோசால் வடிவமைக்கப்பட்டது. இதில் இருந்த 34 வரிசைகள் உரோமானிய காலத்தில் மேலும் 21 வரிசைகளாக விரிவுப்படுத்தப்பட்டது. கிரேக்க அரங்குகளின் வழக்கமான வடிவமைப்பு போல் (உரோமானிய திரையரங்குகளுக்கு மாறாக), நிகழ்த்து மேடைக்குப் பின்புறம் பசுமையான நிலப்பரப்பானது காட்சி திரையின் ஒருங்கிணைந்த பகுதியாகவும், மறைக்கப்படாததாகவும் இருக்கும். இந்த அரங்கில் 14,000 பேர் அமரும் வகையில் இருந்தது.
நகராட்சி
[தொகு]எபிடாவ்ரோஸ் நகராட்சியானது 2011 உள்ளாட்சி சீர்திருத்தத்தினால் பின்வரும் இரண்டு முன்னாள் நகராட்சிகளை இணைத்து அதன் மூலம் உருவாக்கப்பட்டது. முன்னாள் நகராட்சிகள் புதிய நகராட்சியின் அலகுகளாக மாறியது:[2]
- அஸ்க்லிபியோ
- எபிடாவ்ரோஸ்
நகராட்சி 340.442 கிமீ 2 , பரப்பளவைக் கொண்டுள்ளது. நகராட்சி அலகு 160.604 கிமீ 2 ஆகும்.[4]
காட்சியகம்
[தொகு]-
விளையாட்டரங்கம்
-
அபேடன்
-
ஓடியோன்
-
உரோமன் குளியலகம்
-
அஸ்க்லெபியஸ் சிலை
குறிப்புகள்
[தொகு]- ↑ Detailed census results 2011 (கிரேக்கம்)
- ↑ 2.0 2.1 "ΦΕΚ A 87/2010, Kallikratis reform law text". Government Gazette.
- ↑ Resurrecting the ancient little theater of Epidaurus https://www.ekathimerini.com/culture/1177098/resurrecting-the-ancient-little-theater-of-epidaurus/
- ↑ "Population & housing census 2001 (incl. area and average elevation)" (PDF). National Statistical Service of Greece. Archived from the original (PDF) on 2015-09-21.