எபிகிராபியா இண்டிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எபிகிராபியா இண்டிகா  
சுருக்கமான பெயர்(கள்) Epigr. Indica
துறை தொல்லியல், இந்தியவியல்
மொழி
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம்
வரலாறு 1888–1977

எபிகிராபியா இண்டிகா (Epigraphia Indica) 1882 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை இந்திய தொல்லியல் துறை வெளியிட்ட அலுவல்முறை வெளியீடாகும். முதல் தொகுதி 1882 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பர்கெஸ்ஸால் (James Burgess) திருத்தப்பட்டது. 1892 ஆம் ஆண்டு மற்றும் 1920 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இது Indian Antiquary (பொருள்: இந்திய தொல்லியல்) எனும் காலாண்டு பதிப்புடன் இணைப்பாக (Quarterly Supplement) வெளியிடப்பட்டது. [1]

ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு பகுதி வெளியிடப்பட்டது. இந்தப் பருவ இதழின் எட்டு காலாண்டு பகுதிகளை இணைத்து ஒரு தொகுதி (Volume) உருவாக்கப்பபட்டது. எனவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு தொகுதி நிறைவுறும். இந்தப் பருவ இதழின் சுமார் 43 தொகுதிகள் இதுவரை வெளிவந்துள்ளன. இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையின் (ASI) கல்வெட்டியல் (Epigraphy) கிளைக்கு தலைமை தாங்கிய அதிகாரிகளால் இவை திருத்தப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.

தொகுப்பாளர்கள்[தொகு]

  • ஜே. பர்கெஸ் : தொகுதி I (1882) & தொகுதி II (1894)
  • இ.குல்சு (E. Hultzsch) : Vol III (1894-95), Vol IV (1896-97), Vol V (1898-99), Vol VI (1900-01), Vol VII (1902-03), Vol VIII (1905-06 ), தொகுதி IX (1907–08)
  • ஸ்டென் கோனோவ் : தொகுதி X (1909-10), தொகுதி XI (1911-12), தொகுதி XII (1913-14), தொகுதி XIII (1915-16)
  • FW தாமஸ் : Vol XIV (1917-18), Vol XV (1919-20), Vol XVI (1921-22)
  • எச். கிருஷ்ண சாஸ்திரி : தொகுதி XVII (1923-24), Vol XVIII (1925-26), Vol XIX (1927-28)
  • ஹிரானந்த் சாஸ்திரி : தொகுதி XX (1929-30), தொகுதி XXI (1931-32)
  • NP சக்ரவர்த்தி : Vol XXII (1933-34), Vol XXIII (1935-36), Vol XXIV (1937-38), Vol XXV (1939-40), Vol XXVI (1941-42)
  • N. லட்சுமிநாராயண் ராவ் மற்றும் B. Ch. சாப்ரா : தொகுதி XXVII (1947–48)
  • டி.சி.சிர்கார் (DC Sircar) : Vol XXVIII (1949–50) - கூட்டாக B. Ch. சாப்ரா), தொகுதி XXX (1951–52) - என். லக்ஷ்மிநாராயண் ராவுடன் இணைந்து, தொகுதி XXXI(1955–56), தொகுதி XXXII(1957–58), தொகுதி XXXIII(1959–60), தொகுதி XXXIV(1960–61), தொகுதி XXXV (1962–63), தொகுதி XXXVI (1964–65)
  • ஜிஎஸ் கை : தொகுதி XXXVII (1966–67), தொகுதி XXXVIII, தொகுதி XXXIX, தொகுதி XL
  • கே.வி.ரமேஷ் : தொகுதி XLI (1975–76), தொகுதி XLII (1977–78)

மற்ற பங்களிப்பாளர்கள்[தொகு]

அரபு மற்றும் பாரசீக இணைப்பு[தொகு]

இந்திய தொல்லியல் அளவெட்டுத் துறை (ASI) 1907 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை அரபு மற்றும் பாரசீக இணைப்பை வெளியிட்டது. 1907 ஆம் ஆண்டு முதல் தொகுதி கல்கத்தா மதரஸாவின் இ. டெனிசன் ரோஸ் என்பவராலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகள் ஜோசப் ஹொரோவிட்சாலும் தொகுக்கப்பட்டன. அடுத்தடுத்த தொகுதிகள் குலாம் யஸ்தானி (1913-40), மௌலவி எம். அஷ்ரப் ஹுசைன் (1949-53) மற்றும் ZA தேசாய் (1953–77) ஆகியோரால் தொகுக்கப்பட்டுள்ளன. 1946 ஆம் ஆண்டு முதல், அராபிய மற்றும் பாரசீக கல்வெட்டுகளுக்கான உதவி கண்காணிப்பாளரால் இந்தத் தொகுதிகள் திருத்தப்பட்டு தொகுக்கப்பட்டு வருகின்றன. இது இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு பதவியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Temple, Richard Carnac. (1922) Fifty years of The Indian Antiquary. Mazgaon, Bombay: B. Miller, British India Press, pp. 3-4.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எபிகிராபியா_இண்டிகா&oldid=3427776" இலிருந்து மீள்விக்கப்பட்டது