உள்ளடக்கத்துக்குச் செல்

என் மகள் பயங்கரவாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என் மகள் பயங்கரவாதி
வகைஆவணப்படம்
இயக்கம்பீட் அர்னெஸ்டாட்
நாடுநார்வே
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்மோர்டன் டேய்
படப்பிடிப்பு தளங்கள்இலங்கை
ஓட்டம்60 நிமிடங்கள்

"என் மகள் பயங்கரவாதி" (My Daughter the Terrorist) என்பது 2007 ஆம் ஆண்டு வெளியான ஆவணப்படமாகும். 24 வயதுடைய தர்சிகா, புகழ்ச்சுடர் ஆகிய பெண் போராளிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயரடுக்கு படையில் கரும்புலிகளாக ஏழு ஆண்டுகள் அருகருகே வாழ்ந்து போராடியது பற்றியதாகும். இந்தப் பெண்கள் இலங்கைப் படையினால் தங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவங்களை விவரிக்கிறனர். அதுவே இவர்களை கெரில்லா இயக்கத்தில் சேர காரணமாயிற்று.[1][2]

தர்சிகாவின் தந்தை போரினால் இறந்துவிட்டார். போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தில் தனது குடும்பத்தை வாழ்விக்கப் போராடும் தாயாருடன் அவர் வாழ்ந்துவருகிறார்.[3] கத்தோலிக்க குடும்பத்தில் வளர்ந்த அவர், அருட்சகோதரியாக மாற விரும்பினார். ஆனால் பின்னர் தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார். புகழச்சுடர் வீட்டை இழந்து தனது குடும்பத்துடன் அகதி முகாமில் தங்கினார். இளம் வயதிலேயே அவர்கள் எதிர்கொண்ட கொடூரமான சூழலை விவரிக்கிறனர்.[4] தர்சிகாவின் தாய், மாவீரர் நாளின் போது தனது மகளையும் புகழ்ச்சுடரையும் சந்திக்க விரும்புகிறார். அதற்காக தெரியாத வீரரின் கல்லறையில் மலர்களை வைப்பதற்காக மட்டுமே வர விரும்புகிறார்.[3]

இந்த படத்தை பீட் அர்னெஸ்டாட் இயக்கி, மோர்டன் டே தயாரித்த இந்தத் திரைப்படம் 2017 ஆம் ஆண்டு மெசேஜ் டு மேன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த சர்வதேச முழு நீள ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றது.[1] இது 2008 ஆம் ஆண்டு 11வது ஐக்கிய நாடுகள் சங்க திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது [2] இது அமெரிக்கா, பெல்ஜியம், கனடா, இத்தாலி, உக்ரைன், போலந்து, போகோடா, நார்வே, தைவான் ஆகிய நாடுகளில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது.[1][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 "My Daughter the Terrorist". Women Make Movies. 2007. Retrieved 4 August 2017.
  2. 1 2 "My Daughter the Terrorist". 11th United Nations Film Festival. 2008. Retrieved 4 August 2017.
  3. 1 2 "My Daughter the Terrorist". Snitt Film Production. 2006. Retrieved 4 August 2017.
  4. ↑ Beate Arnestad (12 December 2009). "My Daughter the Terrorist". Amanpour. CNN. Archived from the original on 9 February 2010. Retrieved 13 September 2023.
  5. ↑ "Radio 4 Woman's Hour -My Daughter is a Terrorist". BBC. 11 August 2008. Retrieved 18 December 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_மகள்_பயங்கரவாதி&oldid=4489793" இலிருந்து மீள்விக்கப்பட்டது