என் கேள்விக்கு என்ன பதில்? – பகுதி 1 (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என் கேள்விக்கு என்ன பதில்? – பகுதி 1
நூல் பெயர்:என் கேள்விக்கு என்ன பதில்? – பகுதி 1
ஆசிரியர்(கள்):சுகி. சிவம்
வகை:வினா - விடை
துறை:சமயம்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:192
பதிப்பகர்:பதிப்பகம் சுகி புக்ஸ்,
ஜன்னி அடுக்ககம்
131/9 தி. தெ. கிருட்டிணன் (டிடிகே) சாலை
ஆழ்வார் பேட்டை,
சென்னை 600 018
பதிப்பு:மு.பதிப்பு திசம்பர் 2007
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

என் கேள்விக்கு என்ன பதில்? என்னும் நூல் சுகி. சிவம் என்பவர் சக்தி விகடன் இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றிய பொழுது, வாசகர் கேட்ட வினாக்களும் அவற்றிற்கு அவர் இறுத்த விடைகளும் இணைந்த தொகுப்பாகும். இந்நூலுக்கு குன்றக்குடி ஆதினத்தின் தலைவரான தவத்திரு பொன்னம்பல அடிகள் அணிந்துரை வழங்கியிருக்கிறார்.

உள்ளடக்கம்[தொகு]

இந்நூலில் ஆன்மீகம், சோதிடம், தன் முன்னேற்றம், யோகாசனம், உலக நடப்பு, நம்பிக்கைகள், விழுமியங்கள் ஆகியன உள்ளிட்ட பல்வேறு பொருள்களைப் பற்றிய வினாக்களும் விடைகளும் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுள் சமயம், நம்பிக்கை ஆகியவை பற்றிய வினாகளும் விடைகளும் அதிகளவில் இடம் பெற்றிருக்கின்றன.