என் இதயராணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் இதயராணி (En Idhaya Rani) எஸ். எஸ். விக்ரம் இயக்கத்தில், 1993 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சி. கட்டாணி தயாரிப்பில், எஸ். எஸ். விக்ரம் இசை அமைப்பில், 5 பிப்ரவரி 1993 ஆம் தேதி வெளியானது. ஆனந்த் பாபு, கீதாராணி, சந்திரசேகர், சார்லி, எஸ். எஸ். சந்திரன், டெல்லி கணேஷ், கோவை சரளா, எம். என். ராஜம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2][3][4]

நடிகர்கள்[தொகு]

ஆனந்த் பாபு, கீதாராணி, சந்திரசேகர், விஜி, சார்லி, எஸ். எஸ். சந்திரன், டெல்லி கணேஷ், கோவை சரளா, எம். என். ராஜம், ஷர்மிலி, டைப்பிஸ்ட் கோபு

கதைச்சுருக்கம்[தொகு]

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் செல்லும் வண்டியின் சக்கரம் பழுதடைவதிலிருந்து படம் துவங்குகிறது. வன அதிகாரி சேகர் (சந்திரசேகர்) வந்து உதவி செய்கிறார். அப்போது, அந்த பெண்களில் ஒருவளான கீதா மட்டும் தனியே விடப்படுகிறாள். அவளை பார்த்துக்கொள்ள இயலாத சேகர், ஓர் ஆசிரியை வீட்டில் விடுகிறார். சில நாட்களுக்கு பிறகு, கீதா காணாமல் போன விளம்பரத்தை சேகர் காணநேரிடுகிறது. கீதாவை அவள் குடும்பத்திடம் கொண்டு சேர்கிறார் சேகர். கீதாவின் மாமியார் (எம். என். ராஜம்) அவளை மிகவும் வெறுக்கிறார். மேலும், சேகரை திருமணம் செய்யச்சொல்லி வறுபுறுத்தி, திருமணமும் செய்துவைக்கிறார். வேலை பார்க்க காட்டிற்கு சேகர் சென்ற பின்னர், கீதா விபத்து ஒன்றில் சிக்கி மீண்டும் காணாமல் போகிறாள்.

அந்த வண்டியை ஓட்டியவர் சந்திரசேகர் (டெல்லி கணேஷ்) ஒரு மருத்துவர். அவர், கீதாவிற்கு அடைக்கலம் கொடுத்து, நோயை குணப்படுத்தி நல்ல பெண்ணாக மாற்றி, தன் இறந்த மகளின் நினைவாக கீதாவுக்கு ராணி என்று பெயர் வைத்து சொந்த மகளைப்போல் பார்த்துக்கொள்கிறார். அந்நிலையில், ராஜா (ஆனந்த் பாபு) ராணியை காதல் செய்ய, இருவருக்கும் சந்திரசேகர் முன்னிலையில் திருமணம் நடக்கிறது. பின்னர் ராஜாவும் ஒரு வன அதிகாரியாகிறான். சில மாதங்களில் அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது.

என்றாவது தன் கீதா தன்னை வந்தடைவாள் என்ற நம்பிக்கை கொண்ட சேகர், தனது பள்ளித் தோழி பானுவின் காதலை நிராகரிக்கிறான்.

ஒரு நாள், ராணி, அவளது குழந்தை, சந்திரசேகர் தொடர்வண்டியில் செல்லும் பொழுது, விபத்துக்குள்ளாகி பல பயணிகள் இறந்துவிடுகிறார்கள். அதில் ராணி காணாமல் போக, அவள் இறந்து விட்டதாக கருதுகிறார் சந்திரசேகர். பின்னர் என்னவானது என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு[தொகு]

இந்தத் திரைப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் எஸ். எஸ். விக்ரம். மேலும் பாடல்களின் வரிகளையும் அவர் எழுதினார்.

பாடல்களின் பட்டியல்[தொகு]

  1. ஹவுஸ்புல் ஹவுஸ்புல்
  2. காலை மலர்ந்தது
  3. இங்கே கற்ப பார்
  4. ஆயிரம் ரசிகர்கள்
  5. எத்தன கலர் டா மச்சி
  6. பாம்புக்கு பல்லுல நஞ்சு

மேற்கோள்கள்[தொகு]

  1. "http://www.woodsdeck.com". External link in |title= (உதவி)
  2. "http://www.gomolo.com". 2019-03-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-22 அன்று பார்க்கப்பட்டது. External link in |title= (உதவி)
  3. "http://www.jointscene.com". Archived from the original on 2011-08-17. 2019-03-22 அன்று பார்க்கப்பட்டது. External link in |title= (உதவி)CS1 maint: unfit url (link)
  4. "http://www.cinesouth.com". Archived from the original on 2004-11-15. 2019-03-22 அன்று பார்க்கப்பட்டது. External link in |title= (உதவி)CS1 maint: unfit url (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_இதயராணி&oldid=3659603" இருந்து மீள்விக்கப்பட்டது